எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

“ம்ம்.. சொல்ஹு..!!” என்று வீங்கிப்போன கன்னத்துடன் சொன்னாள்.

அசோக் மீராவின் முகத்தையே சலிப்பாக பார்த்தவாறு, முந்தின இரவில் இருந்து நடந்த சம்பவங்களை, பொறுமையாக கூற ஆரம்பித்தான். அவன் பரிதாபமாக சொன்னவற்றை எல்லாம், மீரா பரிட்டோ மென்று கொண்டே சுவாரசியமாக கேட்டுக் கொண்டாள். அடிக்கடி ‘ஹாஹாஹாஹா..’ என்று சீஸ் அப்பிய வாயுடன் சிரித்தாள். கோக் குடித்து ‘ஏவ்வ்வ்’ என்று ஏப்பம் விட்டாள்.

“ம்ம்.. கடைசில என்னாச்சு..??”

“என்னாச்சு.. என் நம்பரை சேன்ஜ் பண்ணிட்டேன்..!! சிவன் கோயில் போய்.. என் பேர்ல நானே ஒரு அர்ச்சனை பண்ணிக்கிட்டேன்..!! அவனுக கைல சிக்க கூடாதுடா சாமின்னு நல்லா வேண்டிக்கிட்டேன்..!!”

“ஹாஹாஹாஹா..!!!” மீரா அதற்கும் கனைக்க, அசோக் எரிச்சலாக அவளை பார்த்தான்.

“ம்ம்.. அந்த கடுப்புலதான்.. ப்ரண்ட்ஸ்லாம் கூட்டிட்டு என் மேல படை எடுத்து வந்தியாக்கும்..??”

“அ..அது மட்டும் இல்ல..”

“அப்புறம்..??”

“நீ நேத்து ஐ லவ் யூ சொன்னேல..??”

“ஆமாம்..!!”

“நெஜமாவே நீ என்ன லவ் பண்றியா.. இல்ல சும்மா வெளையாடுறியான்னு வேற எனக்கு ஒரு டவுட்டு..!!”

“ஏன் அப்படி ஒரு டவுட்டு..??”

“பின்ன.. திடீர்னு ஐ லவ் யூ சொன்னா..??”

“ம்ம்..?? நீயுந்தான் திடீர்னு என்னை லவ் பண்றேன்னு சொன்ன..??”

“அதுக்கில்ல.. என்னைப் பத்தி உனக்கு..” அசோக் கேட்க வந்ததை முடிக்காமல் இழுத்தான்.

“ம்ம்.. சொல்லு..!!” மீரா அவனை முடிக்க சொல்லி தூண்டினாள்.

“இல்ல.. எ..என்னை பத்தி உனக்கு எதுவும் தெரியாதேன்னு..” மீண்டும் இழுக்கத்தான் செய்தான்.

“எதுவுமே தெரியாம வர்றதுக்கு பேர்தான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுட்டு வந்தா அதுக்கு பேர் கால்குலேஷன்..!! நீதான நேத்து சொன்ன..??” மீரா அசோக்கை மடக்க, அவன் இப்போது சோர்ந்து போனான்.

“ம்ம்ம்.. ஆ..ஆமாம்.. நான்தான் சொன்னேன்.. நானேதான்..!!!!” என்று பரிதாபமாக தலையை ஆட்டினான்.

“ம்ம்.. அப்புறம் என்ன..??”

“இல்ல.. பில்லுக்கு பணம் கேட்டதும் நீ ஐ லவ் யூ சொன்னியா.. அதான் ஒருவேளை..” ஆரம்பித்துவிட்டு, அப்புறம் அவசரப்பட்டு விட்டோமோ என்று அசோக் நாக்கை கடித்துக் கொண்டான்.

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *