இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 3 66

கிஷோர்: (முகத்தை கையால் மூடி பின்னால் சாய்ந்து) ஹையோ ஆண்டவா இந்த மோசமான கனவுக்கு என்ன தான் அர்த்தம்.

இதுக்கு லாம் எதுக்கு கடவுளை கூப்பிடுற, ஆண்டவனுக்கு பெரிய பெரிய வேலை எல்லாம் இருக்கு. என்கிட்டே கேளு நான் சொல்றேன்.

கிஷோர் திக்கென பதறி போய் அவனின் அறையை சுத்தி முத்தி பார்த்தான். ஒரு பரிட்சயமான குரல் மட்டும் கேட்க, எவரும் கண்ணுக்கு தென்படவில்லை. அறையின் கதவை மெதுவாக திறந்து தலையை மட்டும் நீட்டி ஹாலை எட்டி பார்த்தான். அவனுடைய அம்மாவும், அப்பாவும் முதுகை காட்டிக் கொண்டு டிவி யை பார்த்துக் கொண்டிருந்தனர். தலையை உள்ளிழுத்து மெதுவாக அறைக் கதவை சாத்திவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தான்.

“என்னடா இது இழவு, நான் பைத்தியம் ஆகிட்டேனா?” என முகத்தை இரு கைகளால் மூடி பொத்தென கட்டிலில் மல்லாக்க படுத்து சீலிங்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹாஹாஹா!! நீ பைத்தியம் ஆக நிறைய காலம் இருக்கு டா, அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு, சரி நான் யாரு ன்னு கண்டு பிடிச்சிட்டியா??

தெரியும்!!! என்னோட மானங்கெட்ட மனசாட்சி தான் நீ!!

ஹாஹா மனசாட்சி மட்டும் தான் நான், மானங்கெட்டவன் நீ தான்.

உனக்கு மட்டும் உருவம் இருந்து, நீ என் முன்னாடி இருந்திருந்தா, நடக்கிறதே வேற,

என்ன நடக்கும் ன்னு நான் சொல்றேன், உன் காதலி கலையை நான் தடவிட்டு இருப்பேன், நீ வேடிக்கை பார்த்துட்டு இருப்ப.

ஹேய்ய்ய் விஷயம் தெரியாம பேசாத, கனவுல நடந்ததை தான சொல்ற, அங்க நான் தடுக்க தான் போனேன். ஆனா மத்தவங்கள்லாம் என்னை பிடிச்சு வேடிக்கை பார்க்க வச்சுட்டாங்க.

எங்க!! எங்க!! கொஞ்சம் மறுபடியும் சொல்லு பாப்போம், மத்தவங்க உன்னை பிடிச்சு வேடிக்கை பாக்க வச்சாங்களா.. வெளிச்சம் வந்தப்போ கவனிச்சியா? அதெல்லாம் உன்னோட முகம் தான், நீயே தான் உன்னை தடுத்து உன்னை வேடிக்கை பார்க்க வச்சுக்கிட்ட..