இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 3 62

கிஷோருக்கு இனம் புரியாமல் எதோ ஒன்று நெஞ்சை துளைத்து கொண்டிருந்தது. ஆனால் எதுவென்று விளங்காமல் ராமை பின்னால் உக்கார வைத்து வண்டியை செலுத்தி கொண்டிருந்தான்.

அவன் ஓட்டிக் கொண்டே இருக்க அவன் காதில் அவன் நண்பன் ராகுலின் குரல் மிக மெல்லியதாக கேட்டது ஆனால் தெளிவு இல்லை, அது முன்பு என்றோ ஒரு நாள் ராகுல் கிஷோரிடம் கூறியது. “என்ன சொன்னான், என்ன சொன்னான்” என்று கிஷோர் தனக்குள்ளே கேட்க, இப்பொழுது ராகுலின் குரலின் ஒலி அளவு சற்று அதிகமாக இருந்தது.

“எங்க அம்மாவும், கலை அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ் டா”

“ஆமா இது சொன்னான், ஆனா இதுல பெருசா ஒன்னும் இல்ல, என் மனசு வேற ஒன்னை நினச்சு ரொம்ப உறுத்துது… அது என்ன??? இதுக்கு அப்புறம் எதோ ஒன்னு சொன்னானே, என்ன சொன்னான்??? என்ன சொன்னான்??” என்று கிஷோர் தனக்குள் மெதுவாக முனங்கி கொண்டே இருந்தான்.

வண்டி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது, ராம் ஒரு வித பதற்றத்துடன் பின்னால் அமர்ந்து இருந்தான்.

இந்த முறை ராகுலின் குரல் மிக மிக தெளிவாக கிஷோரின் காதுக்குள் ஒலித்தது. இது அன்று பீனிக்ஸ் மாலில் வைத்து சொன்னது.

“கலை யோட அம்மா எங்க சூப்பர் மார்க்கெட் ல தான் டா வேலை பாக்குறாங்க”

அய்யய்யோ என அவன் மனம் அழுது ஓலமிட வண்டியை சடாரென நிறுத்தினான், அவன் வீடும் வந்திருந்தது. ராம் எதுவும் சொல்லாமல் மெதுவாக வீட்டுக்குள் சென்றான்.

கிஷோர் பேயறைந்தவன் போல் வண்டியில் இருந்து இறங்காமல் தன் மொபைலை எடுத்து கலைக்கு அழைத்தான்.

ஹே கிஷோர் என்ன இந்த நேரத்துல போன் பண்ற. அதுதான் நாளைக்கு பேசலாம் ன்னு சொல்லிட்டேன் ல. உன்னால பொறுக்க முடியாதா?