சுருதி: “தூங்கலயா?”
திலீப்: “தூக்கம் வர்ல”,
சுருதி: “ஏனாம்?”
“தெரியல”
“எனக்குத் தெரியும்”
“என்ன?”
“கோகிலா”
திலீப்புக்குத் தூக்கிவாரிப் போட்டது. கோகிலாவை தான் காதலிப்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தான். அப்பாவுக்குத் தெரிந்தால் கோகிலாவின் குடும்பத்துக்கே ஆபத்து. இப்படித்தான் எல்லா காதலர்களும், யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொள்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா?
திலீப்: “என்ன? என்ன? கோகிலாவா? யார் அது?”
சுருதி: “நடிக்காத, ஆண்டுவிழா, ஜூவாலஜி லேப்”
திலீப்புக்கு வியர்த்துக் கொட்டியது.
“ப்ளீஸ் ப்ளீஸ், அப்பாகிட்ட சொல்லிடாத, என் செல்லத் தங்கச்சியில்ல”
“இப்பதான் தங்கச்சி உன் கண்ணுக்குத் தெரியறேனா?”
“நீ எப்பவுமே என் செல்ல புஜ்ஜிம்மாதான்”
“சரிசரி, வழியாத, அப்பாகிட்ட சொல்லமாட்டேன்”
“Thank you very much”,
“But one condition, நீ இனிமே என்கூட அதிக நேரம் செலவழிக்கனும்”,
“சரி செல்லம், இத்தனை நாள் உன்கூட சரியா பேசாதது தப்புதான்”
“சரிசரி, இன்னைல இருந்து நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ், ஓ.கே?”
“டபுள் ஓ.கே, குட்நைட்”

Punda madhuri kadhaiya maathi kondu poitaaa