ஸ்ருதி Part 17 42

ஸ்ருதிக்கு இதை படித்ததும் அவள் இதழோரம் சிரிப்பு தான் வந்தது.இந்த இரண்டு நாட்களுக்குள் அவனை எப்படியும் பார்ப்பேன் என்று அவள் உள்மனம் சொல்லியது.ஆனால் அதற்காக அவள் சும்மா இருக்கவும் மனம் இல்லை.தன்னால் இயன்ற அளவு தேட எண்ணினாள்.

ஜன்னல் வழியே அவளுக்கு தூரத்தில் தெரிந்த ஒரு மலை அவளை ஈர்த்தது.

தாயம்மாவை பார்த்து அது என்ன மலை என்று கேட்க,

அது கந்தமாதன மலை என்று கூறினார்.மேலும் அங்கு பழங்காலத்தில் இந்திரஜித் என்ற அரக்கன் அரசாண்டதாகவும்,அதற்கு சாட்சியாக இன்னும் அங்கு கோட்டை ஒன்று உள்ளது என கூறினார். அந்த கோட்டைகுள்ளே அவன் வழிபட்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது என்றும் கூறினார்.ஆனால் அங்கு செல்லும் பாதை மிகவும் கடினம் என்று யாரும் அங்கு செல்வது இல்லை.அங்கு தான் அவன் வேண்டிய வரத்தை பெற்றானாம்.அதனால் அவன் பூஜை செய்து வழிப்பட்ட கோவிலில் சென்று விளக்கு ஏற்றினால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது என்றும் கூறினார்.

அப்ப நான் உடனே அங்க போகனும் என்று ஸ்ருதி கூற

இல்லம்மா,உங்களை இரண்டு நாட்கள் கிளாஸை தவிர வேறு எங்கும் செல்ல கூடாது என்று ஐயா உத்தரவு.உங்கள் பாதுகாப்பிற்கு இரண்டு போலீஸை வேறு விட்டு சென்று உள்ளார்.

ஸ்ருதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

ஷெட்டி மனதை நொந்து கொண்டே அந்த மலையை ஏறி கொண்டு இருந்தான்.
“ஷெட்டி உன் நிலைமை எப்படி ஆயிடுச்சு பார்த்தியா?உன்னை பார்த்து எல்லோரும் ஓடி ஒளிந்த காலம் போய்,இப்போ ஒரு சாதாரண பொண்ணை பார்த்து ஓட வேண்டியதாகி விட்டது பார்த்தியா! அதுவும் உன் சொந்த வீட்டை விட்டு?எல்லாம் விதி என்று தன்னை தானே மனதுக்குள் நொந்து கொண்டே ஏறினான்.”

மலையில் ஏறி அந்த கோட்டையை வந்தடைந்தான்.

பாழடைந்து கிடந்த கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க அது ஏனோ தனக்கு பரிட்சயமான முன்பு பார்த்த இடமாக தோன்றியது. இவ்வளவு நாட்களாக இங்கு இருந்தும் தனக்கு ஏன் இங்கு வர தோன்றவில்லை என்று அவன் மனம் கேட்டது.இங்கு தான் ஸ்ருதிக்கும்,அவனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்க போகிறது என்று அவன் அறியவில்லை.

அப்பொழுது அசரீரியாக “வா இந்திரஜித் “என்ற குரல் கேட்டது .

குரல் வந்த திசையை பார்க்க, யாரும் அங்கே தென்படவில்லை.

என்னை இங்கே பாறை இடுக்கில் பார் என்று குரல் வர,அந்த பாறை இடுக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

அதன் உள்ளே ஒரு முனிவர் ததரை தொடும் அளவிற்கு தாடி வைத்து கொண்டு, அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்.

யோவ் நீ எப்படியா இதற்குள் போன? ஷெட்டி ஆச்சரியமாய் கேட்க,

முனிவர் தன் உருவத்தை எலியின் அளவுக்கு சிறிதாக்கி கொண்டே வந்து,பாறை பிளவில் இருந்து வெளியே வந்து மீண்டும் உருவத்தை பழைய உருவத்திற்கு மாற,

அதை பார்த்து வியப்பில் ஆழ்ந்த ஷெட்டி ” எப்படியா இந்த மாதிரி எல்லாம் மேஜிக் பண்ற எனக்கும் சொல்லி கொடுய்யா?”

ஹாஹாஹாஹா என்று அந்த கோட்டை சுவர்கள் அதிரும்படி சிரித்தார்.

“என்ன இந்திரஜித் இதெல்லாம் என்ன ஜுஜுபி நாளை இரவு தான் உனக்கு ராஜ சுகமே கிடைக்க போகிறதே!”என்று ஷெட்டியைப் பார்த்து கூறினார்.

சாமி என்ன ஜுஜுபி என்ற வார்த்தை எல்லாம் பேசறீங்க,என் பேர் ஒன்னும் இந்திரஜித் இல்ல,என் பேரு ஷெட்டி.

1 Comment

  1. தொடர்ந்து எழுதுங்க நன்றாக உள்ளது

Comments are closed.