எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 2 78

ரகு : (வசந்தின் தோளில் தட்டி) என்னடா சொல்லவே இல்ல பொண்ணு யாரு டா

குமார் : அது அவன் மாமா பொண்ணு டா பெயர்கூட தீபா. இன்னைக்கு தான் கோயில்ல வச்சு பேசி முடிச்சாங்க

வசந்த் : (கையால் அவன் கண்ணை மூடினான்)

பாலா : தோடா புது மாப்பிள்ளை வெட்கப்படுராரு

வினோத் : சரிடா அவன்தான் வாங்கித் தரேன்னு சொல்லிட்டான்ல வாங்க போலாம் (என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்).

இரண்டு பைக் இருந்தது ஒரு பைக்கில் குமார் நடுவில் வினோத் பின்புறம் வசந்த் .மற்றொரு பைக்கில் பாலா பின்புறம் ரகு. அனைவரும் பைக்கில் சென்று கொண்டிருக்க

பாலா : மச்சான் அதான்டா நான் சொன்ன பழைய போஸ்ட் ஆபீஸ்

ரகு : ஓ சரி சரி இங்கதான் எல்லாத்தையும் பார்த்தியா (என்று நக்கலாக கேட்டான்)

குமார் : )பைக்கை நிறுத்தினான்)

பாலா : (அவன் பக்கத்தில் சென்று நிறுத்தி) ஏன்டா நிறுத்தின

குமார் : மச்சான் அன்னைக்கு நீ சொன்னதுல இருந்து எனக்கு ஒரு மாதிரி இருக்குடா வாங்கடா உள்ள போய் ஏதாச்சும் தடயம் இருக்கானு பார்க்கலாம்

ரகு : டேய் நீ என்ன சிஐடியா தடயம் கண்டுபிடிக்க போறேன்னு சொல்ற

குமார் : டேய் உனக்கு கல்யாணம் ஆயிருச்சு. பின்னாடி உக்காந்து இருக்கிற வசந்துக்கு ஆகப்போகுது. வினோத் லவ் பண்ணிட்டு இருக்கான் .நானும் பாலாவும் தாண்டா மொட்டை பசங்க சும்மா உள்ளே போய் பாக்கலாம் டா. ஏதாச்சும் தடைம் கிடைச்சா நாங்க யூஸ் பண்ணிக்கிறோம்

வினோத் : டேய் இவன் இப்படித்தான் டா வாங்கடா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்

ரகு : நான் வரல அங்க ஒரே முள்ளு பட்டையா கிடக்குது

வசந்த் : சரி ரகு நீயும் நானும் சரக்கு வாங்க போயிட்டு வரலாம். இவனுங்க உள்ள போய் பார்த்துட்டு ஏரிக்கரைக்கு வரட்டும்

குமார் : சூப்பர்டா நீங்க போய் வாங்கிட்டு வாங்க நாங்க பார்த்துட்டு அப்படியே வந்துரோம் என்று சொல்லி பாலா குமார் பைக்கில் ஏற வசந்த் பாலா பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

இவர்கள் மூவரும் ராஜா பார்க் செய்த அதே போஸ்ட் ஆபீஸ் பின்புறத்தில் பைக்கை பார்க் செய்தார்கள்.

பாலா : மச்சான் இங்கிருந்து தாண்டா அந்த பைக் போறதை பார்த்தேன்

குமார் : சரி வா போய் பார்க்கலாம்