எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 38

“காசு வச்சிருக்கியா..??” கேட்டாள் மீரா.

“கார்ட் வச்சிருக்கேன்..!!” சொன்னான் அசோக்.

“ஏற்கனவே ட்ரிங்ஸ்லாம் சாப்ட்ருக்கியா..??” கேட்டான் அசோக்.

“ம்ம்.. சாப்ட்ருக்கேன்.. சாப்ட்ருக்கேன்..!!” சொன்னாள் மீரா.

அவ்வளவேதான்..!!

கத்திப்பாரா ஜங்கஷனில் இடதுபுறம் திரும்பி.. சற்றே வேகமெடுத்து சர்தார் படேல் சாலையில் திரும்பியதுமே.. வெள்ளை வெளேர் என்று.. உயரமாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்தது.. அந்த மூன்று நட்சத்திர ஹோட்டல்..!! அசோக் பைக்கை உள்ளே செலுத்தி பார்க் செய்தான்..!! இருவரும் இறங்கி.. பக்கவாட்டில் இருந்த பார் பகுதிக்கு சென்றனர்..!! நண்பர்களுடன் குடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆனதில்.. அசோக்கின் மனதோரமாக ஒரு ஏக்கம் இருந்தது.. பிறகு மீரா திரும்ப வந்ததில்.. அந்த ஏக்கம் எப்போதோ காணாமல் போயிருந்தது.. இப்போது அவளுடன் சேர்ந்து மது அருந்தப் போவது.. அவனுடைய மனதில் ஒரு புதுவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. மிகவும் சந்தோஷமாகவே காணப்பட்டான்..!! ஆனால்.. மீராதான் முகத்தை ஏனோ உர்ரென்று வைத்துக்கொண்டு அவனுடன் நடந்தாள்..!!

மஞ்சள் நிற வெளிச்சத்தில் குளித்து.. பளிச்சென்று இருந்தது அந்த பார்..!! சிவப்பு நிற வெல்வெட் நாற்காலிகள்.. தேக்கு மர மேஜைகள்..!! அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. குடிக்க வந்திருந்த குரூப்கள்..!! இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்டல் இசை.. இதமாய் கசிந்து.. காற்றை இனிமையாய் மாற்றிக் கொண்டிருந்தது..!!

“என்ன சாப்பிடுற..??”

“சம்திங் ஸ்ட்ராங்.. வெரி ஸ்ட்ராங்..!! எது பயங்கர ஸ்ட்ராங்கா இருக்குமோ அதை ஆர்டர் பண்ணு..!!”

“பயங்கர ஸ்ட்ராங்னா பட்டை சாராயம்தான்..!!”

“இங்க கெடைக்குமா..??” மீரா சளைக்காமல் கேட்க, அசோக் அரண்டு போனான்.

“ஆத்தாடீஈஈ..!! ஒரு முடிவுலதான் இருக்குற போல இருக்கு..?? அ..அதுலாம் இங்க கெடைக்காது.. நான் வேணா உனக்கு ஏதாவது ஃபாரீன் விஸ்கி ஆர்டர் பண்றேன்.. ஜஸ்ட்.. ஸ்லீக் அண்ட் ஸ்மூத்..!!”

“ஹ்ம்ம்.. ஓகே.. ஸ்வீட்..!!”

மீராவும் ஒப்புக்கொள்ள, அசோக் ஜானிவாக்கர் விஸ்கி இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தான். தொட்டுக்கொள்ள வெஜ் ஷீக் கபாப்..!! பத்தே நிமிடத்தில் ஆர்டர் செய்த வகையாறாக்கள் வந்து சேர்ந்தன. அசோக்கே மீராவுக்கும் சேர்த்து மிக்ஸிங்செய்து.. கோப்பையை அவள் பக்கம் நகர்த்தினான்..!!

“சியர்ஸ்..!!”

சொல்லிவிட்டு.. மீராவுடன் ஜென்டிலாக கோப்பை இடித்துவிட்டு.. விஸ்கியை உதட்டுக்கு கொண்டு சென்றான்..!! கண்ணாடி விளிம்பில் உதடுகள் பதித்து.. கொஞ்சமாய் உறிஞ்சி.. நாக்கின் சுவையுணர்வு மொட்டுகளுக்கு விஸ்கியின் சுவையை காட்டி.. அப்படியே மிடறு விழுங்கி.. மெல்ல தொண்டைக்குள் அனுப்பி.. குரல்வளை வழியாக சுருசுருவென அனல் பரப்பிக்கொண்டு.. அந்த திரவம் அடி வயிறு நோக்கி இறங்குவதை.. இமைகள் செருக அசோக் அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கும்போதே..

