ஹூ ஆம் ஐ – Part 3 67

கடந்த காலம்

ராகுலுக்கு விட்ட ஒரே குத்தில் அவள் கீழே விழ கார்த்தி மிச்சம் இருவரையும் பார்த்து “அவன் அடிச்சதுக்கு கணக்கை முடிச்சாச்சு. உங்க ரெண்டு பேருல எவனாச்சும் புதுசா கணக்கு தொடங்கணும்னு நினைச்ச என் மேலயோ இல்லை அருண் மேலயோ இப்போவே இங்கேயே கை வைங்க. நாங்களும் இப்போவே இங்கேயே கணக்கை செட்டில் பண்ணிடுறோம்”

இருவரும் ஒன்றும் செய்யாமல் அப்படியே நின்றனர்.

“ஹ்ம்ம் அந்த பயம் இருக்கட்டும். மச்சி நீ வா” என்று என்னை மீண்டும் கூட்டி கொண்டு ஹாஸ்டல் சென்றான்.

“இவனுங்க எல்லாம் தயிர்சாதம் மச்சி. நீ அப்போவே திரும்பி மொறச்சி இருந்தா அவனுக்கு அல்லு விட்டு இருக்கும்”

“படிக்க வந்த இடத்தில ஏன்டா பிரச்னை”

“சரி சரி உன்னை மாதிரி இல்லடா நான் படிச்சி தான் என் பாமிலிய காப்பாத்தணும் வழக்கமா சொல்லுறதை ஸ்டார்ட் பண்ணிடாதே. நீ பாட்டுக்கு உக்காந்து படிக்கிற வேலையை பாரு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”

“எங்கே டா போற”

“நான் சொன்னேன்ல என் கூட ஸ்கூலில் படிச்ச 3 பேரு இங்கே தேட் இயர்னு. அவனுங்க பக்கத்தில ஒரு அபார்ட்மெண்ட்ல இருக்கானுங்க அங்கே போய்ட்டு வரேன்”

“சரிடா“

அடுத்தநாள் மேகாவுக்கு ராகுல் என்னை அடித்த விஷயம் எப்படியோ தெரியவர அவளால் தான் எனக்கு இப்படி ஆனது என்று நொந்து கொள்ள நான் அவளை சமாதானம் படுத்தி கார்த்திககுடன் சென்று திருப்பி கொடுத்ததை சொன்னவுடன் தான் ஆசுவாசம் ஆனாள்.

“அவனுக்கு நல்லா வேணும் அருண். கார்த்திக் பண்ணியது தான் கரெக்ட்”

“எதுக்கு படிக்குற இடத்துல வம்பு”

“அவன் எல்லாம் படிக்கவா வர்ரான் பொருக்கி ராஸ்கல்”

“இனி உன்கிட்ட வர மாட்டான் மேகா”

“தேங்க்ஸ். பாப்போம் எவளோ நாளைக்குன்னு”

பின்னர் அதிகம் பேசவில்லை ஏனெனில் அவள் கேட்ட கேள்விகளை தவிர நானாக என்ன பேசுவது தெரியவில்லை. அடுத்த வாரத்தில் சைக்கிள் பரீட்சைகள் தொடங்க இருப்பதால் அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் கவனம் செலுத்தினேன். அவளது கார் வந்தவுடன் அவளை ஏற்றிவிட்டு மீண்டும் எனது ஹாஸ்டல் ரூம் திரும்பினேன்.

அடுத்த நாள் சனிக்கிழமை சாயங்காலம் அனிதா மேடத்தின் ட்ரீட்டிற்காக அவளின் பிளாட்டிற்கு சென்றோம். அனிதா மேடம் தான் “வாங்க வாங்க” என்ற புன்முறுவலுடன் கதவை திறந்தாள்.

ஸ்லீவ் இல்லாத குர்தாவும் இறுக்கமான லெக்கிங்க்ஸும் அவளின் உடல் வனப்பை தெளிவாக காட்டியது. கார்த்திக் மேலும் கீழும் பார்த்து ரசிக்க இருவரும் உள்ளே நுழைய இருவரும் வரவேற்பறை சென்று உக்கார்ந்தோம். அங்கே அனிதா மேடத்தின் புருஷன் விக்ரம் உட்கார்ந்து இருந்தான்.

“ஹாய் ஹாய் வாங்க” சோபாவில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டு இருந்தவன் தள்ளி உட்கார நான் அவன் பக்கத்தில் உட்கார எனது பக்கத்தில் கார்த்தி உட்கார்ந்தான். அவன் நன்றாக குடித்து இருக்கிறான் என்பது அவன் மீது வந்த வாடையே உணர்த்தியது.

“எப்படி இருக்கீங்க சார்”

“பிரில்லியண்ட். என்ன சாப்பிடுறீங்க விஸ்கி ஆர் பியர்”

“என்னங்க அவங்க என்னோட ஸ்டூடெண்ட்ஸ்” அனிதா மேடம் முறைத்தாள்.

“ட்ரீட்னு சொல்லிட்டு ஒன்னும் இல்லைனா”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்” நான் சொல்ல அதிசயமாக கார்த்திக் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்து இருந்தான்.

“அனிதா பசங்களுக்கு ரெண்டு பியர் எடுத்து வா” அந்த பக்கமாக இருந்த டேபிளில் இருந்த க்ளாசில் இருந்த சரக்கை குடித்து கொண்டே சொன்னான்.