“எங்களுக்கு பெண்னை ரொம்ப பிடிச்சிருச்சி. ரொம்ப லட்சணமாக இருக்க, பார்க்கவும் அமைதியான பெண் போல் இருக்கு,” என்றார் அவர் அம்மா, என் வருங்கால மாமியார்.
இதை கேட்டு என் அம்மாவும் அப்பாவும் சிரித்து விட பொறுங்கள் என்று பாய்ந்தேன். நானா அமைதியான பெண்.
“நீ என்ன சொல்லுற,” என்று அவரை பார்த்து கேட்டார்கள்.
அவர் தன் அம்மாவிடம் எதோ கிசுகிசுத்தார். அவர்கள் பதிலுக்கு என்னமோ சொன்னாங்க. இவர் மறுபடியும் எதோ சொன்னார்.
அவர் அம்மா முகத்தில் சங்கடம் தெரிந்தது. “இவன் இன்னும் இரண்டு மூன்று நாள் டைம் கேட்கிறான்,” அவர்களின் குரலில் அவர்கள் சங்கடம் தெரிந்தது.
எனக்கு கோபம் சட்டென்று வந்தது. அம்மா என் கையை இறுக்கி என்னை அமைதியாக இருக்கும் படி செய்கையில் சொன்னார்கள்.
“இவன் என்ன பெரிய இவானா, எனக்கு மேல நல்ல பொண்ணு கிடைத்திடுமோ?”
நான் தரையை பார்த்தாலும் மனதில் கோபம் கொந்தளித்து எரிந்தது. அதற்கு பிறகு யாராலும் சகஜமாக பேச முடியவில்லை.
“சரிங்க, கூடிய சீக்கிரம் தகவல் சொல்லி அனுப்புறோம் ,” என்று அவர் அப்பா கூறி எல்லோரும் புறப்பட்டார்கள்.
சந்தோசமாக வந்தவர்கள் கொஞ்சம் வருத்தத்தோடு புறப்பட்டார்கள்.
அவர்கள் போன பிறகு நான் என் பெற்றோரிடம் கத்தினேன்,”இதற்கு தான் நான் இதற்கு சம்மதிக்கல.”
“கோப படாத டி பொண்ணுணா பொறுத்து இருந்து தான் ஆகணும். பார்ப்போம் என்ன சொல்லுறாங்க,” இது என் அம்மா.
“நிச்சையமா அவங்களுக்கு உன்னை பிடிக்கும் மா,” இது என் அப்பா.
“இனி அவங்க வேணும் என்றாலும் நான் ஒத்துக்க மாட்டேன்,” இது நான்.
அடுத்த நாள் ஒரு மூன்று மணி போல எனக்கு ஒரு போன் காள் வந்தது. அது நான் அறியாத நம்பர் என்பதால் நான் எடுக்கவில்லை. மறுபடியும் அந்த நம்பரில் இருந்து காள் வந்தது. சரி யார் என்று பாப்போம் நினைத்து எடுத்தேன்.
“ஹலோ ஸ்வதாவா?”
“யெஸ் ஸ்பிகிங்,” என்றேன்.
“நான் மகேஷ் பேசுறேன், இப்போ தான் உங்க நம்பர் கிடைச்சது உடனே கூப்புடுறேன்,” என்றார்.
மகேஷ் என்று தெரிந்தவுடன் உடனே கோபம் வந்தது.
“ஏன் என்னை கூப்புடுறீங்க, அம்மாவோ அல்லது அப்பாவிடம் பேசவேண்டியது தானே?” என்றேன் சிடு சிடுவென்று.
“உங்க கிட்ட தான் பேசணும்,” என்றார்.
“என் கிட்ட என்ன இருக்கு பேச?” என்றேன்.
“நீங்க கோபமாக இருக்கீங்க என்று புரியுது, பட் ப்ளீஸ் ப்ளீஸ் ஜஸ்ட் 15 மினிட்ஸ் உங்க கிட்ட தனியாக பேசணும்.”
சரி ஆம்பலைங்க உங்கள பத்தி என்ன தான் நினைத்து கிட்டு இருக்கீங்க என்று நறுக்கென்று நாலு வார்த்தை கேட்கலாம் என்று நினைத்து ஒத்துக்கொண்டேன்.
“அப்போ ஆறு மணிக்கு உங்கள் ஆஃபீஸ் வருகிறேன்,” மகேஷ் கூறினார்.
நான் அம்மாவிடம் கூப்பிட்டு இந்த விஷயத்தை சொன்னேன்.
“திட்டிராத டி அவரை, பொறுமையா என்ன சொல்லுறார் என்று கேளு.” “முடிந்த அளவு சீக்கிரமா என் கிட்ட நடந்ததா சொல்லு.”
சரியாக 5.58 அவர் கார் என் ஆஃபீஸ் முன் பார்க் செய்தார். ஆளு ரொம்ப பங்ச்சுவால் தான். அவர் நான் எங்கே இருக்கிறேன் என்று அங்கும் இங்கும் பார்வையில் தேடினர். என் ஆஃபீஸ் வேலை செய்கிற இரண்டு பெண்கள் அவரை திரும்பி திரும்பி பார்த்து சைட் அடிச்சிக்கிட்டு போனார்கள்.
நான் அவரிடம் சென்று,” ஹலோ நான் இங்கே இருக்கேன்.” ” சரி சொல்லுங்க என்ன விஷயம்.”
அவர் என்னை பார்த்து ஒரு புன்னகைத்தார்,” வாங்க ஒரு ஜூஸ் அல்லது காபி குடித்து கொண்டே பேசலாமே.”
“அதுவெல்லாம் வேண்டாம், இப்படியா சொல்லுங்க.”
“இல்லைங்க பர்சனல் மேட்டர் அந்த ஹோட்டல் போய் பேசுவோம்.”
அருகாமையில் ஒரு 3 ஸ்டார் ஹோட்டல் இருந்தது. சரி என்று நான் சொன்னேன். அந்த ஹோட்டல் ரெஸ்ட்டோர்ரெண்ட் கூட்டம் இல்லது ஒரு இடத்தில் உட்கார்ந்தோம். வேட்டர் உடனே எங்களிடம் வந்தான்.
“என்ன சாப்புடுறீங்க?” என்று மகேஷ் என்னை கேட்டார்.