ரௌடி கும்பலின் தலைவன்,”இங்கேயே இவளை போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்போம்.”என கூறினான்..
அதில் ஒருவன் கத்தியோடு அவளை வெட்ட முன்னோக்கி சென்றான்.ஆனால் கண நேரத்தில் அவன் காணவில்லை..ரௌடிகள் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து முழித்தனர்.
“டேய் என்னடா ஆச்சு அவனுக்கு, வெட்ட போன ஆளையே காணோம்” என அந்த கும்பலின் தலைவன் கேட்டான்.
“அண்ணே,என்னவென்றே தெரியலன்னே,ஏதோ ஒரு உருவம் வந்து இடது பக்கமாக இருந்து வலது பக்கமாக ஒன்னு மின்னல் மாதிரி இழுத்திட்டு போச்சு…”ஒருவன் சொல்ல,
“அய்யோ அண்ணே,அக்கம் பக்கம் பாக்கறீங்களே…!கொஞ்சம் பின்னாடி திரும்பி மேலே ஆகாசத்த பாருங்க…எங்களை யாரோ மேலே ஆகாசத்தில் தொங்க விட்டு இருக்காங்க..”என மேலே இருந்து இருவர் கை கால்களை உதறி கொண்டு அலறினர்…
அறிவின் உடம்பில் இருந்த காத்தவராயன் ஆவி இருவரையும் மேலே தூக்கி பிடித்து அதுவும் உயரத்தில் இருந்தது…
“டேய் நீங்க என்னடா அந்தரத்தில் தொங்கறீங்க.உங்களை யாருடா பிடிச்சிட்டு இருக்கிறது…”
அப்பொழுது அவர்கள் பின்னாடி இருந்து அறிவு எட்டி பார்த்தான்.
“டேய் இவனை தான் நாம் அடிச்சி போட்டு வந்தோமே…இங்கே இவன் எப்படி..?என அவர்கள் குழம்பினர்.
“அடேய் நீ எப்படிடா கயிறு கூட இல்லாம 20 அடி உயரத்தில் என் ஆளுங்களை தூக்கி பிடிச்சு இருக்கே,அவங்க ரெண்டு பேரை கீழே விடுடா…”என அந்த கும்பலின் தலைவன் கத்தினான்…
“விட்டுட்டேன்டா…”என அறிவு அவர்களை இருபது அடி உயரத்தில் அவர்களை விட்டான்…ரௌடிகள் கத்தி கொண்டே தொப்பென்று கீழே விழ அவர்களின் கை கால் ஒடிந்தது…
“ஏண்டா,விடு என்றால் அப்படியே விடுவதா…!எங்கேடா அதுக்குள்ள மாயமாய் மறைஞ்சிட்ட…!கும்பலின் தலைவன் கேட்டான்…
இப்பொழுது மூன்று பேர் மட்டுமே மீதம் இருந்தனர்..
அவர்களின் முதுகில் யாரோ தட்டுவது போல் தோன்றியது…
“அண்ணே எங்க முதுகை யாரோ தட்டுவது போல் இருக்குண்ணே”என அவன் தலைவனிடம் பயந்து கொண்டே கூறினார்கள்..
மூன்று பேரும் பயந்து கொண்டே திரும்ப,அங்கே அறிவு நின்று கொண்டு இருப்பதை பார்த்து அலறினார்கள்…
“டேய் என்னடா மேஜிக் எல்லாம் காட்டற.ஒண்ணுமே புரியல,எப்படிடா மேலே இருந்து கீழே வந்தே…”
அறிவு ஒங்கி இருவரின் வயிற்றில் குத்த,அவர்கள் அந்தரத்தில் பறந்து பத்து,பதினைந்து அடி பின்னோக்கி விழுந்து மயங்கினர்…
இதை பாத்து கும்பலின் தலைவன் கையில் இருந்த கத்தியை பயந்து கீழே போட்டு விட்டான்…
“என்னடா பேய் அடி அடிக்கிற…என் ஆளுங்கள எல்லாம் என்னவோ பஞ்சு மூட்டை மாதிரி ஆகாசத்தில் அசால்ட்டா தூக்கி போடுற…”என அவன் பயந்து திரும்பி ஓட ஆரம்பித்தான்..ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருந்தான்..
என்ன இது ரொம்ப நேரமா ஓடி கொண்டு இருக்கோம்…ஆனா இன்னும் கார் வரல…ரௌடியின் தலைவன் திரும்பி பார்த்தான்..
ஆள்காட்டி விரலால் கொக்கி போல் வைத்து அவன் சட்டையின் காலரை அறிவு பிடித்து இருப்பதை பார்த்து அந்த அடியாளின் கால்கள் ஸ்தம்பித்து அப்படியே நின்று விட்டன..
