சான்ஸே இல்லை… சும்மா போட்டு தாக்கு…10 86

“நீங்க வேற எதுவும் யோசிக்க வேண்டாம். அதே சம்பளம், அதே வேலை. அங்க இருக்க லோக்கல் பீப்பிள் கிட்டையும் பேசிட்டோம். நீங்க எப்போ பொறீங்கன்னு முடிவு பண்ணிட்டு எங்கிட்ட கொல்லுங்க, நான் அவங்களை எல்லாம் வரச் சொல்லிடறேன். ஓகே?”

“ஓகே சார்.”

“தேங்க் யூ ராம். நீங்க இல்லைன்ன நான் வேற ஆளைப் எப்பிடி கண்டுபிடிக்கிறதுன்னு பயந்துகிட்டே இருந்தேன். சரி அப்போ நீங்க எனக்கு நாளைக்கு கன்ஃபார்ம் பண்ணுங்க.”

“ஓகே. தேங்க்ஸ்.”

நான் ஃபோனை வைத்துவிட்டு அம்மாவைப் பார்த்தேன். மூடிய கார் என்பதால் எதிர்முனையில் பேசியவரின் குரலும் அம்மாவுக்கு தெளிவாகக் கேட்டிருக்கும். அவள் எந்த விவரமும் என்னிடம் கேட்கவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு,

“நானும் உன் கூட வர்றேன்.” என்றாள்.

2 Comments

  1. Bro I’m interesting your story telling please write stories

Comments are closed.