“எனக்கு ஒன்னும் வேண்டாம் நீங்க சாப்புடுங்க.”
“ப்ளீஸ் ஹவ் சம்திங்.” என்றார் மகேஷ்.
“ஓகே எனிதிங், அப் டூ யு.” என்றேன்.
இரண்டு மாம்பழம் ஜூஸ் ஆர்டர் பண்ணினார்.
நான் அவர்ரை பார்த்தபடி இருந்தேன்.
“உங்களுக்கு நேற்று நான் ஓகே சொல்லுல என்று கோபமா?”
“நான் ஏன் கோப பாடணும் அது உங்கள் இஷ்டம்,” என் குரல் கடுமையாக இருந்தது.
“உங்களை எனக்கு பிடிச்சது முக்கியம் இல்லை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண சம்மதமா என்பது தான் முக்கியம்.”
நான் அவர் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அவர் தொடர்ந்தார்,” நான் உங்கள் போட்டோ பார்த்த உடனே ரொம்ப புடித்துவிட்டது அதற்க்கு அப்புறம் தான் பொண்ணு பார்க்க சம்மதித்தேன்.”
இப்போ என் கோபம் கொஞ்சம் தணிந்தது.
“அப்போ ஏன் நேற்றே இதை சொல்லல?”
“இல்லை, நான் முதலில் உங்கள் விருப்பம் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். பெண் பார்க்கும் முன்னே எப்படியோ உங்களை பார்த்து கேட்கணும் என்று நினைத்தேன் அனால் உங்கள் போன் அல்லது ஆஃபீஸ் டீடெயில்ஸ் எதுவும் எனக்கு கிடைக்கில.”
“ஏன் பெண் பார்பதுக்கு நான் சம்மதித்ததில் இது உங்களுக்கு தெரியாத.”
“இல்லைங்க சில நேரத்தில் பெற்றோர்கள் வற்புறுத்தல் தவிர்க்க முடியாமல் பெண்கள் இதுக்கு ஒப்புக்கொள்வார்கள் அதன்..”
“அப்போ தனியாக என்னிடம் பேசுனம் என்று சொல்லி என் ஒப்பீனியன் நேற்றே கேட்டு இருக்குலமே?”
“அப்படி நான் செய்து இருந்தால் எனக்கு விருப்பம் இருக்கு என்று தான் அது காட்டும். பின்பு வேண்டாம் என்றல் உங்கள் மேல் தன சந்தேகம் வரும்.”
“அப்போ உங்களுக்கு என்னை பிடித்துருக்கு.”
“உங்களை பிடிக்கிலே என்று எவனும் சொல்லுவானா. நான் முட்டாள் தான் அனால் அவளோ பெரிய மடையன் கிடையாது.”
அவர் சொல்லுவதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது, மனதில் சந்தோஷமும் வந்தது.
“ஒரு பெண்ணை பார்த்து அப்புராம் வேண்டாம் என்று சொன்னால் அந்த பெண் மனது எப்படி வேதனை படும் என்று தெரியும் அதனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை,” என்று மேலும் சொன்னார்
அவர் பெண் உணர்வுகளுக்கு எவளோ மதிப்பு கொடுக்கிறார் நினைத்த போது அவர் மேல் மரியாதை வந்தது.
“உங்கள் போட்டோ பார்த்து எனக்கு ஓகே என்றதும் தான் பெண் பார்க்க வந்தேன்.”
“சொல்லுங்க உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண சம்மதம் தானே?” “வேற யாரையும் நீங்க லவ் பண்ணவில்லையே?”
“நீங்க என்னை டெஸ்ட் பண்ணுறீங்களா, எனக்கு ஏற்கனவே பாய்பிரென்ட் இருக்க என்று?”
“அப்படி இல்லை, நீங்கள் சின்சியர்ரா ஒருத்தர் லவ் பண்ணி பிரேக் அப் ஆகியிருந்தால் தப்பு என்று நான் சொல்லுல. உங்க அழகுக்கு எத்தனை பேர் பின்னாலே அலைந்து இருப்பார்கள். நான் உங்களை அன்றைக்கு நேரில் பார்த்த போது அசந்துவிட்டேன், அப்போ மற்ற ஆண்கள் நிலை எனக்கு புரியும்.”
“நீங்கள் யாரையாவது லவ் பண்ணி பிரேக் அப் ஆகிரிக்க?” பதிலுக்கு நான் கேட்டேன்.
“சில பெண்கள் மேல் கிரஷ் இருந்து இருக்கு லவ் இல்லை.”
“நீங்கள் பதில் சொல்லுலேயே? சம்மதமா?” ஆவலும் பதற்றமும் அவர் குரலில் தெரிந்தது.
நான் அவர் முகத்தையே பார்த்தேன், ரொம்ப பதட்டத்தோடு இருப்பது போல் தோன்றியது. நேற்று அவர் செய்ததுக்கு இன்று பதிலுக்கு நானும் யோசிப்பது போல் அவர் முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன்.
“அப்படி பார்க்காதீங்க நீங்க வேண்டாம் என்று சொல்ல போறிங்களா பயமா இருக்கு. இவளோ வேகத்தில் என் இதயம் துடித்தது கிடையாது?”
“உங்களுக்கு தெரியுமா, இன்றைக்கு காலையில் எத்தனை கோயில் ஏறி இறங்கினேன் நீங்கள் ஓகே சொல்லணும் என்று.”
நான் ஹா ஹா என்று வாய்விட்டு சிரித்து விட்டேன்.