வாசமான ஜாதிமல்லி 6 21

“இங்கே பாரு சரவணா நான் அதை மறைக்க விரும்பவில்லை… ”

பிரபு முடிப்பதற்குள் “வாயை மூடு தேவடியா பயலே,” சரவணாவை கோபமாக குறுக்கிட்டான்.

“உன்னை போன்ற கேவலமான பொறுக்கிடம் இருந்து நான் நேர்மையாக நடப்ப என்று எதிர்பார்த்தது என் தப்பு. அருவருப்பானவான் அருவருப்பான செயலை தான் செய்ய தெரியும்.”

பிரபு வாய்வடைந்து போய் சரவணன் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தான்.

“நான் சொல்லுறத கவனமாக கேளு, உன் திருட்டுத்தனத்தை மீண்டும் செஞ்ச மவனே நீ செத்த.”

அடுத்ததா பத்து நிமிடத்துக்கு தரையில் உட்கார்ந்தபடியே சரவணன் பேசுவதை கேட்டபடி பிரபு இருந்தான்.

“உனக்கு அவளுடன் 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கு. அதற்குள் எல்லாம் சொல்லி முடிக்க வேண்டும். நான் ரொம்ப தொலைவில் இருக்க மாட்டேன். நான் கொடுத்த நேரத்துக்குள் நீ வரணும் என்று நான் எதிர்பார்க்கிறேன், ” என்று சரவணன் முடித்தான்.

பிரபு இருபது நிமிடங்கள் கழித்து தான் திரும்பி வந்தான். சரவணன் அந்த நேர வித்தியாசத்தை கவனிக்கவில்லை, ஏனென்றால் பிரபு அவன் வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணிநேரம் போல அவனுக்கு இருந்தது.

“சரி, அவளுடைய முடிவு என்ன என்று சொல்லு?” அவனுக்கு இருந்த பதற்றத்தை அவன் முகத்தில் இருந்து மறைக்கத் தவறிய படி சரவணன் கேட்டான். இப்போது வரும் பதில் அவன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருந்தது.

பிரபுவின் முகம் வெளுத்து போய் இருந்தது. “சரவணா, நீ உள்ளே போவது நல்லது என்று நான் நினைக்கிறேன்.” பிரபு வாற்றைகள் தடுமாறி வந்தது.

“என்ன ..” சரவணன் கேட்கத் தொடங்கினான், ஆனால் பிரபுவின் முகத்தைப் பார்த்து, மோசமான ஒன்றை எதிர்பார்த்து அவன் விரைவாக தன் வீட்டிற்குச் சென்றான்.

அவன் கதவின் பிடித்து திறக்கும் போது கதவு அப்படியே திறந்துகொண்டது. சரவணன் சத்தமின்றி தயக்கத்துடன் உள்ளே சென்றாரன். எல்லாம் மரண அமைதியாக இருந்தது. அவன் கண்கள் உள்ளே தேட, ஹாலின் ஒரு மூலையில் தரையில் அமர்ந்திருந்த மீராவைப் பார்த்தான். அவள் கால்கள் மார்பு வரை வளைந்தது, அவள் முகம் எதிரெதிர் சுவரில் வெற்றுத்தனமாகப் பார்த்தது கொண்டிருந்தது. அவள் எதுவும் மோசமாக செய்துகொள்ளவில்லை என்று அமைதி அடைந்தான். அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான், அவன் கால்கள் இந்த உலகின் எடையை எல்லாம் தாங்கினபோல மெல்ல நகர்ந்தது.