எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

“ம்ம்ம்..!! இப்ப சொல்லு.. என்ன பிரச்சனை..??” அவள் கேட்க, அசோக் சற்றே தயங்கிவிட்டு ஆரம்பித்தான்.

“நீ.. நீ ஏன் அப்படி பண்ணின..??”

“எப்படி பண்ணேன்..??”

“உன்னால எவ்வளவு டென்ஷன் தெரியுமா..??”

“ப்ச்.. பிரச்சனை என்னன்னு சொல்லப் போறியா.. இல்ல சப்புன்னு ரெண்டு விடட்டுமா..??”

“சொ..சொல்றேன்.. அ..அந்த நம்பரு..”

“எந்த நம்பரு..??”

“அதான்.. நேத்து உன் கான்டாக்ட் நம்பர்னு குடுத்தியே..??”

“ம்ம்.. அதுக்கென்ன..??”

“அ..அந்த நம்பருக்கு கால் பண்ணினா வேற யாரோ ஃபோன் எடுக்குறாங்க.. ஆக்சுவலி இட்ஸ் எ ராங் நம்பர்..!!”

“ஓ..!! எங்க.. அந்த நம்பர் என்னன்னு சொல்லு..!!”

மீரா கேட்க, அசோக் நம்பரை சொல்லாமல், தன் செல்போன் எடுத்து அந்த காண்டாக்ட் திறந்து காட்டினான். ஒருகணம் அந்த எண்ணை சரிபார்த்த மீரா,

“ஹ்ம்ம்.. என் நம்பர்தான் இது.. பட்.. ஒரே ஒரு சின்ன கரெக்ஷன்..!! ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்டேன்.. தட்ஸ் ஆல்..!!! இதுக்கா இவ்வளவு அலப்பறை..??” மீரா கேஷுவலாக கேட்க, அசோக் உடனே சன்னமான குரலில் முனகினான்.

“ம்க்கும்.. நீ ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்ட.. எனக்கு எல்லாரும் ஏழரையை கூட்டிட்டாணுக..!!”

“என்ன மொனங்குற..??”

“ஒன்னுல்ல..!! நீ தப்பான நம்பர் குடுத்ததால எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா..?? டாடா டோகோமோல இருந்து வோடஃபோன் மாற வேண்டியதா போச்சு.. டாடா சுமோவ பாத்தாலே ஓட்டம் எடுக்க வேண்டியதா போச்சு..!!”

“ப்ச்.. எனக்கு ஒன்னும் புரியல.. என்னாச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லேன்..” மீரா இப்போது கூலாக கேட்டாள்.

“ஆக்சுவலா.. நேத்து நைட்டு.. உனக்கு கால் பண்ணலாம்னு..” அசோக் ஆரம்பிக்க, அவள் இடையில் குறுக்கிட்டாள்.

“ஏய்.. இரு இரு.. அதுக்கு முன்னாடி..” அவள் சொல்லி முடிக்கும் முன்பே,

“என்ன..? பரிட்டோவா..??” அசோக் பாவமாக கேட்டான்.

“யெஸ்..!! அதோட..”

“டயட் கோக்..??”

“ஹாஹா..!! க.க.க.போ.. வாங்கிட்டு வா போ..!!” கண்களில் குறும்பும், கன்னத்தில் குழியுமாக மீரா புன்னகைத்தாள்.

‘தலையெழுத்தே..!!’ என்று அசோக் சேரை விட்டு எழுந்து கொண்டான். நேற்று மாதிரியே டேகோ பெல் சென்று பரிட்டோவும், டயட் கோக்கும் வாங்கிக்கொண்டு திரும்ப வந்தான். வந்ததுமே மீரா கவர் பிரித்து, பரிட்டோவை ஒரு பெரிய கடி கடித்தாள்.

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *