எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 10

“எப்படி..??”

“நாங்கள்லாம் சந்தோஷத்தை கொண்டாட குடிக்கிறோம்.. நீ வேணா உன் சோகத்தை மறக்க குடி..!! எப்பூடி..???” சாலமன் கேட்டுவிட்டு இளிக்க, அசோக் அவனை ஏறிட்டு முறைத்தான்.

“நானே வெறுப்புல இருக்கேன்.. செருப்படி வாங்காத.. போயிடு..!!”

அப்புறம் யாரும் அசோக்கை வற்புறுத்தவில்லை. அவனுடைய மனநிலையை புரிந்து கொண்டவர்கள், அதற்கு மேலும் அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தார்கள். அவனை மட்டும் தனியே ஆபீசில் விட்டுவிட்டு, வேணுவின் காரில் பார்ட்டிக்கு கிளம்பினர். அசோக்குக்கு அவர்களுடன் செல்ல ஆசைதான். ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்தது. தன்னுடைய மனதில் இருக்கிற சோகம், நண்பர்களின் மகிழ்ச்சியான மாலைப்பொழுதை பாதித்துவிட கூடாது என்கிற எண்ணமாக இருக்கலாம்.

அனைவரும் சென்றபிறகு.. ஆபீஸை உள்பக்கமாய் இழுத்து பூட்டிவிட்டு.. எடிட்டிங் ரூமில் இருக்கிற பெரிய திரையில்.. காதல் உல்லாசம் படத்தை ஓடவிட்டு.. அக்கடா என அமர்ந்துவிட்டான் அசோக்..!! கொஞ்ச நேரத்திலேயே உருகிப்போய்.. படத்துடன் அப்படியே ஒன்றிவிட்டான்..!!

அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது.. அவனுடைய செல்போன் திடீரென ஒலித்தது..!! ரிங்டோன் கேட்டதுமே.. அவனுடைய இதயம் குபுக்கென்று ஒரு உற்சாக ரத்தத்தை, உடலெங்கும் சரக்கென பம்ப் செய்தது.. தேகமெங்கும் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு அவனுக்கு..!!

மீரா..!!!!

பாய்ந்து சென்று செல்போனை கைப்பற்றினான். அவசரமாய் கால் பிக்கப் செய்து காதில் வைத்தவன், அடுத்த முனையில் இருந்து குரல் ஒலிப்பதற்கு கூட அவகாசம் தராமல்..

“ஹலோ.. மீரா… எ..எப்படிமா இருக்குற.. எங்க போயிட்ட நீ.. ஒரு ஃபோன் கூட இல்ல.. ஏன்மா இப்படி பண்ற..?? நா..நாலு நாளா நீ இல்லாம நான் எப்படி தவிச்சு போயிட்டேன் தெரியுமா..?? ப்ளீஸ் மீரா.. இனிமேலாம் இப்படி..” அசோக் அவ்வாறு தவிப்பாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே..

“எங்க இருக்குற இப்போ..??” மீரா இறுக்கமான குரலில் கேட்டாள்.

“ஆ..ஆபீஸ்லதான்.. ஏன் கேக்குற..??”

“நான் இங்க ஆதித்யா ஹோட்டல் முன்னாடி நின்னுட்டு இருக்குறேன்.. பைக் எடுத்துட்டு கொஞ்சம் சீக்கிரம் வா..!!’

“அ..அது இருக்கட்டும்.. நாலு நாளா எங்க போயிட்ட நீ..??”

“ப்ச்.. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நேர்லயே பாக்க போறோம்ல..?? இங்க வந்து கேளு.. வா..!!”

சொல்லிவிட்டு மீரா படக்கென காலை கட் செய்தாள். அவளுக்கு மூட் சரியில்லை என்று அசோக் உடனடியாக புரிந்து கொண்டான். ஆனால் அதற்காகவெல்லாம் அவன் கவலைப்படவில்லை. மீரா திரும்ப வந்ததே அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருந்தது. நான்கு நாட்களாக அவனிடம் காணாமல் போயிருந்த உற்சாகம், இப்போது உச்ச பட்சமாக அவனை தொற்றிக் கொண்டது. ஆபீஸை அடைத்துவிட்டு அவசரமாய் பைக்கில் கிளம்பினான். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மீரா முன்பாக ப்ரேக் அடித்து நின்றான்.

