ஒய் செல்ஃபி ,உன்னை பார்ப்பதற்கே 27 வருடம் கடந்து விட்டது.இதற்கு மேலும் காத்து இருக்க முடியாது என்று ரோஜா மலர்களை நீட்டி i love you என்று சொல்ல, நான் அவன் காதலை ஏற்று கொண்டேன்.
ம்ம் …கதை இன்டர்ஸ்டிங்கா இருக்கே அப்புறம் ?
அப்புறம் நான் விஷ்வாவை விட்டுவிட்டு சிவாவை கல்யாணம் பண்ணி கொள்ள சென்றதால் விஷ்வாவிற்கு கோபம் வந்து விட்டது.நானும் சிவாவும் கல்யாணம் பண்ணி கொள்ள திருநீர் மலை போன போது அவன் மாலை தாலி எல்லாம் வாங்கி கொண்டு இருக்க ,நான் ஜிகர்தண்டா சாப்பிடலாம் என்று ரோட் கிராஸ் செய்தேன்.அப்போ வேகமாக கார் ஒட்டி கொண்டு வந்த விஷ்வா என் மேல் கார் ஏற்றி கொன்று விட்டான்.
ரொம்ப நல்லா சாவா இருக்கும் போல் இருக்கே ?
என்னது ?
பின்ன காதல் பண்ணி கல்யாணம் ஆனவங்கள போய் கேட்டு பாரு அவங்க சொல்வாங்க வண்டி வண்டியாக கஷ்டத்தை பற்றி .அப்புறம் சிவா நிலைமை என்ன ஆச்சு ?
அவன் இப்போ கல்யாணி பிரியதர்ஷன், பிரியங்கா என்ற வேற பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு இருக்கான்.
ஐயோ பாவம் நீ ! சரி கன்னியாவது கழிஞ்சியா?இல்லையா ?
இல்ல இப்போ எதுக்கு அதை பத்தி கேட்கிற ?
“ஐயோ ஐயோ தீனா உனக்கு double மச்சம்டா ஒரே உடம்புல ரெண்டு பொண்ணு இன்னிக்கு இரவு முழுக்க மஜா தான் ” என்று மல்லாக்க படுத்து கொண்டு நேரம் வேற போகுது சீக்கிரம் வாடி என் காவ்யா பேயே ,”எனக்கு வேற இது தான் பேய் கூட ஃபர்ஸ்ட் டைம் முதல் இரவு “என்ற கூற
பிரியா உடம்பில் இருந்த காவ்யா பேய் திரு திருவென்று முழித்தது
“ஏய் காவ்யா ஏன் பேந்த பேந்த முழிக்கிற,சீக்கிரம் வா நேரம் ஆகிட்டே இருக்கு .மாமன் இன்னிக்கு ராத்திரி முழுக்க உன் நிறைவேறதா ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்றி உனக்கு சொர்க்கத்தை காட்டுகிறேன்.வாடி என் காவ்யா பேயே என்று கை பிடித்து கட்டிலில் இழுத்து போட்டான்.”
அப்பொழுது அவன் விரலில் இருந்த பிரேம வைர மோதிரம் அவள் தொப்புளில் சென்று அழுத்தியது.சித்ரா பவுர்ணமியின் ஒளிக்கீற்று ஜன்னல் வழியே வந்து அவன் விரலில் அணிந்து இருந்த வைரமோதிரம் மீது பட்டு எதிரொலித்து அவள் தொப்புளின் மீது பரவ,பிரியா உடம்பு தரையில் விழுந்த மீன் போல் துடித்தது.
கண்கள் மேலே நிலை குத்தி நிற்க ,தலை வெட்டப்பட்ட கோழி போல் பிரியாவின் உடல் துள்ளி துடிக்க ,செல்கள் உள்ளுக்குள்ளே பரிணாமம் அடைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பிரியாவின் உடம்பு உருமாற,ஷெட்டி கையில் இருந்த மொபைல் ஸ்கிரீன் பேட்டரி down ஆகியதால் ஆஃப் ஆகியது.
இரு ஸ்ருதி நான் போய் சார்ஜ் போட்டு கொண்டு வரேன் .
துள்ளி துடித்த பிரியாவின் உடல் ,கொஞ்சம் கொஞ்சமாக காவ்யாவின் ஆன்மா உருவத்திற்கு ஏற்றார் போல் மாற பிரியாவின் தேக்கு நிற மேனி காவ்யாவின் பால் பன்னீர் நிறத்திற்கு மாற தொடங்கியது. தலையின் உள்ளே விண்விண்ணென்று வலிக்க காவ்யா தலையில் கை வைத்து கொண்டு கத்தி கொண்டு இருந்தாள். தீனதயாள் செய்வது அறியாமல் திகைத்து கொண்டு இருக்க, அவள் வாயில் இருந்து பிரியாவின் ஆன்மா பிரகாசமான வெளிச்சத்தோடு வெளியே வந்ததை தீனா பார்த்தான்.
மீண்டும் பிரியாவின் ஆன்மா அந்த உடலில் புக பலமுறை முயற்சி செய்து தோற்று கண்ணீரோடு இன்னொரு உடலை தேடி வெளியேறியது.
பிரேம வைரம் இது இறைவனுக்கு சமமானது.போற்றி பாதுகாக்கப்படும் இடத்தில் தெய்வம் போலவே இருந்து அந்த இடத்தை மேம்படுத்தும்.எல்லாமே மண்ணாக வேண்டும் இந்த உலகில்.ஆனால் அந்த அழிவில் இருந்து ஒன்று மட்டும் அழியாமல் திடமான ஒளி பொருளாகிறது.அது தான் வைரம்.ஒவ்வொரு வைர துண்டும் பல ஆயிரம் காலம் மண்ணை எதிர்த்து நின்று அந்த வரலாற்றை சுமந்து கொண்டு தான் வெளிப்படுகிறது.அது கிடைக்கும் இடம் ,விதம் இவற்றை வைத்தே அதன் தன்மையை தீர்மானித்து விடலாம்.அந்த வகையில் அதன் கதிர்கள் மனித தேகத்தில் ஊடுருவி அவர்களின் கிரக கதிர்களுக்கு ஏற்ப செயல்பட்டு பலனளிக்க கூடியவை.நமது உடல் பஞ்ச பூத கலவை.ஞானிகள் தங்கள் உடலை காற்றில் கரைத்து பஞ்ச பூதங்களின் கலவையால் வேண்டிய உருவை தரிப்பர்.பிரேம வைரத்திற்கு பஞ்சபூத கலவையை மாற்றும் சக்தி உண்டு.அப்பேற்பட்ட அரிய வகை பிரேம வைர கதிர்களும் ,சித்ரா பவுர்ணமியன்று மட்டுமே வெளியேறும் அடர்த்தியான சந்திரனின் ஒளிக்கதிர்களும் சேர்ந்து உயிரின் பிறப்பிடமான பிரியாவின் தொப்புள் குழியில் சென்று பாய பிளாஸ்டிக் சர்ஜரியே செய்யாமல் காவ்யா தன் சுய உருவத்தை பெற்றாள்.
நடக்கும் அதிசயத்தை பார்த்த தீனதயாள் முற்றிலும் ஆச்சரியம் ஆனான்.
இதுவரை பிறந்த மேனியாய் இருந்தாலும் பிரியாவின் உடலில் இருந்ததால் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை.
“என்ன ஆச்சு எனக்கு ? “தன் தோல் நிறத்தை பார்த்து இது பிரியாவின் கலர் இல்லயே என்று காவ்யா திகைத்தாள்.
