எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

மீரா குழப்பமாய் அசோக்கை பார்க்க, அவனோ தனது சட்டை பாக்கெட்டை துழாவி எதையோ தேடினான். பிறகு அந்த காகிதத்தை எடுத்தான். டேபிள் மீது வைத்தான். அதை அப்படியே மீராவின் பக்கமாய் நகர்த்தினான்.

“எ..என்ன இது..??” அவள் புரியாமல் கேட்டாள்.

“இதுவா..?? டேகோ பெல்லோட டேக் ஹோம் பில்..!! பரிட்டோ எயிட்டி ஃபைவ் ருபீஸ்.. டயட் கோக் ஒரு தேர்ட்டி த்ரீ.. டேக்ஸோட சேர்த்து.. ஒன் தேர்ட்டி ஃபோர்..!!” அசோக் புன்னகையுடன் சொல்ல, அவள் இவனை கடுப்புடன் முறைத்தாள்.

“பொண்ணுககிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னே உனக்கு தெரியாதா..??” என்று கடுமையாக கேட்டாள்.

‘பொண்ணுககிட்ட எப்படி பேசணும்னே உனக்கு தெரியாதா..??’ அந்த ரெட்டை ஜடை ப்ளஸ் டூ பெண் அசோக்கை பார்த்து, எப்போதோ கேட்ட கேள்வி, ஏனோ இப்போது அவனுடைய காதுக்குள் ரீங்காரமிட்டது. ஒருசில வினாடிகள் பழைய நினைவில் மூழ்கியவன், பிறகு சரக்கென தலையை சிலுப்பி நிகழ்காலத்துக்கு வந்தான். சற்றே தைரியமான குரலில் அவளிடம் கேட்டான்.

“ஹலோ.. இப்போ என்ன நான் மிஸ்பிஹேவ் பண்ணிட்டேன்..??”

“பின்ன..?? செலவும் பண்ணிட்டு.. பில்லும் நீட்டுற..??”

“வேற என்ன பண்றது..?? அட்லீஸ்ட் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லிருந்தாலாவது.. நம்மோட லவ்வருக்கு செலவு பண்ணிட்டோம்னு மனசுல ஒரு திருப்தி இருக்கும்..!! ஆனா.. இப்போ வரைக்கும் நீ எனக்கு யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர்தான..?? உனக்கு செலவு பண்ணனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா..?? பணத்தை வச்சுட்டு கெளம்பு..!!”

‘காசு வீணாக போகிறதே..’ என்று ஏதோ ஒரு கடுப்பில் தைரியமாக அசோக் அவ்வாறு பேசிவிட்டான். ஆனால் பேசியபிறகு, அவள் எதுவும் கடித்து குதறி விட போகிறாளோ என சற்றே மிரட்சியாய் அவளை ஏறிட்டான். அவளும் இவனை உர்ரென்று முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருசில விநாடிகள்தான். பிறகு பட்டென முகம் மாறினாள். திடீரென அவளுடைய முகத்தில் ஒருவித மலர்ச்சி.. உதட்டில் ஒரு புன்னகை..!!

“ச்சோ.. ச்ச்வீட்..!!!!” என்றாள் அசோக்கை பார்த்து.

அசோக் ஒருகணம் குழம்பிப் போனான். ‘கோபமாக சீறப் போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கொஞ்சுகிறாளே..??’. வியப்பாக அவளை பார்த்தான். அவளோ இவனுடைய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்று கண்டுபிடிக்க முடியாத மாதிரியான ஒருவித உணர்ச்சி அவளுடைய முகத்தில்.. இதழ்களில் இதயத்தை கொள்ளை கொள்கிற மாதிரியான ஒரு புன்சிரிப்பு.. கண்களில் ஒரு வசீகர மின்னல்..!! ஓரிரு வினாடிகள்.. அப்புறம் அந்த அழகு அதரங்களை அசைத்து.. தெள்ளத்தெளிவான குரலில் சொன்னாள்..!!

“ஐ லவ் யூ..!!!!!”

அசோக் அப்படியே ஆடிப்போனான்..!! ஓல்ட் மங்க் குவார்ட்டரை ஒரே கல்ப்பில் அடித்த மாதிரி குப்பென்று இருந்தது..!! இதயத்தில் ஒரு உற்சாக ஊற்று சர்ர்ர்ரென பீறிட்டு கிளம்பியது..!! காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை அவனால்..!! விழிகள் விரிந்து போயிருக்க.. பேச வார்த்தை இல்லாதவனாய்.. மீராவின் முகத்தையே திகைப்பாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!

அவளுடைய முகத்தில் இப்போது ஒரு திருப்தி புன்னகை..!! தன் பக்கம் இருந்த அந்த பில்லை ஒற்றை விரலால் அழுத்தி.. இப்போது மீண்டும் அசோக்கின் பக்கமாய் நகர்த்தினாள்.. அமைதியாக புன்னகையுடன் சொன்னாள்..!!

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *