எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 44

சாப்பிடும்போது அசோக் எழுப்பிய விஷயத்தை மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பாரதி அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை. கணவர் சொன்ன தீர்வில் மகன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பதை, அவனுடைய முகத்தை பார்த்தே புரிந்து கொண்டாள். ஆனால் அப்போதே அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை துருவி துருவி கேட்க அவள் விரும்பவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, அன்று இரவு அவளுடைய மடியில் அவன் தலை சாய்த்திருந்த வேளையில், அவனது தலை முடியை கோதி விட்டவாறே மெல்ல கேட்டாள்.

“அப்போ ஏண்டா அப்படி சொன்ன…?”

“எ..எப்படி..??”

“மனசுல ஏதோ உறுத்தல்.. ஏதோ கொழப்பம்.. அப்டின்னு..!!”

பாரதி அவ்வாறு கேட்கவும், அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அன்று புட்ஃகோர்ட்டில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான். அசோக் சொன்னதை எல்லாம் பாரதி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். கேட்டு முடித்தபிறகும் அவள் அமைதியும், யோசனையுமாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான்.

“நானாவது வேற வழி இல்லாம ஐ லவ் யூ சொன்னேன்.. அவ கைல காசு இல்லாம காதலிக்கிறேன்னு சொல்லிட்டாளோன்னு.. கன்ஃப்யூஸ்டா இருக்கு மம்மி..!!” மகன் பரிதாபமாக சொன்னவிதம், பாரதிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹாஹாஹாஹா…!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!”

“இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!”

“ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!”

“ம்ம்ம்… உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!”

“அடடா… இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்…. சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??” அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் ‘அதான..??’ என்று தோன்றியது.

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.