எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 10

கிஷோரும், வேணுவும், சாலமனும்.. ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக.. மோகன் ராஜின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..!! அசோக்கோ எதைப்பற்றியும் அக்கறை இல்லாதவனாய்.. எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்..!! சில வினாடிகள் எந்த உணர்ச்சியும் காட்டாமல்.. முகத்தை இறுக்கமாக வைத்திருந்த மோகன் ராஜ்.. பிறகு உதட்டில் ஒரு புன்னகை அரும்ப சொன்னார்..!!

“Great job guys.. Fantastic work.. I am thoroughly impressed..!!! Bravo.. Bravo..!!!!”

மனதார பாராட்டியவர், ‘பட்.. பட்.. பட்..’ என க்ளாப் செய்தார். அப்புறந்தான் கிஷோருக்கும், வேணுவுக்கும், சாலமனுக்கும் மூச்சே வந்தது. முகம் பட்டென மலர்ந்து போக, சந்தோஷமாக சிரித்தார்கள். மோகன் ராஜ் கட்டை விரலை உயர்த்திக்காட்ட, இவர்களும் அதையே ஒருவித பெருமிதத்துடன் செய்தார்கள். ஆனால்.. அசோக் மட்டும் அந்த சந்தோஷத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவனாய், உர்ரென்று அமர்ந்திருந்தான். அதை கவனித்துவிட்ட மோகன் ராஜ், இப்போது குழப்பத்தில் சுருங்கிப்போன முகத்துடன் கிஷோரை கேட்டார்.

“என்னடா ஆச்சு அவனுக்கு..??”

“ம்க்கும்.. அவனையே கேளுங்க..!!”

தன்னுடைய தாயின் சாகசம்.. அம்மாவின் அப்பாவையும், மீராவின் அப்பாவையும் ஒன்றிணைத்து ஒரு காதல் வில்லன்.. நிஜத்தில் தன்னை துரத்துகிற டாடா சுமோ.. அந்த சிக்னல்.. மீராவுடன் முதல் நாள் பைக்கில் சுற்றிய அனுபவம்.. அன்று சாலையோர கடையில் அருந்திய டீ.. மழைக்காக ஒதுங்கிய தகர கூரை.. கடலை கூடையை தலையில் சுமத்திய கர்ப்பிணி.. எல்லாவற்றிற்கும் மேலாக மீராவின் மீது அவனுக்கிருந்த ஆழமான காதல்.. என.. கடந்த சில நாட்களாக தனக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டே.. அந்த விளம்பர படத்தை வடிவமைத்திருந்தான் அசோக்..!! அவனுக்கும் அந்த விளம்பர படத்தில் மிகுந்த திருப்திதான்.. ஆனால்.. நான்கு நாட்களாக மீராவை காணாத ஏக்கம் அவனிடம் மிகுந்து போயிருக்க.. எதையோ பறிகொடுத்தவன் போல சந்தோஷம் செத்துப்போய் அமர்ந்திருந்தான்..!!

மோகன் ராஜ் இப்போது சேரில் இருந்து எழுந்தார். நடந்து அசோக்கை நெருங்கினார். அவனுடைய தோளில் கைபோட்டவர், மென்மையான குரலில் கேட்டார்.

“என்னடா ஆச்சு..??”

“ஒ..ஒன்னுல்ல..!!”

“அப்புறம் ஏன் ஒருமாதிரி இருக்குற..?? இப்படி ஒரு பிரம்மாதமான ஃபில்ம் எடுத்துட்டு.. கம்முனு உக்காந்திருக்குற..?? கமான்.. சியர் அப் மேன்..!! இத்தனை நாளா.. இதுதாண்டா உன்கிட்ட மிஸ்ஸிங்.. உன் ஃபில்ம் என்னதான் க்ரியேட்டிவா இருந்தாலும்.. ஒரு டெப்த் ஃபீல் இல்லாம இருந்தது.. அந்த ஃபீல்க்காகத்தான இத்தனை நாளா உன்கூட சண்டை போட்டுட்டு இருந்தேன்..?? இப்போ பாரு.. எங்க இருந்து வந்தது.. இந்த மாதிரி நைஸ் ஃபீலோட ஒரு ஆட் ஃபில்ம்..?? இதைத்தான்டா இத்தனை நாளா உன்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்..!! கமான்.. சியர் அப்..!!”

