இருவரும் அவரவர் அறையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தனர்…
அம்மாவோ “தேனு……… நீ யாடி கதவ தட்டுன” என கத்தினாள்
தேன்” மா…..நான் இங்க தான் இருக்கேன் ஆனா ரவிய கானோம் மா பயமா இருக்கு” நடுக்கத்துடன்
அம்மா ” ஏய் அவன் வெளிய பாத்ரூம் போய்ருப்பான் டி பயப்படாத”
ஊரே அமைதியாக இருந்தது.. அவர்கள் இதய துடிப்பு அவர்களுக்கே கேட்டது , கடிகாரமுள் ட்க்.. டக்..டக்… என ஓசை எழுப்பி சுழன்று கொண்டிருந்து , சிறியமுள், பெரியமுள் மற்றும் நொடிமுள் என மூன்று முள்களும் ஒரே எண்னை காட்டி நின்றது .
மணி இரவு 12:00
அப்போது..
திடிரென தீக்குச்சி எரிந்து நடுஅறையில் வெளிச்சம் …** ஒரு நொடி இருவரும் பயந்தனர் பின், அம்மாவும் அக்காவும் அருகில் வர வர*… ரவிதான் மெழுகுவர்த்தி எடுத்து வந்துருக்கான் என நினைத்தார்கள் ஆனால் அது தாமரை பூ வடிவத்தில் எரிந்து கொண்டிருந்தது அதன் அடியில் இதயம் வடிவில் அழகான ரோஸ் நிறத்தில் கேக் இருந்தது .. ரவி அருகில் ஒரு நாற்காலியை இழுத்து அதன் மேல் வைத்தான்…. பின்பு அம்மாவுடைய கைபேசியை எடுத்து அதில் பிறந்தநாள் இசையை தேர்ந்தெடுத்து அதை இசைக்கவைத்தான்
இருவரும் கேக்கை பார்த்தனர் அதில் ” இன்று என் இரண்டு தேவதைகள் எனக்காக இந்த பூமியில் உதித்தநாள்* ” என சிறியதாக பச்சை நிற கிரீமிலும், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவுக்கரசி & தேன்மொழி ” என சிகப்பு நிற கிரீமிலும் எழுதப்பட்டிருந்தன.. இப்போது தான் இருவருக்கும் ஞாபகம் வந்தது தங்கள் பிறந்த நாள் என்று “ஆம்” தேன்மொழிக்கும் அம்மாக்கும் இன்று ஒரே நாளில் தான் பிறந்த தினம்
இருவரும் ரவியை ஆச்சிரியத்தை பார்த்து கொண்டிருந்தனர் .. அப்போது ரவி அவர்கள் அருகில் தன் கால்களை முட்டிபோட்டு இரண்டு கைளையும் விரித்து வைத்து கொண்டே …………..
“” என் உயிரான தங்க தமிழ் மகளே !” என கூறி அக்காவையும் ……..
“எங்களை பெற்ற திரு மகளே” “என கூறி அம்மாவையும் பார்த்தான்…
“”நீங்கள் … இருவரும்……நலமும் .. வளமும் பெற்று …… “””
“””வாழிய பல்லாண்டு …….. “”
“””என உளமார வாழ்த்துகின்றேன் …… “””
“””புன்னகை பொன் மலர்களே …. “”
“””இனி அகிலத்தின் நாட்கள் எல்லாம் …. “”
Superb story
sekram update pannunga 4 th part
G story excellent ithu vara na padichathulaeee decent ah azagaaa kondu poringaa enna onnu oru naaliki oru episode poduringa athanala wait pana mudilaa seekiram podunga g