எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 38

“ரொம்ப திகிலான பேய்க்கதை மீரா.. ஈவு இரக்கமே இல்லாத ஒரு பேய் பண்ற அட்டகாசம்தான் படம்..!!”

“ஹை இன்ட்ரஸ்டிங்..!! எனக்கு என்ன ரோல்..?? ஐ மீன்.. ஹீரோயின் என்ன பண்றா.. அந்தப்பேயோட அட்டகாசத்தை அடக்குறாளா..??”

“இல்ல.. அந்த பேய்தான் ஹீரோயினே..!!”

அசோக் அப்பாவியாக சொல்லிவிட்டு இளிக்க, மீரா அவனை எரித்து விடுவது போல முறைத்தாள். அப்புறம் அவனுடைய உச்சந்தலையிலேயே ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். அசோக் ‘ஆஆஆஆ’ என்று தலையை தேய்த்தவாறே அலறினான். அப்புறம் மீராவுக்கு தான் எழுதி வைத்திருக்கிற ஸ்க்ரிப்ட் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட மீரா, அசோக்கின் திறமை கண்டு நிஜமாகவே அதிசயித்துப் போனாள்.

“வாவ்..!! இம்ப்ரசிவ்..!! நல்ல டேலன்ட் உனக்கு..!!” என்று மனதார பாராட்டினாள். அசோக் குளிர்ந்து போனான்.

“தேங்க்ஸ் மீரா..!! ஆக்சுவலி எங்க வீட்ல ஆளாளுக்கு ஒரு டேலன்ட் இருக்கு தெரியுமா.. எனக்கு மூவி மேக்கிங்ல..!! அதுசரி.. உனக்கு இந்த மாதிரி ஏதாவது டேலன்ட் இருக்கா..??”

“ஏன் இல்லாம..?? நான் கவிதை சூப்பரா எழுதுவேன்..!!”

“ஓ.. இஸ் இட்..?? நீ எழுதுனதுல ஏதாவது கவிதை சொல்லு பார்ப்போம்..??”

“ஏற்கனவே எழுதுனது எதுக்கு.. உனக்காகவே ஸ்பெஷலா ஒன்னு எழுதி தர்றேன்..!!”

கூலாக சொன்ன மீரா, பேக்கில் இருந்து பேப்பரும் பேனாவும் எடுத்தாள். இமைகளை மூடி, நெற்றியை பேனாவால் தேய்த்தவாறே, ஏதோ யோசித்தாள். அசோக் அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் கூட ஆயிருக்காது. மீரா சரசரவென பேப்பரில் ஏதோ கிறுக்கினாள். கிறுக்கி முடித்து அசோக்கிடம் சரக்கென நீட்டினாள். அசோக் அதை அவசரமாக வாங்கி, ஆசையாக பார்த்தான்.

அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!

உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??

நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??

புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!

கவிதையை படித்துமுடித்த அசோக்கிற்கு, கடுகளவு கூட அதன் பொருள் புரியவில்லை. ‘காதல் ரசம் சொட்ட சொட்ட ஏதோ எழுதி நீட்ட போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறாளே..?? ஆளவந்தானில் கமலஹாசன் ‘சிற்பமான பெண்டிரென்று’ என ஆரம்பிப்பாரே.. அந்த எஃபக்டில் இருக்கிறது..??’ அர்த்தம் புரியாமல், அசோக் திருதிருவென விழிக்க..

“என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?? நல்லாருக்கா..??” மீரா ஆர்வமாக கேட்டாள்.

“ஹ்ம்ம்.. ந..நல்லா.. நல்லாருக்கு மீரா.. சூ..சூப்பர்.. பெண்டாஸ்டிக்..!!”

“தேங்க்ஸ்..!!”

“ஆனா.. கவிதைல எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மீரா..!!”

“என்ன..??”

“இல்ல.. நான் இந்த ஆவக்காய், கோவக்காய்லாம் கேள்விப் பட்ருக்கேன்.. அதென்ன காவக்காய்..??”

அசோக் கேட்டுவிட்டு அப்பாவியாக இளித்தான். மீரா இப்போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, அசோக்கையே கண்களை இடுக்கி முறைத்தாள். ஓரிரு வினாடிகள்..!! அப்புறம் அவனுடைய கன்னத்திலே ‘சப்.. சப்.. சப்..’ என்று அறைய ஆரம்பித்தாள்.

“ஹேய்.. மீரா.. ஐயோ… என்ன.. என்னாச்சு..??”

“அர்த்தமே புரியல.. நல்லாருக்குன்னு பீலா விடுறியா..?? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!”

அன்று மாலை.. அசோக் அந்த கவிதையை தன் நண்பர்களிடம் காட்டி.. பெருமைப் பட்டுக் கொண்டான்..!!

“ச்சே.. இந்த மீரா என்னமா கவிதை எழுதுறா மச்சி.. சான்சே இல்லடா.. அவளுக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்குறது.. இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சு பாரேன்..??”

“ஹ்ம்ம்.. இவ்வளவு பாராட்டுறியே..?? எங்க.. இந்த கவிதைக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லு..??”