இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 3 94

அறைக்கதவு திறக்க, அங்கே அம்மா நின்றாள், “ஏய் தங்கம் சாப்பிட வா ப்பா”

பலபல எண்ணங்கள் மனதில் ஓட, ஹாலில் உக்காந்து ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தான் கிஷோர்.

அம்மா: கிஷோரு, இந்த ராம் வீட்டுக்கு லேட்டா வருவேன் ன்னு ஏதாச்சும் சொன்னானா? மணி பத்தாக போகுது, இன்னும் ஆள காணும் பாரு.

கிஷோர்: அவன் வீட்ல இல்லையா.. சரி நீ போய் தூங்கு ம்மா, நான் போன் பண்ணி கேட்டுக்கிறேன்.

அப்பா: டேய் கிஷோரு, நீ எதோ நல்ல விஷயம் சொல்ல போறேன் ன்னு அம்மா சொன்னா, என்னப்பா அது.

கிஷோர்: (எங்க சொல்றது, அதுக்குள்ள தான் என்னென்னமோ கனவு வந்து என்னை குழப்பி விட்டுருச்சு என மனதில் நினைத்து) அப்பா, நேரமாச்சு ப்பா, நான் நாளைக்கு சொல்றேன், நீங்களும் போய் தூங்குங்க.

சில நிமிடங்கள் ஏதேதோ யோசித்து விட்டு, மொபைலை கையில் எடுத்து லட்டு பொண்டாட்டி என்று பதிவு செய்திருந்த கலையின் எண்ணுக்கு அழைத்தான். அவள் குணங்களில் சில மாற்றங்களை வர செய்ய விரும்பினான்.

ஹலோ?

கலை, உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நாளைக்கு மீட் பண்ணலாமா?

ஹலோ!!! யாரு நீங்க ன்னு சொல்லுங்க முதல்ல

அச்சோ!! சாரி கலை, நான் தான் கிஷோர், இதுதான் என்னோட நம்பர்.

கிஷோர் நீயா!! நான் சேவ் பண்ணிக்கிறேன் (கொஞ்சும் குரலில் சொல்லிவிட்டு) சரி என்ன திடீர்ன்னு இந்த நேரத்துல போன் பண்ணி நாளைக்கு பேசணும் ன்னு சொல்ற, என்ன மனசு மாறிட்டியா? லவ் வேண்டாம்னு நினைக்குறியா?

ஐயோ சத்தியமா இல்ல கலை. நீ இல்லாம நான் எப்படி, அது……………. ஒரு விஷயமா…….. பேசணும்..

ஹாஹாஹா (அழகாக சிரித்துவிட்டு) எனக்கு தெரியும்.. ஓவரா நடிக்காத

என்ன நடிக்கிறேன் நான்??