எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 38

“குட் அசோக்.. யு ஹவ் டன் ரியல்லி எ க்ரேட் ஜாப்..!!” என்று மனதார பாராட்டினாள்.

“சரி.. மிச்ச டிக்கெட்லாம் குடு..!!” என்று மீரா கேட்டபோது, அசோக் தரவில்லை. மாறாக பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான்.

“இந்தா..!!”

“ஹேய்.. பரவால.. விக்க முடியலைன்றதுக்காக நீ பணம் தரவேண்டியது இல்ல.. அடுத்தவங்க வாங்கலன்னா அதுக்கு நீ என்ன பண்ணுவ..??”

“இல்ல மீரா.. இன்னைக்கு பூரா அலைஞ்சு திரிஞ்சதுல.. நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்..!!”

“என்ன..??”

“நல்லது செய்ங்கன்னு நாலு பேர்ட்ட உதவி கேக்குறதுக்கு முன்னாடி.. நாம அதுக்கு தகுதி உள்ளவங்களா இருக்கணும்..!! அதுக்காகத்தான் மிச்ச டிக்கெட்லாம் நானே வாங்கிக்கிறேன்னு சொல்றேன்.. என் ஃப்ரண்ட்ஸ், ஃபேமிலி எல்லாரும் கூட்டிட்டு நான் அந்த பங்க்ஷன்க்கு போக போறேன்..!! இந்தா.. பணத்தை வச்சுக்கோ..!!” அசோக் மீராவின் கையில் பணத்தை திணிக்க, அவள்

“ச்சோ.. ச்ச்வீட்..!!”

என்றாள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு. பணத்தை வாங்கி பேகில் மொத்தமாக வைத்தவள், உள்ளே இருந்து அந்த பொம்மையை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

“ம்ம்..”

“ஹேய்.. என்ன இது..??”

“ஆயிரம் ரூபா டிக்கெட்டை நீங்க ஒரே ஆளே மொத்தமா வாங்கினதால.. உங்களோட தாராள குணத்தை பாராட்டி.. எங்க விடுதி சார்பா நாங்க தர்ற ஒரு நினைவுப்பரிசு.. எங்க குழந்தைங்க தேங்கா நார்லயே செஞ்ச.. மூக்கு செவந்த கொரங்கு பொம்மை..!!”

“ஹாஹா.. இட்ஸ் க்யூட்..!!” அசோக் புன்னகையுடனே அந்த குரங்கு பொம்மையை கையில் வாங்கிக்கொண்டான்.

“சரி.. கெளம்பலாம்… அர்பனேஜ் போய் பணத்தை ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம்..!!”

“கெளம்பலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உன்கூட சேர்ந்து ஏதாவது சாப்பிடனும் மீரா..!!” அசோக் சற்றே ஏக்கமாக சொன்னான்.

“அவ்வளவுதான..?? சாப்பிட்டா போச்சு.. வா.. நான் உனக்கு ட்ரீட் தர்றேன்..!!” மீராவும் உற்சாகமாகவே சொன்னாள்.

அன்று அவளுடன் சேர்ந்து ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் குடித்த தேநீர், தேவாமிர்தமாய் தோன்றியது அசோக்கிற்கு..!!

மூன்றாம் நாளில் அசோக் புரிந்து கொண்டது: மீரா அப்படி ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியாத புதிர் அல்ல.

நாள் – 8

இடம்: ஃபுட்கோர்ட்

“ஹையோ.. ஸ்பூன் கீழ விழுந்துடுச்சு அசோக்.. கொஞ்சம் எடுத்து தர்றியா..??”

மீரா அவ்வாறு சொன்னதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் எழுந்தான். கீழே குனிந்து அமர்ந்தான். அந்த ஸ்பூனை பார்வையாலேயே தேடி, கையை வைக்கவும் மீரா தன் காலை நகர்த்தி அவன் கைக்கருகே வைக்கவும் சரியாக இருந்தது. இவனுடைய கை அவளுடைய காலை தொட,

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் மகனே..”