அசுரன் Part 8 43

“ஓ அப்படியா…, அப்ப நைட்டுக்கு என் வீட்டில் சாப்பிட வந்திடு…

“இல்ல வேணாம் மேடம்,உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்..”

“என்ன அறிவு,என் உயிரையே நீ காப்பாற்றி இருக்கே..உனக்கு இது கூட செய்ய மாட்டேனா..ஆமா நீ non veg சாப்பிடுவே தானே…”

“என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க.. ஓடறது,போடறது, தாவறது,பறக்கிறது,குதிக்கிறது” இப்படி எதையும் விட மாட்டேன்…

அனு சிரித்து கொண்டே,ஓடறது,தாவறது ஓகே…அது என்ன குதிக்கிறது…

தவளை மேடம்,சூப்பரா இருக்கும்..சின்ன வயசில் இருந்தே பசங்களோட சேர்ந்து ஆற்றில் பிடிச்சு சாப்பிட்டு பழகிட்டேன்…

“ஏ, ச்சீ… அதெல்லாம் என் வீட்டில் கிடைக்காது..ஒன்லி மட்டன்,சிக்கன்,மீன்,முட்டை மட்டும் தான்…இன்னிக்கு உனக்கு ஸ்பெஷலா இருக்கும்..”

சரி மேடம்,நான் டூட்டி முடிச்சிட்டு வரேன்…

அறிவு கேபின் சென்ற உடன்,காத்தவராயன் ஆவி அவன் முன்னே வந்தது…

என்ன அறிவு, இன்று இரவு அனு வீட்டில் விருந்து போல…!

ஆமா காத்தவராயா….

“சரி,இரவு நான் உடம்பில் புகுந்து கொள்கிறேன்.அந்த விருந்தை நான் ருசிக்க வேண்டும்..”

“அது வந்து காத்தவராயா” என்று அறிவு ராகம் இழுக்க…

“என்ன நேற்று சொன்னது மறந்து விட்டாயா அறிவு,”என ஆவி கோபமாக கேட்க…

“அது இல்ல காத்தவராயா…போன தடவை பொற்காசு கொடுத்தே..இந்த தடவை என்ன கொடுப்பே”என்று கேட்க வந்தேன்.

“அது விருந்து முடியும் பொழுது உனக்கே தெரியும்..அதுவும் நீ ரொம்ப ஆசைப்பட்டு ஏங்கி தவித்த ஒன்று தான் உனக்கு கிடைக்க போகுது…”என சொல்லி விட்டு மறைந்தது…

காத்தவராயன் ஆவி என்ன கொடுக்கும்,?தங்க ஆபரணமா..,இல்லை வைர, வைடூரியங்களா…என ஆசையில் அறிவு கற்பனையில் மிதந்தான்…

அங்கே வேலைக்காரி துணை கொண்டு அனு எல்லாவற்றையும் சமைத்து முடித்தாள்.

“அம்மா வேலை எல்லாம் முடிந்து விட்டது,நான் கிளம்பட்டுமா,?வேலைக்காரி மஞ்சுளா கேட்டாள்..

“ஓகே மஞ்சுளா நீ எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் வச்சிட்டு கிளம்பு…”

அனுவிற்கு வியர்வையால் உடல் கசகசப்பாய் இருந்தது…அனு குளியல் அறைக்குள் புகுந்தாள்.

நைட் டூட்டி வாட்ச் மேன் வர,அறிவும் வேலை முடித்து கிளம்ப அவன் முன்னே ஆவி உடனே வந்தது…

என்ன ரெடியா?…ஆவி கேட்டது…

“ம்”,என்று அறிவு சம்மதம் கொடுக்க..உடனே அறிவு உடலில் காத்தவராயன் ஆவி புகுந்து கொண்டது….

அறிவு உடலில் புகுந்து கொண்ட காத்தவராயன் ஆவி அனு ஃபிளாட்டை நோக்கி அடி எடுத்து வைத்தது….

நிகழ் காலம்…