கொடுத்துவச்சவன் – Part 5 86

“மார்க்கெட்டிங்கிலே தான் இருக்கார்… எங்க அண்ணாவும் இப்பத்தான் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்டுக்கு வந்திருக்கார்….”

கிரிஜா ஆன்ட்டி மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.. ஆண்கள் இருவரும் பேச வில்லை… எங்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…

“சரி நீங்க எல்லாம் பேசிட்டு கீழே வாங்க… நான் போய் மஞ்சுவுக்கு ஹெல்ப் பண்ணறேன்…..”

“நீ போய் மஞ்சுவை கெடுக்காம இருந்தா சரி…” கிரிஜா ஆன்ட்டியின் வீட்டுக்காரர் சிரித்தபடியே சொன்னார்…”என் தங்கை சமையலில் எக்ஸ்பர்ட்… “

“அப்படின்னா நான் மட்டமா?…” கிரிஜா ஆன்ட்டி பொய் சண்டைக்கு வந்து விட்டார்கள்…

“நான் அப்படி சொல்லலடி… நீயும் எக்ஸ்பர்ட்தான்….” கேசவன் மாமா சிரித்தார்…

கிரிஜா ஆன்ட்டி பொய்யாய் கோபித்துக்கொண்டு கீழே போனார்கள்… நாங்கள் மூவரும் பேசிக்கொண்டு இருந்தோம்… கேசவன் மாமாவும் ஒரு தண்ணிலாரி தான் என்று தெரிந்தது… இருவரும் வந்ததே மிலிட்டரி சரக்கு ரெகுலராய் என்னை வாங்கச்சொல்வதற்க்குத்தான்…

நானும் கொஞ்ச நேரம் பிகு பண்ணிக்கொண்டு ஒத்துக்கொண்டேன்… இருவருக்குமே சந்தோஷம்….

“சரக்கு கிடைச்சதும் வீட்டுக்கு கொண்டு வந்திடாதே… எனக்கோ இல்லை கேசவனுக்கோ போன் பண்ணு… நாங்க வாங்கிக்கறோம்…….”

“சரிங்க மாமா….” நான் பணிவாய் தலையாட்டினேன்….

“நான் சொல்லலே… ரவி நல்ல பையன்னு… “மாமா என்னை புகழ்ந்தார்…

“இத்தனை நாள் இது தெரியாம போச்சே….” கேசவன் மாமா அங்கலாய்த்தார்….

“எப்படியாவது டீமிலே விளையாட சான்ஸ் வாங்கி, பர்பார்மென்ஸுலே அசத்திடு…. அப்புறம் உன் லைப் எங்கியோ போயிடும்….” கேசவன் மாமா டிப்ஸ் தந்தார்…

“பத்மினியை பத்தி நீ என்ன நினைக்கறே?..” கேசவன் மாமா திடீரென கேட்டார்…

“சிவாஜியும், பத்மினியும் சேர்ந்து நடிச்சா நல்லா இருக்கும்னு எங்க அப்பா சொல்லுவாரு….” நான் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னேன்.

இருவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை…. விழுந்து விழுந்து சிரித்தார்கள்… இருவரும் அவ்வப்போது ஏதோ ஜாடையாய் பேசிக்கொண்டார்கள்…..
“அட அந்த பத்மினியை சொல்லலை….. என் மருமக பத்மினியைத்தான் கேட்டேன்…”
“உங்க மருமகளா?…” நான் புரியத மாதிரி குழப்ப முகம் காட்டினேன்.

“உனக்கு மஞ்சுளா ஆன்ட்டி மகள் பத்மினியையாவது தெரியுமா?…”

“அந்த பத்மினியை கேட்கறீங்களா? தெரியுமே? ஏன்?…”

“அவதான் எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறா… சின்னக் குழந்தையா இருக்கறப்பவே முடிவு பண்ணியது….” கேசவன் மாமா என்னை ஆழம் பார்த்தார்..

“பத்மினி உங்களுக்கு மருமகளா வருவதற்கு நீங்க கொடுத்து வச்சு இருக்கனும்… ரொம்ப நல்ல பொண்ணு..” எனக்கு அதுக்கு மேல அதிலே ஆர்வம் இருக்கிற மாதிரி காட்டிக்க வில்லை… “எனக்கு ஒரு தங்கை இருக்கிறா…எங்க சித்தி பொண்ணு.. அவ பத்மினி மாதிரிதான் இருப்பா….எனக்கு பத்மினியை பார்த்தா அவ ஞாபகம்தான் வருது…”

இருவருக்குமே முகம் மகிழ்ச்சியில் வெளிச்சமாகியது…ஒருவரை ஒருவர் பார்த்து புன்சிரிப்பு சிரித்துக்கொண்டனர்…நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்…

நான் நைசாய் பத்மினிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்…”கால் மீ அண்ணா” என்று.. சிறிது நேரத்தில் பதில் வந்தது..”ஓ.கே. ஐ அண்டர்ஸ்டுட்…”

சிறிது நேரத்தில் கிரிஜா ஆன்ட்டியும் , பத்மினியும் மேலே வந்தார்கள்…

“என்ன வெகு நேரமா பேசிட்டே இருக்கீங்க….” கிரிஜா ஆன்ட்டிதான் பேசினார்கள்…

“அப்பா சாப்பிட வாங்கப்பா… மாமா நீங்களும் வாங்க மாமா…. ரவி அண்ணா நீங்களும் வாங்க அண்ணா… சாப்பிடலாம்….”

அந்த நேரம் பார்த்து பத்மினியின் செல் ஒலித்தது… “யாரு பத்மினி அது…” கேசவன் மாமா தான் கேட்டார்..

“உங்க மகன்தான்….” வெட்கத்துடன் சொல்லிவிட்டு பத்மினி மின்னலாய் ஓடி விட்டாள்..

“பத்மினிக்கு எப்பவும் சுரேஷ் ஞாபகம்தான்….அடிக்கடி என் கிட்டே கேட்டுட்டே இருப்பா… படிப்பு முடியாட்டி கூட என்ன.. நீங்க சரின்னு கல்யாணம் செஞ்சுடலாம்….” மாமா முகமெல்லாம் புன்னகையாய் சொன்னார்…

“ஒரு வருஷம் பொறுத்துக்குங்க அண்ணா…. சுரேஷுக்கு பத்மினி, பத்மினிக்கு சுரேஷுன்னு எப்பவோ முடிச்சு போட்டாச்சு… இனிமேல் அது மாறவா போகுது….” கிரிஜா ஆன்ட்டியும் ஒத்து ஊதினார்கள்… நான் இதில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லாத மாதிரி காட்டிக்கொண்டேன்….