எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

அசோக்கால் அதன்பிறகும் அவளுடைய வசவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. படக்கென காலை கட் செய்தான். உதடுகள் குவித்து ‘உஃப்.. உஃப்.. உஃப்..’ என்று ஊதிக்கொண்டான். மீண்டும் அந்தப் பெண்ணிடம் இருந்து கால் வர, ‘இது வேலைக்காவாது’ என்று முடிவு செய்த அசோக், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். தூக்கி ஓரமாக போட்டுவிட்டு, படுக்கையில் விழுந்தான். போர்வையால் தன் உடலை முழுவதுமாக மூடிக் கொண்டான். இமைகளை இறுக்க மூடிக்கொண்டு உறங்கிப்போக முயன்றான்.

‘ச்சே.. என்ன பெண் இவள்..?? இவளை எல்லாம் எப்படி கட்டி மேய்க்கிறான் அந்த வாசு..?? ப்ச்… அந்த மீரா ஏன் இப்படி செய்தாள்..?? வேறு யாருடைய நம்பரையோ எனக்கு கொடுத்து.. ச்சே.. அவளால் எவ்வளவு டென்ஷன்..?? இப்படி ஒரு நல்ல.. இல்லை இல்லை.. ஒரு கேவலமான தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகி விட்டேனே..??’

எரிச்சலிலும் குழப்பத்திலும் தவித்தவன், எப்படியோ அன்று இரவு உறங்கிப் போனான். காலையில் குளித்து முடித்து ஆபீஸுக்கு கிளம்பும் போதுதான், ஆஃப் செய்து வைத்திருந்த செல்ஃபோனை எடுத்து, மீண்டும் ஆன் செய்தான். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, உடனே செல்போன் அலறியது. ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து கால்..!! எடுக்கலாமா வேணாமா என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு பிக்கப் செய்தான்.

“ஹலோ..!!”

“ஹலோ..!!” அடுத்த முனையில் ஒரு மென்மையான பெண்குரல்.

“ம்ம்.. யாரு..??”

“நான் யார்னு உங்களுக்கு தெரியாது.. நீங்க யார்னும் எனக்கு தெரியாது.. ஆனா உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கேன்..!! உங்களாலதான் இன்னைக்கு என் புருஷன் எனக்கு திரும்ப கெடைச்சிருக்காரு.. என் புருஷன்ட்ட உண்மைலாம் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க..!!” அந்தப்பெண் பேசிக்கொண்டே போக, அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“ஹலோ.. நீங்க யார் பேசுறீங்கன்னு மொதல்ல சொல்லுங்க..!!”

“நான் மிசஸ் வாசு பேசுறேன்.. நேத்து என் ஹஸ்பன்ட் கூட நீங்க பேசுனிங்க.. கரெக்டா..??” அந்தப் பெண் கேட்க, இப்போது அசோக் குழப்பத்துடன் நெற்றியை சுருக்கினான்.

“ஓ.. நீங்கதான் அவர் மிசஸா..?? அப்போ நேத்து நைட்டு எனக்கு கால் பண்ணி என்னை திட்டுனது..??”

“தெ..தெரியலையே.. நான் காலைல இருந்து உங்க நம்பருக்கு ட்ரை பண்ணி.. இப்போத்தான் கெடைச்சது..!!”

“இல்லைங்க.. அவங்களதான் வொய்ஃப்னு மிஸ்டர் வாசு சொன்னாரு..!!”

“ஓ.. அந்த பஜாரியா..??”

“கரெக்டா சொன்னிங்க.. யாருங்க அது..??”

“எ..என்ன கேக்குறீங்க நீங்க.. அவ யார்னே உங்களுக்கு தெரியாதா..?? அப்புறம் எப்படி..???? எ..எனக்கு ஒன்னும் புரியல..!!”

“எனக்கும் ஒண்ணுமே புரியலைங்க..!! ஆக்சுவலா தப்பு என் மேலதான்.. தப்பான நம்பருக்கு கால் பண்ணிட்டேன்.. அப்புறம் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!”

என்று ஆரம்பித்த அசோக், முதல் நாள் இரவு நடந்த விஷயங்களை அந்த பெண்ணுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்.

“அந்த மீராதான் இந்த மீரான்னு நெனச்சுட்டு.. நான் பாட்டுக்கு என்னன்னவோ சொல்லிட்டேன்..!!” அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சிரித்தாள்.

“ஹாஹா.. எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. ஹாஹா.. ஹையோ ஹையோ..!!”

“என்னங்க.. சிரிக்கிறீங்க..??”

“நீங்க மீரான்னு சொன்னது.. என் வீட்டுக்காரர் காதுல மீனான்னு விழுந்திருக்கும் போல..??”

“மீனாவா..?? அது யாரு..??”

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *