எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 8

“ஹேய்.. என்ன நீ..?? பத்து ரூபாய்க்கு நாலுன்னு பானிபூரி மாதிரி.. வாங்கி கபால் கபால்னு உள்ள விட்டுட்டு இருக்குற.. ஃபாரீன் சரக்குமா இது.. என்ன ரேட் தெரியுமா.?? கொஞ்சமாவது அதுக்குண்டான மரியாதையை குடு..!!”

“ஏய்.. எல்லாம் எனக்கு தெரியும்.. மூட்றா..!!” மீரா அலட்சியமாக சொல்ல, அசோக் நெற்றியை பிசைந்து கொண்டான்.

“ஏன் மீரா.. நெ..நெஜமாவே.. நீ முன்னப்பின்ன குடிச்சிருக்கியா.. இல்ல..”

“ஏன் கேக்குற..??”

“எ..எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு..!!”

“சந்தேகந்தான..?? தீத்துட்டா போச்சு..!! டோன்ட் வொர்ரி.. ஐ வில் கிளியர் ஆ….ல் யுவர் டவுட்ஸ்..!! நவ்.. ரைட் நவ்..!!”

மீராவுக்கு நன்றாக போதை ஏறிவிட்டது என்பதை அசோக்கால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. குழறுகிற வாயுடன், அவள் ஆங்கிலத்துக்கு தாவியதிலேயே அதனை அறிந்து கொள்ள முடிந்தது. மீராவும் அதை உறுதி செய்தாள். மூன்றாவது லார்ஜை பேரர் கொண்டு வர.. ‘உன் டவுட்டை இப்போ கிளியர் பண்றேன் பார்..’ என்றவள், மிக்ஸிங் கலக்காத விஸ்கியை எடுத்து, அப்படியே ராவாக வாய்க்குள் ஊற்றினாள்..!! அசோக் ‘ஆ’வென்று வாயை பிளந்து பதறிப் போனான்..!!

“ஐயோ.. என்ன பண்ற நீ..?? அப்படியே ராவா..”

“ஏ..ஏன்.. குடிச்சா என்ன..??” அடர்த்தியான ஆல்கஹாலுக்கு முகத்தை சுளித்தவாறே மீரா கேட்டாள்.

“ஹாட்டா இருக்கும்..!!”

“ஹாஹா.. இந்த மிர்ச்சிக்கே ஹாட்டா..???”

என்று கெத்தாக கேட்டவள்.. தட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த.. அந்த தடித்த முழுநீள பச்சை மிளகாயை எடுத்து.. அப்படியே கடித்து நறநறவென மெள்ள ஆரம்பித்தாள்..!! அசோக் டென்ஷனாகிப் போனான்.. ‘யோசனை இல்லாமல் இவளை இங்கே அழைத்து வந்துவிட்டோமோ’ என்று முதன்முறையாக அவனுக்கு ஒரு கிலி கிளம்பியது..!!

“ஹேய்.. உனக்கு என்ன லூஸா..?? விஸ்கியை ராவா குடிச்ச.. இப்போ பச்சை மிளகாயை அப்படியே..”

“ஹ்ஹ.. இதுலாம் என்னை ஒன்னும் செய்யாது மச்சி.. ஐம் மிர்ச்சி மச்சி.. மிர்ச்சி..!!”

“அறிவில்லாம பேசாத..!! இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி.. வயிறை ஏதாவது பண்ண போகுது..!!”

“ம்ஹூம்.. எனக்கு இந்த தண்ணி வேணாம்..!! பேரர்..”

“அப்படியே அறைஞ்சிடுவேன் மீரா..!!”

“ஹ்ஹ.. நீ என்னை அறைய போறியா..?? அவ்ளோ தைரியமா உனக்கு..??”

“ஆமாம்.. இப்போ இதை குடிக்கல.. அதான் நடக்கப் போகுது..!! குடி.. குடின்றேன்ல..??”

அசோக் மீராவின் வாயைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவளுக்கு குளிர்ந்த நீர் புகட்டினான்.

“கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? இப்படிலாம் சாப்பிட்டா குடல் வெந்து போயிடும்..!!”

அவளை திட்டிக்கொண்டே நீர் புகட்டினான். மீராவும் ஒரு க்ளாஸ் நிறைய இருந்த தண்ணீர் மொத்தத்தையும் மடக் மடக்கென குடித்துவிட்டாள். குடித்து முடித்ததும், ‘ஏவ்..’ என்று எதுக்களிப்பை வெளிப்படுத்தியவள், பிறகு உதடுகளை சப்பிக்கொண்டே..

“ச்சோ.. ச்ச்வீட்..!!” என்றாள் திடீரென.

அவள் எதை சொல்கிறாள் என்று ஒருகணம் குழம்பிய அசோக், ஒருவேளை தண்ணீரில் சக்கரை விழுந்துவிட்டதோ என காலி க்ளாஸை பார்க்க, மீரா இப்போது ஒரு கெக்கலிப்புடன் சொன்னாள்.

“ஹ்ஹ.. தண்ணிய சொல்லலடா லூசுப்பயலே.. உன்னைய சொன்னேன்..!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *