மிஸ்….
மேடம்…
இருக்கீங்களா?
பேசுங்க…
என்னாச்சு….?
லைன்லே தானே இருக்கீங்க. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க…
ஹலோ…
இப்ப பேச முடியுமா முடியாதா?
சுனிலின் பேச்சு போன் வழியாக காதுக்குள் பாய…
உள்ளே லாவண்யாவும் என் கணவரும் மிக நெருக்கமாக உட்கார்ந்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க…
எனக்கு தலை சுற்ற துவங்கியது. நிற்க முடியாமல் தடுமாறினேன். சிட் அவுட் அலுமினிய கைப்பிடியை பிடித்து பிருஷ்டத்தை அதில் சாய்த்து என்னை நிதானித்துக் கொள்ள முயன்றேன்.
கண்களை மூடி நின்றேன். சுனில் உளறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தாலும் மூளையில் ஏறவில்லை. என் கணவரிடம் ஒரு நொடியில் ஏற்பட்ட மாற்றம் என்னை கொன்றுக் கொண்டிருந்தது. ஏமாற்றமும், வேதனையும் மனதை பிசைந்தது. நான் செய்தது அவருடைய தூண்டுதலில். ஆனால் அவர் செய்துக் கொண்டிருப்பதோ சுயநலத்திற்காக. துரோகம். நம்பிக்கை துரோகம். அவரை அப்படியே கொன்று விடலாம் போல கோபம் தலைக்கேறியது.
விழிகளை திறந்த போது, திரை சீலையும் காற்றில் விலக, ஹால் ஷோபா என் மனதை போலவே வெறுமையாக இருந்தது. எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை இப்போது. இருவரும் படுக்கையறைக்கே சென்று விட்டார்களா என்று விரக்தியாக மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். கடந்த சில மாதங்களாக நான் செய்த காரியங்களுக்கான பலன் இதுவோ என்று யோசித்தேன்.
விழிகளை திறந்த போது, திரை சீலையும் காற்றில் விலக, ஹால் ஷோபா என் மனதை போலவே வெறுமையாக இருந்தது. எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை இப்போது. இருவரும் படுக்கையறைக்கே சென்று விட்டார்களா என்று விரக்தியாக மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். கடந்த சில மாதங்களாக நான் செய்த காரியங்களுக்கான பலன் இதுவோ என்று யோசித்தேன்.
மனமெங்கும் அலையலையாய் எண்ணங்கள். உள்ளே நுழைந்து லாவண்யாவின் கன்னத்தில் பளார் என்று அரைந்து அவள் தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து வீட்டுக்கு வெளியே தள்ளலாமா என்று யோசித்த போது, அவளை அப்படி செய்தால் என் கணவரை என்ன செய்வது என்ற கேள்வியும் கூட எழுந்தது.
இப்படியே எல்லாவற்றையும் உதறி விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கி கால் போன போக்கில், கண் போன போக்கில் இலக்கின்றி எங்கேயாவது காணாமல் போய் விடலாமா என்று ஒரு விரக்தி மனதை அழுத்தியது.
யோசித்து யோசித்து எந்த ஒரு வழியும் தோன்றாமல், நேரம் கடக்க, கடைசியில் ஒரு முடிவெடுத்தேன்.
உடனே உள்ளே நுழையும் யோசனையை மாற்றிக் கொண்டேன்.
பத்து நிமிடங்கள் கழித்து வீட்டிற்குள் கால் எடுத்து வைத்த நான் எங்கள் வீட்டு படுக்கையைறை வாசலுக்கு சென்று நின்று உள்ளே பார்த்த போது….
அங்கே எங்கள் படுக்கையறையில், நானும் என் கணவரும் படுத்து உறங்கும் படுக்கையறையில், அந்த கட்டிலில் கால்களை தரையில் தொங்க போட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நெருக்கமாக அமர்ந்திருந்த என் கணவரும் லாவண்யாவும் உலகை மறந்த நிலையில் முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
சில நொடிகள் நின்று நிதானித்து விட்டு நான் எங்கள் வீட்டு படுக்கையறைக்குள் கால் எடுத்து வைத்தேன். மெல்ல உள்ளே நுழைந்தேன்.
அப்போதும் முத்தத்தில் திளைத்திருந்த இருவரும் என்னை கவனிக்காமல் தொடர்ந்து உதடுகளை சேர்த்து சேர்த்து மாறி மாறி சப்பிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட எச்சில் பரிமாற்றம் நடந்துக் கொண்டிருந்தது.
நான் ம்க்கும் என்று குரல் கொடுக்க, இருவரும் சட்டென்று முத்தத்தை உடைத்து விலகி என்னை அச்சத்தோடு பார்த்தார்கள். நான் இருவரையும் உணர்ச்சி எதுவும் காட்டாமல் பார்த்தேன்.
என் கணவர் என்னையே பார்க்க, நான் அவரை எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் வெறித்துப் பார்க்க….
அவர் என் கண்களை சந்திக்க முடியாமல் தடுமாறி விழிகளை தாழ்த்திக் கொண்டு…
பின் நிமிர்ந்து என் முகம் பார்த்து…..
