ஹூ ஆம் ஐ – End 100

அதன் பிறகு அவள் ஒன்றும் பேசாமல் இது எல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று என்னை ஒரு மாதிரி பார்த்து கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.

“அவளை ஏண்டி இப்போ போக சொன்னே. கார்த்தி கடுப்பா ஆக போறான். உனக்கு என்ன தாண்டி வேணும். திரும்ப இப்போ நீ என் வந்தே” என்னிடம் கோவமாக கத்தினான்.

“ப்ளீஸ் அருண். தெரிஞ்சா தெரியாமலோ நீ எனக்கு தாலி கட்டிட்டே. ஜஸ்ட் ஒரே ஒரு நாள் மட்டும் நான் சொல்லுறதை கேளு அதுக்கு அப்புறம் நான் ”

“…” அவன் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான்.

“ப்ளீஸ் அருண்.”

“சரி”

நேரடியாக அவன் ஹாஸ்பிடல் கூட்டி சென்று டாக்டரிடம் தனியாக விஷத்தை சொல்ல டாக்டர் அவனை மயக்க நிலைக்கு கொண்டு போய் பரிசோதித்து விட்டு என்னை ரூமுக்கு கூட்டி வந்தார்.

“அருண் ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) அப்படிங்குற மனசிதைவு நோயால பாதிக்க பட்டு இருக்காரு”

“அப்படின்னா என்ன டாக்டர்”

“எது நிஜம் எது கற்பனை அப்படின்னே வித்யாசம் சொல்ல தெரியாது. அவங்களே கதாபாத்திரத்தை கற்பனை பண்ணி பேசிட்டு இருப்பாங்க. நிலைமை மோசமான ஒரு சில பேரு அவங்களுக்குன்னு ஒரு தனி கற்பனை உலகத்தையே உருவாகிப்பாங்க”

“…” ஒன்றும் புரியாமல் முழித்தேன், அதை புரிந்து கொண்ட டாக்டர்.

“உனக்கு புறியுற மாதிரி சொல்லுறேன்மா. தலைவலிச்சா என்ன பண்ணுவீங்க”

“ஹ்ம்ம் டேப்லெட் போடுவேன்”

“குட், அந்த டேப்லெட் என்ன பண்ணும்னு தெரியுமா”

“நோ”

“டேப்ளேட்ல இருக்க கெமிக்கல்ஸ் உங்களோட மூளைல இருக்க வலிய உணர வைக்கிற பைன் ரெசெப்டர தற்காலிகமா ஸ்டாப் பண்ணிடும்”

“ஹ்ம்ம்”

“நாம பாக்குறது பீல் பண்ணுறது எல்லாம் மூளை நமக்கு தர சிக்னல்ஸ் தான். அந்த சிக்னல் பால்ட் ஆயிடுச்சுன்னா இருக்குறது இல்லாம போகும். இல்லாம இருக்கிறது கண்ணுக்கு தெரியும்”. எனக்கு அழுகையே வந்தது.

“இதுக்கு என்ன காரணம் டாக்டர்”

“ஜெனெடிக்ஸ், அதீத தனிமை இல்லைன்னா ரொம்ப க்ளோஸ் ஆனவங்களோட டெத் கூட ரீசனா இருக்கலாம். நம்ம ஊருல இருக்க கிராமங்களல்ல எல்லாம் ஏதாச்சும் சாவு விழுந்தா கும்பலா கூடி ஒப்பாரி விட்டு அழுவாங்கா அது துக்கத்தில் இருக்கவங்களோட ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும். இப்போ அழறதுக்கு கூட யாருக்கும் டைம் கிடையாது. பீர் ப்ரெஸ்ஸார், ஒர்க் ப்ரெஸ்ஸார்னு எக்க சக்க பிரச்னை எல்லாம் போட்டு மனசுல வச்சி புழுங்கிட்டு இருந்தா ப்ரைன் வேற என்ன பண்ணும்.”

எனக்கு இப்போது ஓரளவுக்கு விளங்கியது. கார்த்திக் அருண் கண்ணெதிரே சுட்டு கொல்லப்பட்டது அவன் மனதில் நீங்கா துயர் ஆகி இருக்க வேண்டும். அவன் அம்மாவின் அரவணைப்பு இருந்தவரை அவனால் இந்த உலகை ஏற்று கொள்ள முடிந்தது. அம்மா இறந்த பிறகு இவனே கார்த்திகை கற்பனையில் உருவாக்கி கொண்டு இருக்கிறான்.

2 Comments

  1. I love it
    Fantastic writer

  2. Super ending

Comments are closed.