‘ஒன்னும் இல்லயே மாமா…’
‘சும்மா சொல்லுங்க மாப்ள..??’
‘…….’
‘அப்போ ஏதோ இருக்கு,,???’
‘ம்ம்….’
‘என்ன???’ என மாமா தான் அமர்ந்திருந்த சேரோடு வந்து உக்கார்ந்திருந்தார்
‘அது…’
‘அட சும்ம்மா சொல்லு மாப்ள….’
‘நான் ஊட்டி போயிருண்தேன்ல??’
‘ம்ம்…’
‘அப்போ அவ கிட்ட அவ்ளவா பேசல…’
‘அதுக்கு,…??’
‘அதுக்கு தான் உங்க மக என் கிட்ட பேசாம இப்டி எப்ப பாத்தாலும் மொரைச்சிகிட்டே இருக்கா,…??’
‘ஓ… அவ்ளோ தானா….’ என சிரித்தார்
‘ஆமா மாமா…. இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சுக்குறது எவ்ளோ கஷ்ட்டமா இருக்கு மாமா…’
‘ம்ம்…. சரி ஒன்னு பண்ணலாம்…’
‘என்ன மாமா…??’
‘Evng outing போலாம் சரியா… அங்க வச்சி அவள தனியா பேசி உங்க ப்ராப்ளம தீத்துக்கோங்க..!!!’ என சிரித்தபடி கூறினார்
‘ஐயோ மாமா…. அதெல்லாம் எப்டி சரி வரும்…. அவ தான் என் கூடயே பேசமாட்டுராளே…!!’
‘அதான் மாப்ள Psychology….. வீட்டுல வச்சி பெசுரத விட வெலில போய் பேசும் போது தான் பொண்ணுங்க மனசு குளிரும், அவங்க கோபமும் குறையும்…’
‘என்ன மாமா அனுபவம் பேசுது போல,,…???’ என நான் கிண்டல் செய்ய அவரும் அதனை ஒப்பு கொண்டார்
‘ஆமா டா மருமகணே…!!! உன் அத்தை இருக்காளே அவள கல்யாணம் ஆன புதுசுல அப்டி இப்டி பண்ணி தான் பணிய வச்சேன்…!!’ என சிரித்தார்
‘நீங்க உங்க பொண்டாட்டி கிட்ட பண்னத இப்போ நான் உங்க பொண்ணு கிட்ட பண்ணனும்னு சொல்ரீங்க…..’ என சிரித்து கொண்டே சொல்ல
‘Absolutely டா மாப்ள…’ என அவரும் சிரித்து கோண்டே என் தோளை தட்டி கொடுத்தார்..