“ம்ம்..” அசோக் இப்போது மெலிதாக புன்னகைக்க முயன்றான்.

“நீ ச்சூஸ் பண்ணின பேக்ரவுண்ட் ம்யூசிக்.. லோகேஷன்ஸ்.. ஆக்டர்ஸ்.. அவங்க பெர்ஃபாமன்ஸ்.. அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் நடுவுல அந்த லவ்வபிள் கெமிஸ்ட்ரி.. இட்ஸ் ஜஸ்ட் ப்ரில்லியன்ட்..!! இவ்வளவும் நான் அலாட் பண்ணின அந்த சின்ன பட்ஜட்குள்ளன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. இட்ஸ் ஆவ்ஸம்..!! உனக்கு நல்ல ப்யூச்சர் இருக்குடா.. இப்போ எனக்கு அதுல எந்த டவுட்டும் இல்ல..!! ஹேய்.. மொத மொதல்ல வாய்விட்டு பாராட்டுறேன்.. கொஞ்சம் சிரியேன்டா.. கமான்.. சிரி..!!”

அசோக் போலியாக ஒரு புன்சிரிப்பை உதிர்க்க, மோகன் ராஜ் இப்போது திருப்தியானார். ‘குட்’ என்றார் புன்னகையுடன்.

அவர்களிடம் வெளிப்படுத்தியதை விட அதிகமான திருப்தியிலேயே மோகன்ராஜ் இருந்தார். அசோக்குடைய இந்த உழைப்பு, அவருக்கு வாங்கித் தரப்போகிற பாராட்டையும், பணத்தையும் எண்ணி, மனதுக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டார். மனதுக்குள் இருந்த அவரது ஆனந்தம், வேறு வகையில் வெளியே வந்தது. மேலும் சில வேலைகளை அசோக்கின் கம்பனியிடம் ஒப்படைக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களில், எந்த தயக்கமும் இல்லாமல் கையொப்பமிட்டார். அசோக்கின் நண்பர்கள் அனைவரும் ஆனந்தத்தில் பூரித்து போயினர். அதுவும் அவர்கள் கிளம்பும்போது..

“ஹேய்.. அப்புறம்.. நைட் ஒரு ஏழு மணி போல க்ரீன் பார்க் ஹோட்டல் வந்துடுங்க.. இன்னைக்கு என்னோட பார்ட்டி.. உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா..!! சரியா..??” என்று மோகன்ராஜ் சொன்னபோது அந்த ஆனந்தம் இரட்டிப்பானது.

அன்று ஆறரை மணிக்கெல்லாம் அசோக்கின் நண்பர்கள் ஆபீஸில் இருந்து ஷோக்காக கிளம்பினார்கள். குடித்து கும்மாளமிடப் போவதை எண்ணி, அனைவரும் குதூகலத்தில் இருந்தார்கள். அவரவர்கள் காதலியிடம் அல்ரெடி அனுமதி பெற்று இருந்தனர். அசோக்கால்தான் அவர்களுடைய ஆனந்தத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. அனுமதி கேட்பதற்கு அவனுடைய காதலி தற்சமயம் தொடர்பில் இல்லையே..!!

“டாஸ்மாக்ல போட்டீ வறுவலோட ட்ரீட்னு சொன்னாலே.. டாக் மாதிரி நாக்கு தொங்கப்போட்டு வருவியே மச்சி..?? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஃபாரீன் சரக்கோட பார்ட்டிடா.. அந்த மீரா நெனைப்பை கொஞ்ச நேரம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு.. கெளம்பி வா..!! அப்புறம்.. மிஸ் பண்ணிட்டோமேனு நாளைப்பின்ன ரொம்ப ஃபீல் பண்ணுவ.. கமான்.. கெளம்பு..!!” சாலமன் வற்புறுத்த, அசோக்கிடம் எந்த அசைவும் இல்லை.

“இல்லடா.. எனக்கு மூட் இல்ல.. நீங்க போயிட்டு வாங்க..!!”

“ப்ச்.. அப்படிலாம் சொல்லப்படாது..!! சரி.. வேணும்னா இப்படி பண்ணுவோமா..??”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *