டீச்சரின் அந்தரங்கம் Part 35 6

நீண்ட யோசனையில் இருந்த அமுதாவுக்கு எதோ ஒரு உறுத்தல் மனதில் அரித்துக் கொண்டே இருந்தது. முன்னால் நடந்து சென்ற குமார் திடீரென்று ஏன் நடப்பதை நிறுத்தி தான் உள்ளே வந்து விட முடியாதபடி வாசலை மறைத்து நின்றுக் கொண்டு லாவண்யாவிடம் பேச்சுக் கொடுத்தான்? என்ற கேள்வி அவள் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்க, விடை தெரியாமல், அல்லது விடை தெரிந்தும் அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தவள், கணவன் ஜடம் போல கிடப்பதை பார்த்து விட்டு, கொஞ்சம் வெறுப்போடு எழுந்து முன் அறைக்கு வந்தாள்.

என்ன செய்யலாம் என்று யோசித்து, டிவி பார்க்கவும் மனமின்றி, மொபைலில் எதாவது வீடியோக்களாவது பார்க்கலாம் என்று மொபைலை எடுத்து நெட் ஆன் செய்ய, உடனே வாட்ஸ் அப்பில் சில மெசெஜ்கள் வர, யாராயிருக்கும், இப்போதெல்லாம் அமுதாவிடம் வாட்ஸ் அப்பில் யாரும் மெசெஜ் அனுப்புவதில்லையே என்று வாட்ஸ் அப்பை ஓபன் பண்ண…

குமார்…

சில நிமிடங்கள் முன் தான் மெசெஜ் பண்ணியிருந்தான்.

அமுதாவுக்கு அந்த நள்ளிரவு நேரத்தில் குமார் மெசெஜ் அனுப்பியதில் எந்த தவறும் தெரியவில்லை. குமார் மீது அவளுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டிருந்தது. அவனை ஒரு நல்ல நண்பனாக நினைக்க துவங்கியிருந்தாள். அதனால் அவன் மெசெஜ் அனுப்பியதை தவறாக நினைக்காமல் சாட்டை ஓபன் செய்தாள்.

அதுவரை அவன் அமுதாவை எடுத்த போட்டோக்களில் சிலதை தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக அனுப்பியிருந்தான். போட்டோக்களின் துல்லியமும் கோணமும் ஃபில்டர்களும் அமுதாவுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒவ்வொரு போட்டோவாக அழுத்தி ஒவ்வொன்றுக்கும் ஹாட்டின் போட துவங்கினாள்.

நான்கைந்து போட்டோக்களுக்கு அவள் ரியாக்சன் போட்டதுமே குமாரிடமிருந்து ஹாய் என்று மெசெஜ் வந்தது. ஐயையோ… இவன் ஆன்லைனில் தான் இருக்கிறானா? அதை கவனிக்காமல் போட்டோக்களுக்கு ரியாக்சன் போட்டிருக்கிறோமே என்று அமுதாவுக்கு லேசாக துணுக் என்று இருந்தாலும், அது ஒன்றும் பெரிய விசயமாக படவில்லை அவளுக்கு.

அவளும் வெகு இயல்பாக ஹாய் என்று பதில் மெசெஜ் அனுப்பினாள்.

தூங்கலையா?

தூங்கனும்… நீங்க?

ம்… தூங்கனும்.

என்ன பண்ணிட்டிருக்கீங்க?

நத்திங். சும்மா போட்டோஸை பார்த்திட்டிருந்தேன்.

ம்… ரியலி ஆல் ஆர் சூப்பர். நல்லா எடுத்திருக்கீங்க.

தேங்க்யூ… உங்க ஹஸ்பண்ட் என்ன சொன்னார்?

எதைப் பத்தி…?

போட்டோஸை அவருக்கு காட்டலையா?

இல்லை. அவர் உள்ளே தூங்கிட்டிருக்கிறார்.

உள்ளேயா? அப்ப நீங்க எங்கே இருக்கீங்க? நைட் ஹவர்ஸ்லே வெளியே சுத்தாதீங்க.

இல்லை. நானும் உள்ளே தான் இருக்கேன். பட் ஃப்ரண்ட் ரூம்லே… ஷோபாலே…

வொய் அமுதா?

தூக்கம் வரலை. அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு தான்…

ஓ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *