அழுதுட்டு இருந்த பையன் அப்போதான் நிமிந்து பாத்தான் அனுவை. அசந்துட்டான் அப்டியே. அழுகை அப்டியே நின்னுடுச்சு அவனுக்கு.
“அக்கா, நீங்களா? என்ன ஞாபகம் இருக்க அக்கா? அன்னைக்கு பஸ்ல ராத்திரி….” அப்டின்னு கண்ல கண்ணீர் கன்னம் வழிய வடிஞ்சுட்டே இருக்கப்ப சொன்னான் அந்த பையன்.
“ஹாஹாஹா உனக்கும் ஞாபகம் வந்துடுச்சா? எனக்கும் உன்ன ஞாபகம் வந்ததுனால தான்டா வந்தேன் உன்கிட்ட. சரி என்ன விஷயம்?எதுக்கு உக்காந்து அழுதுட்டு இருக்க? அப்புறம் எனக்கு உன் அம்மா விட வயசு அதிகம் டா. என்ன நீ அம்மானே கூப்பிடு இனிமே சரியா?”
“சரிங்கம்மா! அது ஒன்னும் இல்லம்மா எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்! நேத்து ராத்திரி தான் டியூஷன் பீஸ் கட்ட பணம் குடுத்தாரு. அத எப்டியோ தொலைச்சுட்டேன் மா! ஸ்கூலுக்கு போய்ட்டு திரும்ப போயி டியூஷன்ல பணம் கட்டலைன்னா எங்கப்பா கிட்ட சொல்லிடுவாங்க டியூஷன் மிஸ். அவரு என்ன அடி பின்னிடுவாரு. அந்த பயத்துலதான் மா ஸ்கூலுக்கு கூடபோகல! என்ன பண்றதுன்னே தெரியலம்மா!”
“அடப்பாவி! பெரிய ஆம்பள மாதிரி வளந்துட்ட ஆனா இதுக்கு போயி சின்ன கொழந்த மாதிரி அழுதுட்டு இருக்க. டியூஷன் பீஸ் எவ்ளோடா?”
“800 ரூபா அம்மா!”
“இதுக்குத்தான் நீ பயந்துட்டு இருக்கியா? சரி என் கூட வா! எங்க ஆஃபீஸ் போற வரைக்கும் என்கூட ஆட்டோல வா. அம்மா கூட இருந்தா பயம் போயிடும், அம்மா பணம் தரேன் அப்புறம் நீ ஸ்கூலுக்கு போ சரியா!”
“நெஜமாவா அம்மா சொல்றிங்க?”
“டேய், எழுந்து வா டா முதல்ல போலாம்”
ரெண்டு பேரும் நடந்து ஆட்டோ கிட்ட வந்தாங்க.
“என்ன மேடம் போகலாமா?”
“போகலாம் தம்பி. ஆமாம், பாத்தா ரொம்ப சின்ன பையன் மாதிரி அதாவது காலேஜ் பையன் மாதிரி இருக்கீங்க ஆனா கை எல்லாம் முரட்டு தனமா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் போல?”
அவன்கிட்ட இப்டி பேசிட்டே அந்த பையன ஆட்டோக்குள்ள ஏத்திட்டு தானும் ஏறுனா அனு.
“ஹா ஹா ஹா, ரொம்ப தேங்க்ஸ் மேடம். எல்லாம் ஜிம் தான் காரணம். என் வயசு என்ன இருக்கும்னு நெனைக்கிறிங்க?”
“என்ன ஒரு 27-28 இருக்குமா?”
“ஹய்யோ உங்கள மாதிரி ஒரு அழகி இப்டி சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம். ஆனா உங்களுக்கு ஷாக் ஆகுற மாதிரி ஒன்னு சொல்றேன் பாருங்க!”
ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணிட்டே, அவனோட டிரைவிங் லைசென்ஸ் எடுத்து நீட்டினான். அத வாங்கி பாத்த அனுவுக்கு தலையே சுத்திடுச்சு!
அதுல அந்த ஆட்டோக்காரன் போட்டோ இருந்துச்சு, கீழ இருந்த டீடெயில்ஸ் எல்லாம் படிக்க படிக்க அனுவுக்கு அவ கண்ணையே அவளால நம்ப முடியல. வாய் விட்டு படிச்சா!
“ராமலிங்கம்! பிறந்தநாள் 15-9-1981. என்னது 40 வயசு தாண்டின ஆளா நீங்க? சாரி உங்கள தம்பின்னு சொல்லிட்டேன், நியாயப்படி அண்ணன்னு சொல்லிருக்கணும். மன்னிச்சுருங்க அண்ணா!”
“மன்னிப்பெல்லாம் எதுக்கு தங்கச்சி. இது இயற்கை எனக்கு குடுத்த வரம், எனக்கு வயசு ஆகுறதே தெரியாது! நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டிங்களே?”
“அய்யோ அண்ணா. நீங்க என் கூட பொறந்த அண்ணன் மாதிரி நெனைச்சுகிறேன். தப்பாலாம் நெனைக்க மாட்டேன் சொல்லுங்கண்ணா!”
“அதே தான்மா நானும் சொல்ல வந்தேன், எனக்கு ஒரு தங்கச்சி இல்லையேன்னு நான் வருத்தப்படாத நாளே இல்ல தெரியுமா? நீங்க என்ன அண்ணன்னு சொன்னது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நானும் உங்கள தங்கச்சின்னு கூப்பிடவா இனிமே?”
“அச்சோ என்ன அண்ணா, கூட பொறந்த தங்கச்சி நான் இருக்கப்ப நீங்க வருத்தப்படலாமா? இனிமே என்ன தங்கச்சின்னே கூப்பிடுங்க அண்ணா! வாங்க போங்க லாம் கட் பண்ணிட்டு வா போ னு உரிமையா பேசுங்க அண்ணா!”
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல தங்கச்சி, ரொம்ப சந்தோசமா இருக்கும்மா. என் சீட்டுக்கு பின்னாடி என் நம்பர் இருக்கும் பாரு தங்கச்சி, அத உன் மொபைல்ல சேவ் பண்ணிக்கிட்டு அண்ணனுக்கு ஒரு ரிங் விடு அண்ணனும் உன் நம்பர் சேவ் பண்ணிக்கிறேன். இனிமே எங்க போறதுன்னாலும் அண்ணனுக்கு கால் பண்ணு சரியா?”
“சரிங்க அண்ணா!”
