இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 3 66

வனிதா நான் ஒயின்ஷாப் புல்லா தேடிட்டேன் அவனை காணோம்..

போங்க அத்தான், அவன் இன்னும் அந்த சூப்பர் மார்க்கெட் ல இருக்குற மாதிரி தான் காட்டுது.. ஏதோ மரகதம் சூப்பர் மார்க்கெட் ன்னு இருக்கு. நீங்க எதுக்கும் அங்க போய் பாருங்க.

மரகதம் சூப்பர் மார்க்கெட் ஆஆ!!!!! அது என்னோட பிரண்ட் ஓட ஸ்டோர் ம்மா, அவன் ஏற்கனவே CID வேலை பாக்குறேன் இங்க வந்தான்.. கண்டிப்பா அங்க தான் இருப்பான்.

அத்தான் வெளிய வாரான் வெளிய வாரான்.. சீக்கிரம் ஓடி போயி பிடிங்க அவனை..

சரிம்மா நான் அவனை பிடிச்சிட்டு போன் பன்றேன்.

கிஷோர் அழைப்பை துண்டித்து விட்டு திரும்ப, மரகதம் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ராம் வெளியே வந்து கொண்டிருந்தான்.. கிஷோர் வேகமாக நடந்து ராமை நெருங்கினான்.

டேய் தம்பி, நில்லுடா

பதட்டமான முகத்துடன் திரும்பி எதோ நார்மலாக முயற்சி செய்து “அண்ணே!!! என்ன இங்க… எப்போ வந்த?

ராமின் சட்டையை பிடித்த கிஷோர் “எப்போ இருந்து டா இந்த பழக்கம்” ராமின் முகத்தை உற்று பார்க்க “டேய் நீ குடிச்சுருக்க ன்னு வனிதா போன் போட்டு சொன்னுச்சு.. ஆனா உன்ன பாத்தா குடிச்ச மாதிரியே தெரியல. எதுக்கும் ஒரு தடவ ஊதி காட்டு”

“ஐயோ நான் குடிக்கல.. அவ ரொம்ப டார்ச்சர் பண்ணுனா அதுக்கு தான் அப்டி சொன்னேன். வேணும் னா இந்த ஊதி வேணா காட்டுறேன்” என்று பக்கத்தில் வந்து ஊதி காட்ட.

“ச்சீ தள்ளி போடா!!! உன் வாய் நல்லா தான் இருக்கு. ஆனா உன் உடம்புல இருந்து என்ன டா எதோ வித்தியாசமான ஸ்மெல் வருது, வேர்வை கூட வேற என்னமோ கலந்து வருது. கூடவே ஷாம்பு ஸ்மெல்லும் வருது. என்னடா பண்ணி வச்சுருக்க”

“இல்ல அது ஒன்னும் இல்ல. நீ வா நாம வீட்டுக்கு போவோம்”

“டேய் ஒரு மணி நேரமா இந்த சூப்பர் மார்க்கெட் உனக்கு என்னடா வேல. நான் தான் அன்னைக்கே உன்கிட்ட தெளிவா சொன்னேன் ல. CID வேலை லாம் எதுவும் பாக்காத ன்னு. சரி யாருமே இல்லாத கடை ல உனக்கு என்னடா வேல”