“டமார்..!!” என்று காதை அறைந்தது அந்த சப்தம்.

அசோக் பதறிப்போய் இமைகளை பிரித்தான். மீரா கண்ணாடி கோப்பையை டேபிளில் வைத்த சப்தம்தான் அது..!! கோப்பையில் தளும்ப தளும்ப இருந்த மொத்த விஸ்கியையும்.. ஒரே கல்ப்பில் கப்பென்று அடித்திருந்தாள்.. அடித்து முடித்து காலி கோப்பையைத்தான் அந்த மாதிரி “டமார்..!!” என்று டேபிளில் வைத்திருந்தாள்..!! இப்போது கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு..

“க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்..!!!!” என்று கனைத்தாள்.

கனைத்தவள், சிறிது நேரம் அப்படியே கண்களை மூடிக்கொண்டு, தலையை கவிழ்த்தவாறு அமர்ந்திருந்தாள். வாயை மட்டும் அவ்வப்போது திறந்து, ‘ஹா.. ஷ்ஷ்ஷ்.. ஹா..’ என்று காற்று வெளிப்படுத்தினாள். அசோக் அவளையே ஒருமாதிரி மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சற்றே தயக்கத்துடன்..

“மீ..மீரா.. மீரா.. என்னம்மா ஆச்சு..??” என்றான்.

மீரா இப்போது தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். விழிகளை படக்கென திறந்தாள். அசோக்கை கண்டு கொள்ளாமல், பின்பக்கமாய் திரும்பி.. பேரரை பார்த்து..

“ரிப்பீட்..!!” என்றாள் காலி கோப்பையை ஒற்றை விரலால் தட்டிக் காட்டியவாறே.

“மீ..மீரா எதுக்கு இப்போ..” அவளை தடுக்க முயன்ற அசோக்கை,

“ஷ்ஷ்ஷ்ஷ்..!!” என்று உதட்டில் விரல் வைத்து அடக்கினாள்.

அசோக் ‘சர்தான்..!!’ என்றான் மனதுக்குள். பேரர் மீண்டும் ஒரு லார்ஜ் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். அசோக் தயங்கி தயங்கி மீண்டும் மிக்ஸிங் கலந்தான். மீரா கோப்பையை எடுத்து மீண்டும் ஒரே கல்ப்பில் அடித்தாள். மீண்டும் டேபிளோடு ஒரு ‘டமார்’.. மீண்டும் கனைப்பாக ஒரு ‘க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்’.. மீண்டும் கண்கள் மூடி சிறிது நேர நித்திரை..!!

அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. தலை கவிழ்ந்து கிடந்தவளையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

“மீரா.. ரொம்ப தாகமா இருந்தா வாட்டர் வேணா வயிறு முட்ட குடிச்சுக்கோ.. இப்படி விஸ்கிலாம் தாகத்துக்கு குடிக்கிற மாதிரி குடிக்க கூடாது..!!”

“வேற எப்படி குடிக்கணும்..??” மீரா தலையை நிமிர்த்தி கேட்டாள்.

“இந்தா.. என்னை மாதிரி.. லைட்டா.. ஒவ்வொரு சிப்பா..”

“ப்ச்.. அதுலாம் உன்னை மாதிரி கொய்ந்தைங்க குடிக்கிறதுடா.. நமக்குலாம்..” சொன்னதை முடிக்காமல் அவள் இழுக்க,

“ம்ம்.. உனக்குலாம்..??” அசோக் கேள்வியாக அவளை பார்த்தான்.

மீரா அசோக்குக்கு பதில் சொல்லவில்லை. கண்களை இடுக்கி அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்தாள். பிறகு தலையை திருப்பாமலே.. அவனது முகத்தை பார்த்த பார்வையை நகர்த்தாமலே..

“ரிப்பீட்..!!!!” என்று பெரிய குரலில் கத்தி, பேரருக்கு ஆர்டர் கொடுத்தாள்.