எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 10

நாள் – 33

“விடுடா.. பாத்துக்கலாம்..”

“இல்ல மாமு.. ஒரு தம்மாத்துண்டு டாமாக்கோழி அவன்.. நம்மையே டபாய்ச்சுட்டு இருக்கான்..!! போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டா.. எஸ்கேப் ஆயிடலாம்னு பாக்குறானா அவன்..?? த்தா.. அவனை கண்டுபுடிச்சு அவன் மெயினை ஸ்விட்ச் ஆப் பண்றனா இல்லையான்னு பாரு..!!”

KFC உணவகத்தில் மீராவுக்கு தீனி வாங்கிப்போட வந்திருந்த அசோக், அருகில் கேட்ட பேச்சு சப்தத்திற்கு திரும்பி பார்த்தான். பார்த்ததுமே குலை நடுங்கிப் போனான். அவர்கள்.. அன்று டாட்டோ சுமோவில் பார்த்த அதே தாடி மீசைகள்.. கரடு முரடான காட்டுப் பயல்கள்.. கையில் கத்தியும், மனதில் கொலை வெறியுமாய் அலைபவர்கள்..!!

“ரொம்ப பீல் பண்ணாதடா.. எங்க போயிறப் போறான்.. பாத்துக்கலாம் விடு..”

“என்னால அப்படி இருக்க முடியல மாமு.. அப்டியே நெஞ்செல்லாம் திகுதிகுன்னு எரியுது எனக்கு..!! இப்போ சொல்லிக்கிறேன் கேட்டுக்கோ.. த்தா.. அவனை போட்டுட்டு.. அதுக்கப்புறந்தான் என் பொண்டாட்டியை..” அவன் வீராவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“டேய்ய்ய்..” என்று மற்றவர்கள் அவசரமாய் கத்தினர். உடனே அவன் அப்போது லோ வாய்ஸில்..

“ஊர்ல இருந்து கூட்டிட்டு வரணும்னு சொன்னேன் மாமு..!! ஒரு பொடிப்பயலை போடத் துப்பு இல்ல.. உனக்குலாம் எதுக்கு பொண்டாட்டின்னு.. கோச்சுக்கிட்டு அப்பன் வூட்டுக்கு போயிட்டா மாமு அவ..!!” என்றான். அப்புறந்தான் மற்றவர்கள் ‘ஷ்ஷ்ஷபாஆஆ..’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

“ஹேய்.. மீரா.. வா கெளம்பலாம்..” அசோக் மீராவிடம் கிசுகிசுப்பாக சொன்னான்.

“இரு.. இன்னும் ஒரு பீஸ்தான்..!!”

“ப்ச்.. வான்னு சொல்றேன்ல..??”

வறுத்த சிக்கனை கவ்விய வாயுடனே, மீராவை வலுக்கட்டாயமாக எழுப்பி இழுத்து சென்றான் அசோக். வாசலுக்கு சென்றதும், அசோக்கின் கையை உதறினாள் மீரா. சிக்கனை அசை போட்டுக்கொண்டே கேட்டாள்.

“வாட்ஸ் ராங் வித் யூ..?? எதுக்கு இப்படி அவசரமா இழுத்துட்டு போற..??”

“மீரா.. நா..நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! அதோ.. அங்க உக்காந்திருக்கானுகள்ல..”

“எங்க..??”

“நாம உக்காந்திருந்ததுக்கு பின்னாடி டேபிள்.. தடித்தடியா நாலு பேரு..!!”

“ம்ம்.. யார் அவங்க..??”

“அன்னைக்கு உன்கிட்ட சொன்னேன்ல.. என்னை போட்டு தள்றதுக்காக.. டாட்டா சுமோல அலைஞ்சுட்டு இருக்கானுகனு.. அவனுகதான் அது..!!”

“ஓ.. இவனுகதானா..??”

“வா.. கெளம்பிடலாம்.. இங்க நிக்கிற ஒவ்வொரு செகண்டும் ஆபத்து..!!” அசோக் பதற்றமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ஹாய்.. மிஸ்டர் மஞ்ச சட்டை..” என்று அந்த ரவுடி ராஜாக்களை பார்த்து மீரா கத்தினாள்.

“ஏய்.. என்ன பண்ற நீ..??” அசோக் மிரண்டு போய் அலறியதை அவள் பொருட்படுத்தவில்லை.

“ஹலோ உங்களதான் ஸார்.. வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி உக்காந்திருக்கிங்களே.. நீங்கதான்..!! நீங்க தேடிட்டு இருக்குற ஆளு இவன்தான்.. வாங்க வாங்க.. ஓடிறப் போறான்.. வந்து புடிச்சுக்கோங்க..”

அவள் அவ்வாறு கத்தியது தங்களைப் பார்த்துதான் என்பதை தாமதமாக உணர்ந்துகொண்டு.. அந்த நால்வரும் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் வாசலை திரும்பி பார்த்தபோது.. அசோக் ஸ்டெப்ஸ் எல்லாம் தவ்விக்குதித்து.. ட்ராஃபிக் எல்லாம் தாண்டிப்பறந்து.. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று.. அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தான்..!!

அசோக் புரிந்து கொண்டது: மீரா ஒரு சென்ஸ்லஸ் **சென்ஸார்ட் பை ஸ்க்ரூட்ரைவர்**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *