எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 38

“அம்மா அம்மா.. இருங்க..!! நீங்க எங்க போகணும்..??”

“அதோ.. அந்த பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போகணும்மா..!!”

“ஓ.. சரி.. கொஞ்சம் கூடையை எறக்குங்க.. பஸ் ஸ்டாண்ட் வரை என் பாய் பிரண்ட் தூக்கிட்டு வரட்டும்..!!”

அவ்வளவுதான்..!! அப்புறம்..

“வியாபாரம்லாம் எப்படிமா போகுது..??”

“என்னத்த.. பைசாக்கு பிரயோஜனம் இல்ல..”

மீராவும் அந்த பெண்ணும் கதையடித்தவாறே முன்னால் நடக்க.. ஜீன்ஸ், டி-ஷர்ட், கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ் சகிதத்துடன்.. தலையில் கடலைக் கூடையோடு அசோக் அவர்களை பின் தொடர்ந்தான்..!!

அசோக் புரிந்து கொண்டது: அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

நாள் – 27

அசோக்கும் மீராவும் அந்த பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். மீரா அசோக்கின் செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அசோக் அவளுடைய அருகாமை தந்த போதையில் திளைத்துக் கொண்டிருந்தான். அவள் தோள் மீது கைபோடலாம் என்று எண்ணியவன், மெல்ல தன் வலது கையை உயர்த்தினான். அப்போதுதான் மீரா சரக்கென எழுந்தாள். இவனை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென எங்கோ நடந்தாள். அசோக்கும் ‘எங்கே செல்கிறாள் இவள்..?’ என்று எதுவும் புரியாமல் அவளை பின் தொடர்ந்தான்.

சற்றே மறைவாக இருந்த அந்த புதரை அடைந்ததும் மீரா நின்றாள். மறைவுக்கு அந்தப்புறமாக ஒரு குட்டிப்பெண்ணை இறுக்கி அணைத்த நிலையில் இருந்தான், வாலிபன் ஒருவன்.

“ஏய்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற.. யார் இந்த பையன்..??”

மீரா அந்தப் பெண்ணை நன்றாக தெரிந்தவள் போல பேச ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் இவளை அடையாளம் தெரியாமல் திகைத்தார்கள்.

“உன் அப்பாவுக்கு இதுலாம் தெரியுமா..?? அவருக்கு கால் பண்ணி சொல்லவா..??”

என்றவாறு மீரா அசோக்குடைய செல்போனில் ஏதோ சில பட்டன்களை அழுத்த, இப்போது அந்தப்பையன் அவசரமாய் எழுந்தான். அங்கிருந்து ஓடிவிட முயன்றான். மீரா சுதாரித்துக் கொண்டு அந்தப் பையனை எட்டிப் பிடித்தாள். அவனுடைய கன்னத்திலேயே ‘சப்.. சப்.. சப்..’ என்று அறைய ஆரம்பித்தாள். நான்கைந்து அறை வாங்கியதுமே, அந்தப் பையன் மீராவின் பிடியில் இருந்து தப்பித்து, அந்த இடத்தை விட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். மீராவின் செய்கையை கண்டு அந்த குட்டிப்பெண் மட்டுமில்லாது, அசோக்குமே அதிர்ந்து போனான்.

“ஹலோ.. யார் நீங்க..?? உங்களை யார்னே எனக்கு தெரியாதே..??” அந்தப்பெண் மீராவிடம் சீற,

“நான் யார்ன்றது இருக்கட்டும்.. விழுந்தடிச்சு ஓடுறானே.. அவன் யாருடி..??” மீரா கேட்டுக்கொண்டே அந்தப்பெண்ணின் பேகை எடுத்து நோண்டினாள்.

“அ..அவர்.. அவர் என் பாய் ஃப்ரண்ட்..!!” சொல்லி முடிப்பதற்கு முன்பே அவளுடைய கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது.

“பத்தாவது படிக்கிறப்போவே பாய் ஃப்ரண்ட் கேக்குதா உனக்கு..??”

ரௌத்திரமாக மாறியிருந்த மீராவின் கையில் அந்த பெண்ணின் ஸ்கூல் ஐடி கார்ட். அந்த ஐடி கார்டில் இருந்த ஸ்கூல் போன் நம்பரையும், அந்தப் பெண்ணின் வீட்டு நம்பரையும் அசோக்கின் செல்போனில் ஸேவ் செய்து கொண்டாள் மீரா.

“அக்கா.. ப்ளீஸ்க்கா.. என் ஐடி கார்ட் குடுத்திடுங்கக்கா..!!” அவள் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

“இரு.. மொதல்ல உன் ஸ்கூலுக்கும், அப்பாவுக்கும் போன் பண்ணி சொல்லிட்டு.. அப்புறம் தர்றேன்..!!”

“ஐயோ.. வேணாம்க்கா.. உங்க கால்ல வேணா விழுறேன்.. அப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்ருவாரு..!! இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன்க்கா.. ப்ளீஸ்க்கா..!!”

இப்போது அவளுடைய கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்..!! மீரா அவளையே சில வினாடிகள் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்..

“படிக்கிற வயசுல ஏண்டி இந்த வேலைலாம் பண்ணிட்டு அலையுற..?? ஒரு போன் பண்றேன் சொன்னதும்.. எப்படி அலறியடிச்சுட்டு ஓடுறான் பாரு.. அவன்லாம் எங்கடி கடைசி வரை உன்கூட வர போறான்..?? மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!” என்று வெறுப்பாக சொன்னவள், ஐடி கார்டை அவள் முகத்தில் விட்டெறிந்தாள்.

அசோக் புரிந்து கொண்டது: தான் மட்டுமல்ல.. மீராவிடம் அறைபட நிறைய பேர் பிறந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.