மோகினி 246

அதுவரை இயற்கையோடு சேர்ந்தே ஒன்று போல் வாழ்ந்து வந்த மக்கள் அந்த நொடி விஷம் கலந்த கலியுகத்தில் கால் வைத்தனர். இனம் புரியாத வன்மம் அவர்களை இத்தனை நாள் காத்த வனமோகினி மீது, ஊரே கையில் தீப்பந்தம் எடுத்து மலை குகை நோக்கி புறப்பட்டனர்.

இது எதுவுமே அறியாத மோகினி குளித்து நீராடி தன் நெய்த அழகிய பட்டு புடவையில் ஒன்று உடுத்தி, அதிக நெடி வாசம் தரும் காட்டுமல்லி தலையில் சூடி, கண்ணுக்கு மையிட்டு நெற்றிக்கு பொட்டு வைத்து அத்துணை அழகாய் அதே மண் பொம்மையை கையில் வைத்து குகை வாசலில் தீ மூட்டி அக்கினி தேவனை மனதில் வணங்கிய படியே தன் காதலனுக்காக காத்திருந்தாள் பாவம் அந்த பாவி மகள்.

ஒருபுறம் இந்திரன் மற்றும் அவன் மகனும் தயங்கிய படியே கிளம்பி வர, மறுபுறம் தன் தெய்வத்தையே எதிர்த்து அந்த மலையை சுற்றி உள்ள பல கிராம மக்கள் கோபத்தோடு படையெடுக்க.

இதை அறியாது காத்திருந்த வனமோகினியை வருத்தத்தோடு தழுவி சென்றது அந்த தென்றல்.

1 Comment

  1. Our kathaiya mutikama next kathaiku yathukiya pora

Comments are closed.