எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

“ம்ம்ம்…. நீ எங்க கெளம்புற..?? நீ உக்காரு..!!”

என்று மிரட்டலாக சொன்னவள், அவளுக்கு எதிரே இருந்த சேரை சுட்டு விரலால் அவனுக்கு சுட்டி காட்டினாள். அவன் அப்புறமும் தயங்க, ‘ம்ம்.. உக்காருன்றன்ல..?’ என்று உறுமினாள். அசோக் இப்போது தயங்கி தயங்கி அந்த சேரில் அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததும் மீரா வெடுக்கென மற்றவர்களிடம் திரும்பினாள்.

“ம்ம்ம்.. இன்னும் என்ன இங்க வேடிக்கை..??” என்றாள் சீற்றமாக.

“ஹேய்.. நீங்க ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு இருங்கடா.. நான் பேசிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..!!” அசோக் திரும்பி நண்பர்களிடம் சொன்னான்.

“இ..இல்ல மச்சி.. நா..நாங்க பார்ஸல் வாங்கிட்டு ஆபீஸுக்கு போயிர்றோம்.. நீ அங்கேயே வந்து ஜாயின் பண்ணிக்கோ..!!” என்று சொன்ன வேணு,

“ஹேய்.. வாங்கடா..!!”

என்று மற்ற இருவரையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். விட்டால் போதும் என்று விழுந்தடித்துக்கொண்டு இடத்தை காலி செய்தனர் மூவரும்.

“மச்சி.. எமர்ஜன்சி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நம்பர்.. 102-ஆ 103-ஆ..??” நகரும்போது சாலமன் முணுமுணுத்தது அசோக்கின் காதில் விழுந்து அவனை கிலியடைய செய்தது.

அவர்கள் செல்வதையே சிறிது நேரம் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் படக்கென சேரில் அமர்ந்தாள். அமர்ந்ததுமே டேபிளில் கிடந்த முள்கரண்டியை கையில் எடுத்து.. அசோக்கின் முகத்துக்கு நேராக நீட்டி.. அவனை குத்திவிடுவது மாதிரி ஆட்டியாவாறே.. சீற்றமாய் கேட்டாள்..!!

“என்ன.. ஆள் கூட்டிட்டு வந்து மெரட்றியா..?? ஒரு அறைக்கு தாங்க மாட்டானுக ஒவ்வொருத்தனும்..!! இவனுகள்லாம் உனக்கு அடியாளுகளா..?? அப்டியே போட்டன்னா..!!!”

“ஸா..ஸாரி மீரா.. அ..அவனுக என் ஃப்ரண்ட்ஸ்…. ஏதோ தெரியாம..”

“ப்ரண்ட்ஸ்னா..?? இங்க பாரு.. உனக்கும் எனக்கும்தான் பேச்சு..!! உன் அல்லக்கையி.. நொள்ளக்கையி.. மொன்னக்கையிலாம்.. அங்க.. அங்க நிக்கணும்.. தூரமா..!! பக்கத்துல வந்தானுக.. பஞ்சர் ஆயிடுவானுக.. பஞ்சர்..!! சொல்லி வையி.. புரிஞ்சதா..?? இவனுக ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பானுக.. நான் கையை கட்டி பதில் சொல்லனுமா..??”

“ஓகே ஓகே..!! ரிலாக்ஸ்.. கூல் டவ்ன்..!!!!”

அசோக் அவளை சமாதானப் படுத்தும் விதமாக சொன்னான். அப்புறமும் சில வினாடிகள் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் ஆத்திரம் வெகுவாக குறைந்து போனவளாய் கேட்டாள்.

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *