எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

அப்போதுதான் அவனுக்கு பக்கவாட்டில் வெண்ணிற அந்த டாடா சுமோ வந்து சரக்கென்று நின்றது. உள்ளே தடிதடியாய் நான்கைந்து ஆட்கள். ஒருத்தன் முகத்திலும் கடுகளவு கூட கண்ணியம் இல்லை. எல்லோரும் கரடுமுரடு ஆசாமிகளாக காட்சியளித்தனர். சிக்னலுக்காக நின்றவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள, கவனம் கலைந்த அசோக் அவர்களை திரும்பி பார்த்தான்.

“என்னடா ஆச்சு..??”

“எடுக்க மாட்டேன்றான் மாமு..!! என்ன பண்ணலாம்..??”

“பரவால விடு.. நம்ம எஸ்.ஐட்ட அந்த நம்பரை குடுத்து, அவன் அட்ரஸ் ட்ரேஸ் பண்ண சொல்லலாம்..!!”

“ங்கொய்யால.. அவன் மட்டும் பணம் தரமாட்டேன்னு மொரண்டு புடிக்கட்டும்.. அவனுக்கு என் கையாலதான் மாமு சாவு..!!”

முகத்தில் வெட்டு காயத்துடன் கொடூரமாக இருந்த அவன், சொல்லிக்கொண்டே கையிலிருந்த கத்தியால் தாடியை சொறிந்தான். அரையடிக்கும் அதிகமான நீளத்தில், அகலமாக பல்பல்லாக பளபளத்தது அந்த கத்தி..!! அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக் அப்படியே ஆடிப் போனான். அடிவயிறு கலங்கிப் போனது அவனுக்கு.

‘ஆத்தி.. கொலைகாரப்பயலுக கூடவா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்..?? கத்தியும் கையுமால அலையுறானுக..??’

விரிந்த விழிகளுடனும், ஆவேன பிளந்த வாயுடனும் அந்த கத்தியையே சிலவினாடிகள் ‘பெக்கே பெக்கே’ என்று பார்த்தவன், அப்புறம் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியாவாறே, மெல்ல தலையை திருப்பிக்கொண்டான். கேஷுவலாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வது மாதிரி பாவலாவுடன், ஒரு கையை சட்டை பாக்கெட்டுக்குள் விட்டு தன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.

அப்புறம் ஒரு அரைமணி நேரம் கழித்து, அசோக் அந்த செல்போனை மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தபோது, வடபழனியில் இருக்கும் ஒரு மொபைல் ஷாப்பில் இருந்தான். புதியதொரு சிம் கார்டை அவனுடைய செல்போன் அல்ரெடி உள்வாங்கியிருந்தது.

“நம்பர் எப்போண்ணா ஆக்டிவேட் ஆகும்..??”

“நைட்டுக்குள்ள ஆகிடும் ஸார்.. நான் கேரண்டி..!!”

“ஓகேண்ணா.. தேங்க்ஸ்..!!”

சொன்ன அசோக், செல்போனை தூக்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பழைய சிம்மை கையில் எடுத்து, ‘த்தூ.. த்தூ.. த்தூ..’ என்று மனதுக்குள்ளேயே மூன்று முறை காறித்துப்பி, அந்தக்கடையில் இருந்த குப்பைக்கூடையிலேயே விட்டெறிந்தான்.

“டபுள் ஃபைவ்.. ட்ரிப்பில் ஃபைவ்னு முடியுது மச்சான்.. நல்லா ஃபேன்சி நம்பர் மாதிரி இருக்கு..!!” புது சிம்கார்ட் அட்டையை சுரண்டிக்கொண்டே சாலமன் இளிக்க, அசோக் அவனை கடுப்புடன் முறைத்தான்.

“கெளம்புடா வெண்ணை..!!” என்று எரிந்து விழுந்தான். திரும்பி நடந்தான்.

“ம்க்கும்.. எவ மேல இருக்குற கடுப்பையோ, என் மேல காட்டு..!!”

சாலமன் முனகிக்கொண்டே அவனுடன் நடந்தான். இருவரும் பைக்கில் ஏறிக்கொள்ள, அது ஆபீஸை நோக்கி பறந்தது.

அசோக் நிஜமாகவே மீரா மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அவளால் நேற்று இரவில் இருந்து அவன் மாற்றி மாற்றி அனுபவித்த டென்ஷனை எண்ணி எண்ணி எரிச்சலானான். ‘எதுக்கு இப்படி ஒரு சிக்கல்ல என்னை மாட்டிவிட்டா.. ஊர் பேர் தெரியாதவன்லாம் என் உசுரை எடுக்க அலைஞ்சுட்டு இருக்கானுக.. ச்சே.. இன்னைக்கு வரட்டும்.. அவளை வச்சுக்குறேன்..’ என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான்.

ஆபீஸில்..

“அவ நம்பரை உன் கைல எழுதுனதுக்கே.. உன் நம்பர் காலி ஆகிடுச்சு மச்சி..!! ஐ லவ் யூ வேற சொல்லிருக்கா.. அதுக்கு இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ..?? கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு..!!” வேணு வேறு அசோக்குக்கு டென்ஷன் ஏற்றினான்.

“அவ ஒன்னும் என் மேல இருக்குற ஆசைல ஐ லவ் யூ சொன்ன மாதிரி எனக்கு தோணலைடா..!!” அசோக் மனதில் இருந்த குழப்பத்தை வெளியே சொல்லிவிட,

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *