எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 38

அசோக் தலையை நிமிர்த்தி பார்த்தான். மீரா தன் கைகள் இரண்டையும் உயர்த்தி அசோக்கை ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. அந்த அற்புதக் காட்சியை, தூரத்தில் இருந்த அசோக்கின் நண்பர்களும் கண்டுவிட்டனர்.

“ஹாஹா..!! அவ்ளோ பேர் இருக்குற பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ கால்ல விழுந்து கெஞ்சுற அளவுக்கு என்னடா மச்சி தப்பு பண்ணின நீ..??” ஆளாளுக்கு அசோக்கை கலாய்த்தனர்.

“ஹேய்.. அவ கால்லலாம் விழடா.. நம்புங்கடா..!!” அசோக் கதறியதை யாருமே பொருட்படுத்தவில்லை.

நாள் – 12

“எப்படி இருக்கு..?? நல்லா இருக்கா..?? பிடிச்சிருக்கா உனக்கு..??”

அசோக் தன் தலையை இப்படியும் அப்படியுமாய் திருப்பி, தன் காதுகளை மீராவிடம் ஆசையாக காட்டினான். அவனுடைய இரண்டு காதுகளிலும் சிவப்பு நிறத்தில் இரண்டு வளையங்கள்..!! ‘ஹேய் அசோக்.. எனக்கு.. இந்த காதுல வளையம் போட்டுக்குற பசங்களலாம் ரொம்ப பிடிக்கும்.. நீயும் அந்த மாதிரி போட்டுக்குறியா..?” என்று அதற்கு முன்தினம்தான் மீரா அசோக்கிடம் சொல்லியிருந்தாள். அதன் விளைவுதான் இது..!! ஆனால் நேற்று அப்படி சொன்னவள், இன்று அசோக்கின் காதுகளை பார்த்ததும் குபீரென்று சிரித்துவிட்டாள்.

“ஹாஹாஹாஹா..!!!”

அசோக் எதுவும் புரியாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அவளோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அவனை பார்த்து கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஏ..ஏன் மீரா சிரிக்கிற..?? நல்லா இல்லையா..??” அசோக் பாவமாய் கேட்டான்.

“ரொம்ப கேவலமா இருக்கு..!! யாராவது ஏதாவது சொன்னா.. அப்படியே செஞ்சுடுவியா..?? உன் மூஞ்சிக்கு எது செட் ஆகும்னு உனக்கே தெரியாதா..?? ஹையோ ஹையோ..!! ஹாஹாஹாஹா..!!!” மீரா சிரித்துக்கொண்டே இருக்க, அசோக் அப்படியே நொந்து நூலாய் போனான்.

அசோக் புரிந்து கொண்டது: என்னை அசிங்கப்படுத்தி பார்ப்பதில் மீராவுக்கு ஏனோ ஒரு அலாதி ப்ரியம்.

நாள் – 16

இடம்: அதே ஃபுட்கோர்ட்

“ஹேய்.. வாங்கடா.. பயப்படாதிங்க..!! நீங்க நெனைக்கிற மாதிரி இல்லடா.. அவ ரொம்ப நல்லவ… உங்களை ஒன்னும் செய்ய மாட்டா… உங்களை பத்தி எல்லாம் நல்ல விதமா சொல்லி வச்சிருக்குறேன்.. உங்களை மீட் பண்ண அவ எவ்வளவு ஆசையா இருக்குறா தெரியுமா..? வாங்கடா.. வாங்க..!!”

தயங்கிய நண்பர்களை அசோக் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மீரா முன்பாக நிறுத்தினான். அவர்களும் அறுக்கப் போகிற ஆடு மாதிரி, மிரள மிரள விழித்துக் கொண்டே, நடுக்கத்துடன் அவள் முன் சென்று நின்றனர்.

“இ..இவங்கதான் என் ஃப்ரண்ட்ஸ் மீரா.. காலேஜ்ல எல்லாம் ஒரே க்ளாஸ்.. அப்போ இருந்தே நாங்க ரொம்ப க்ளோஸ்..!!” அசோக் ஆரம்பித்து வைக்க,

“ஹாய்.. ஐ’ம் கி..கிஷோர்..!!”

கிஷோர் ஒரு தயக்கத்துடனே கை நீட்டினான். மீரா முகமெல்லாம் பிரகாசமாய் சேரை விட்டு எழுந்தாள். கிஷோரின் கையைப் பற்றி குலுக்கிக் கொண்டே சொன்னாள்.