எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

“ச்சே ச்சே.. அப்டிலாம் இல்லப்பா..!! உன் பேரை எப்படி நான் மறப்பேன்..? ஆக்சுவலா நேத்து நைட் உனக்கு ஒரு பெட் நேம்.. ஸாரி.. நிக் நேம் யோசிச்சு வச்சேன்.. அதை சொல்லி கூப்பிட ட்ரை பண்ணேன்.. அதுக்குள்ளே நீ…”

“போதும்.. ரொம்ப நடிக்காத..!!” அசோக் அவ்வாறு எரிச்சலாக சொல்ல, இப்போது மீராவின் முகம் பட்டென மாறிப் போனது.

“என்னாச்சு..???” என்றாள் மிகவும் சீரியஸான குரலில்.

அசோக் அவளுக்கு பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டே இருக்க, இப்போது சாலமன் அவ்வளவு நேரம் மனதுக்குள் மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த டயலாக்கை டெலிவரி செய்தான்.. குரலில் மெலிதான பதற்றத்துடனே..!!

“இ..இங்க பாருங்க.. நீங்க பண்றதுலாம் சரி இல்ல.. உங்க மனசுல என்னதான் நீங்க நெனச்சுட்டு இருக்கீங்க..??” சாலமன் கேட்கவும், இப்போது மீரா அவனை ஏறிட்டு முறைத்தாள்.

“இ..இந்த மொறைக்கிற வேலைலாம் வச்சுக்காதிங்க..!! எ..எங்க அசோக் உங்களை சின்ஸியரா லவ் பண்றான்.. நீங்க என்னடான்னா அவனை வச்சு காமடி பண்ணிட்டு இருக்கீங்க..!! ஏன் இப்படிலாம் பண்றீங்க..??” – இது வேணு சற்று தடுமாற்றத்துடனே.

“இப்படி சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்..?? கேக்குறோம்ல.. பதில் சொல்லுங்க..!! இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நாங்க போறதா இல்ல.. எங்க ஃப்ரண்டை நீங்க உண்மைலேயே லவ் பண்றீங்களா.. இல்ல சும்மா டைம் பாஸ்க்கு வெளையாடுறிங்களா..??” கிஷோரின் குரலிதான் சற்றேனும் தைரியம் தொணித்தது.

மீரா இப்போது அசோக்கை விட்டுவிட்டு அவனுடைய நண்பர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்து முறைத்தாள். அவளுடைய மார்புகள் ஒருமாதிரி குபுக் குபுக்கென ஏறி இறங்கின. அவளுடைய அமைதியை பார்த்த மற்ற மூவரும், இப்போது சற்றே தைரியமாகி..

“ஹலோ.. பேசுங்க..” என்றார்கள் கோரஸாக.

மீராவுக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. அமர்ந்திருந்த சேரை சரக்கென பின்னால் தள்ளிவிட்டவாறு ஆவேசமாக எழுந்தாள். அவளுடைய முகம் இன்ஸ்டண்டாய் ஒரு ஆத்திரச் சிவப்பை பூசியிருக்க,

“அடிங்ங்ங்..!! யார்டா நீங்கள்லாம்..??” என்று நரம்பு புடைக்க அவர்களை பார்த்து கர்ஜித்தாள்.

அவ்வளவுதான்..!! அவளுடைய அனல் கக்கும் பார்வையில் அனைவரும் அரண்டு போயினர். நால்வரும் சடக்கென இரண்டடி பின்னால் நகர்ந்தார்கள். சாலமன் மட்டும் பத்தடி தூரத்திற்கு அந்தப்பக்கம் நின்றிருந்தான். கிஷோர்தான் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மிடறு விழுங்கியவாறு சொன்னான்.

“நா..நாங்க.. நாங்கள்லாம்.. அ..அசோக்கோட ஃப்ரண்ட்ஸ்..!!”

“ப்ரண்ட்ஸ்னா.. பெரிய பருப்பா நீங்கள்லாம்..???? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!! உங்களுக்குலாம் நான் பதில் சொல்லிட்டு இருக்கணுமா..?? உங்களுக்கு இன்னும் பத்து செகன்ட் டைம் தர்றேன்.. அதுக்குள்ள ஒருபய என் முன்னாடி இருக்க கூடாது.. இல்லனா நான்.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!”

முகத்தில் முறைப்பும் உடலில் விறைப்புமாக மீரா பொரிந்து தள்ள, நான்கு பேரும் அப்படியே வெலவெலத்துப் போயினர். அசோக்கை தவிர மற்ற மூவரும் தயங்கி பின் வாங்கினர்.

“ம..மச்சி… வந்துட்றா.. போயிர்லாம்..!!”

சாலமன் தொடை நடுங்க அசோக்கை கை நீட்டி சுரண்டினான். உடனே அசோக் மெல்ல ஓரடி பின்னால் எடுத்து வைக்க, இப்போது மீரா அசோக்கின் முகத்துக்கு நேராக ‘டக்.. டக்..’ என விரலை சொடுக்கினாள்.

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *