எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 38

கிஷோர் கடுப்புடன் கேட்க.. அசோக் மீண்டும் வசமாக சிக்கிக்கொண்டான்..!! ‘ஹிஹிஹி..’ என்று அசட்டுத்தனமாய் இளித்தான்.. ‘கவிதை சொன்னா அனுபவிக்கனும்.. அர்த்தம்லாம் கேட்க கூடாது..’ என்று சப்பைக்கட்டு கட்ட முயன்றான்..!! ஏற்கனவே அவன் ஒருமாதத்தில் இருபது முறைக்குமேல்.. காதல் உல்லாசம் படத்தை திருட்டுத்தனமாக பார்த்திருப்பதை அறிந்திருந்த நண்பர்கள்.. அன்று கற்பனையில் துப்பியது போல.. இன்று நிஜமாகவே துப்பினர்..!!

“த்தூ.. த்தூ.. த்தூ..!!!”

“இப்போ எங்கடா போச்சு உன் ஒரிஜினாலிட்டி.. என் வெளக்கெண்ணை..??” வேணுதான் ரொம்ப வேகமாக இருந்தான்.

அசோக் புரிந்து கொண்டது: மீரா எழுதிய கவிதையை படிக்க தமிழ் டூ தமிழ் டிக்சனரி தேவை.

நாள் – 44

“Sexy lady on the floor.. keep you coming back for more..!!”

தனது பெட்ரூமில் இருந்து செல்போன் அலற, சாப்பிட்டுக்கொண்டு இருந்த அசோக் பதறியடித்துக்கொண்டு, எழுந்து உள்ளே ஓடினான். அப்பா கையில் வைத்திருந்த புத்தகம் பறந்தது. அம்மா அடுக்கி வைத்த துணிமணிகள் சிதறின. அவன் தனது செல்போனில் மீராவுக்கென ஸ்பெஷலாக செட் செய்து வைத்திருக்கிற ரிங்டோன்தான் அது.. அவள் எப்போதாவதுதான் அசோக்கிற்கு கால் செய்வாள்.. அப்படி எப்போதாவது கால் செய்கிற போதெல்லாம்.. அசோக் இப்படித்தான் மாறி விடுவான்..!! பாரதிதான் அசோக்கின் முதுகைப் பார்த்து எரிச்சலாக கத்தினாள்..!!

“டேய்.. பொறுமையா போயேண்டா.. அப்படி என்ன அவசரம்..??”

“ஹையோ.. அவன் மெண்டல் ஆயிட்டான் மம்மி..!! அவன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கான்.. அது மூக்கை எனக்கு பாக்கவே சகிக்கல.. இவன் என்னடான்னா.. எந்த நேரம் பாத்தாலும் அதுக்கு மொச்சு மொச்சுன்னு முத்தம் குடுத்துட்டே உக்காந்திருக்கான்..!! உன் புள்ளைக்கு என்னவோ ஆயிடுச்சு..!!” சங்கீதா காதில் இருந்த ஹெட்போனை கழட்டிவிட்டு அம்மாவுக்கு சொன்னாள்.

ஆனால்.. இங்க நடப்பதை எல்லாம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல்.. அசோக் தனது பெட்ரூமில்.. கால் பிக்கப் செய்து..

“ஹலோ.. மீரா..!!” என்று இளிப்பாக சொன்னான், குருமா ஒட்டியிருந்த விரலை வாய்க்குள் வைத்து சுவைத்துக்கொண்டே..!!

நாள் – 47 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.
நாள் – 48 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.
நாள் – 49 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.

அசோக் புரிந்து கொண்டது: ஸாரி.. சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை..!!

வயலினும், புல்லாங்குழலும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து தேனிசையை கசிய.. கூடவே ‘திம்.. திம்.. திம்..’ என்று ட்ரம்ஸின் மெலிதான தாளமும் சேர்ந்து கொள்ள.. ஒரு ஆணுடைய மெலிதான, ஹஸ்கியான, ஏக்கமான குரலில் ஆரம்பமானது அந்தப் பாடல்..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

வீட்டு சுவரேறி வெளியே குதித்த அவள்.. தடுமாறி கீழே விழுந்தாள்..!! உடனே எழுந்து.. முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை தடவிக்கொண்டே.. உற்சாகமாக ஓடி வந்தாள்..!! அவன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முறுக்கினான்..!! அவள் ஓடி வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டு.. ‘போ.. போ..’ என்று அவனுடைய தோளை தட்டி அவசரப் படுத்தினாள்.. பைக் பறந்தது..!! மொட்டைமாடியில் நின்று.. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவளுடைய அரசியல்வாதி அப்பா.. எதேச்சையாக இந்த காட்சியை காண நேரந்ததும்.. உடனடியாய் அவரிடம் ஒரு பதற்றம்..!! ஆத்திரம் அப்பிய முகத்துடன் படிக்கட்டில் தடதடவென இறங்கினார்.. தன்னுடைய அடியாட்களை அழைத்து.. கையை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி ஆட்டி.. கோபம் கொப்பளிக்க சில உத்தரவுகள் பிறப்பித்தார்..!! பிறகு அவர்களுடன் அந்த டாடா சுமோவில் வேகமாய் கிளம்பினார்..!!