சான்ஸே இல்லை… சும்மா போட்டு தாக்கு…10 86

“நான் யூ.எஸ் ல இருந்து பேசுறேன். மிஸ்டர் அருண் இருந்தார்ல அவரோட மேனேஜர். ஞாபகம் இருக்கா?”

“ஞாபகம் இருக்கு சார். அருண் சார் காணாம போனப்போ நீங்க எங்கிட்ட பேசுனீங்க. அருண் சார் கிடைச்சிட்டாரா?”

“நோ ராம். அவரு கிடைக்கவே இல்லை. அவரு இன்னும் உயிரோட இருப்பாருங்கிற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. நான் கூப்பிட்டது வேற ஒரு விஷயத்துக்காக.”

“என்ன விஷயம்?”

“நீங்க இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா இல்லை வேற எங்கையாவது வேலைக்கு சேர்ந்துட்டீங்களா?”

“நான் வேலை தேடிட்டு தான் சார் இருக்கேன்.”

“ஓகே. அப்போ உங்களுக்கு அந்தப் பழைய வேலைக்கு திரும்பி வர விருப்பம் இருக்கா?”

“பழைய வேலைக்கா?”

“ஆமா. இங்க அருண் சாரோ வைஃப், அதாவது எங்க முதலாளி அம்மா, அந்த பங்களாவை பழையபடி நல்லா மெய்ண்டெய்ன் பண்ணனும்னு நினைக்கிறாங்க. அருண் சார் காணாம போனதுல இருந்து அது பூட்டித்தான் கிடக்குது. அதான் நீங்க, அப்பறம் அங்க வேலை பாத்த பழைய வேலைக்காரங்க எல்லாரையும் மறுபடியும் கூப்டு வச்சிக்கலாம்னு முடிவு பண்ணியிடுக்கோம். ஆர் யூ இன்டெரெஸ்டட்?”

“கண்டிப்பா சார். நான் வர்றேன்.”

2 Comments

  1. Bro I’m interesting your story telling please write stories

Comments are closed.