“ஹ்ம்ம்.. இப்போவாவது சொல்லு.. எங்க போயிட்ட.. ஒரு ந்யூசும் சொல்லாம..??” அசோக் ஆர்வமாக கேட்க,

“சிக்னல் போடப் போறான்.. வண்டியை எடு..!!” மீரா அலட்சியமாக சொன்னாள்.

அசோக் சலிப்பாக தலையை அசைத்துக் கொண்டான். ‘இவ ஏன் இப்படி இருக்குறா..??’ என்று எப்போதும் அவன் மனதுக்குள் கேட்டுக்கொள்கிற கேள்வியை, இப்போதும் கேட்டுக் கொண்டான். மீரா பின் சீட்டில் அமர்ந்ததும், கியர் மாற்றி வண்டியை முடுக்கினான்.

“சிக்னல் தாண்டி.. ஸ்ட்ரெயிட்டா.. இல்ல லெஃப்..” அசோக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

“ரைட்ல போ..!!” மீராவிடம் இருந்து படக்கென பதில் வந்தது.

வடபழனி சிக்னலில் வலது புறமாக திரும்பினான் அசோக். மேலும் ஐந்து நிமிடங்கள்..!! மீராவின் மூட் அறிந்து.. எதுவும் பேசாமல் அமைதியாகவே வண்டியை செலுத்தியவன்.. அசோக் பில்லரை கடந்தபோது.. மனதை அரித்த அந்த கேள்வியை.. அதற்கு மேலும் அடக்க முடியாமல்.. அவளிடமே கேட்டுவிட்டான்..!!

“எங்க போறோம் இப்போ..??”

“ஏதாவது பாருக்கு போ..!!”

மீரா கூலாக சொல்ல, அசோக் குப்பென்று ஷாக் ஆனான். சர்ர்ரக்கென ப்ரேக் அடித்து பைக்கை நிறுத்தினான்.

“என்னது..????” என்று முகம் அஷ்டகோணலாகி போனவனாய் அவளிடம் திரும்பி கேட்டான்.

“ப்ச்.. காதும் போச்சா..?? ஏதாவது பாருக்கு போன்னு சொன்னேன்..!!”

“ஏ..ஏன்.. எ..எதுக்கு இப்போ.. திடீர்னு..??”

“எனக்கு மனசு சரியில்ல.. தண்ணியடிக்கனும் போல இருக்கு.. அதான்..!!”

“எ..என்ன மீரா நீ..?? ப..பசங்கதான் இப்படிலாம்.. மனசு சரியில்லன்னு..”

“ஏன்.. பசங்க மட்டுந்தான் குடிக்கனுமா..?? பொண்ணுக குடிக்க கூடாதா..?? போ..!!”

“அ..அதுக்காக இல்ல.. இப்படி.. எ..எங்கிட்ட வந்து..”

“உன்கிட்ட வந்து சொல்லாம வேற யார்ட்ட போய் சொல்றது..?? குடிகாரப்பயதான நீ..?? சென்னைல இருக்குற பார்லாம் ஒன்னுவிடாம போய் குடிச்சிருக்கேல..?? அதுல ஏதாவது ஒரு டீசண்ட் பாருக்கு என்னை கூட்டிட்டு போ..!!”

“இ..இல்ல மீரா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. எ..எனக்கென்னவோ இது..”

“ஷ்ஷ்ஷ்…!!!! இப்போ நீயா கூட்டிட்டு போறியா.. இல்லனா.. நானா எங்கயாவாது போய் குடிச்சுக்கட்டுமா..??”

மீரா சீற்றமாக சொல்ல, அசோக் மனதுக்குள் ‘சர்தான்..!!’ என்று நினைத்துக் கொண்டான். ஹெல்மட் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு, வண்டியை கிளப்பினான். அப்புறம் பார் சென்று சேரும் வரை இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *