விளம்பர பட வாய்ப்புக்காக! 55

அவனோ இட்ஸ் ஓகே மேடம். இந்த டைம் நமக்கு சான்ஸ் அமையல, நாம ப்யூச்சர்ல சேந்து பண்ணலாம் என நன்றி சொல்லி புறப்பட தயாரானான். அவளும் அமைதியாக இருந்தாள்.

அவளுக்கும் ஷாட்டிற்கு நேரமாகி விட்டது அதனால் அதற்கு செல்ல அவளும் தயாரானாள்.

அவளின் அஸிஸ்டன்ட் பெண்ணை அழைத்தாள். ஓகே தீபக் கீப் இன் டச். ஆல் த பெஸ்ட் பார் யுவர் ப்ராஜக்ட் என மரியாதை நிமித்தமாக நாகரீகமாக சொன்னாள். தீபக் அதை கேட்டு முகம் மலர்ந்து தலையசைத்து எழுந்தான்.

அதே சமயம் உதவி இயக்குநர் ஒருவன் அங்கு வந்தான். மேடம் உங்களுக்கு இப்ப ஷாட் இல்லை. மாறிடுச்சு.. வேற ஷாட்ஸ் வேற கேரக்டர்ஸ் வச்சி எடுத்து முடிச்சிட்டு தான் நீங்க சோ ஒன் அவர் ஆகும். நீங்க ரெஸ்ட் எடுங்க. நானே வந்து ரெடியானதும் சொல்றேன் என சொல்லி விட்டு சென்றான்.

தீபக்கும் அதை கவனித்து அங்கேயே நின்றான். அவளுக்கும் எதிர்பாராத ஒரு ப்ரேக் கிடைத்ததில் என்ன செய்ய அதுவரை என யோசனை. அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குள் மீண்டும் உரையாடல் தொடரும் சாத்தியம் தெரிந்தது.

“தீபக் நீங்க வேற என்ன விளம்பரங்கள் எல்லாம் எடுத்து இருக்கீங்க, சாரி எனக்கு உங்கள இதுக்கு முன்னாடி அறிமுகம் இல்லை அதனால தெரியல” என பேச்சை தொடர்ந்தாள் ரத்திக்கா.

“அது பரவாயில்லை மேடம். நான் ஒண்ணும் அவ்வளவு பேமஸ் இல்லை. இப்ப தான் அப்கமிங்” என சொல்லிக் கொண்டே தன் ஐ போனை எடுத்தான் தீபக். மீண்டும் அவள் அருகில் அமர்ந்து தன் போனில் அவன் ஏற்கனவே எடுத்த சில விளம்பர க்ளிப்பிங்குகளை காட்டினான்.

ரத்திக்கா அதை வாங்கி பார்க்க ஆரம்பித்தாள்.. நல்ல தரத்தில் பல வெரைட்டியான விளம்பரங்கள், நல்ல க்வாலிட்டியாக எடுக்கப்பட்டு இருந்தது. ரத்திக்கா இன்ட்ரஸ்டாகி இன்னும் பார்த்தாள். டைமன்ட் நகைக்கடை விளம்பரம், ஹை க்ளாஸ் ரிஸார்ட் விளம்பரம், சில எலைட் கல்யாண பேமிலி ஷீட் வீடியோக்கள், வாட்ச் விளம்பரம், கார் ஷோரூம் விளம்பரங்கள் என கலவையாக இருந்தது. பெரும்பாலும் மலையாளம், கன்னடம் விளம்பரங்கள். அதனால் தான் அவனை பற்றி அவளுக்கு அறிமுகமில்லை என நினைத்து கொண்டாள். ஆல்பம் சாங் வீடியோ கூட ஒன்று அதில் இருந்தது. அனைத்தையும் பார்த்து முடித்தாள் ரத்திக்கா.

“இன்ட்ரஸ்டிங்.. கொயட் நைஸ் தீபக்” என உண்மையிலேயே அவன் திறமையை பார்த்து இம்ப்ரஸாகி சொன்னாள். அவன் பதிலுக்கு தேங்க்ஸ் சொன்னான்.

அவன் போனை திருப்பி கொடுத்த படியே, “இப்படி பட்ட கமர்ஷியல் விளம்பரங்கள் எடுத்துட்டு இன்னர்வியர்ஸ் அட் பக்கம் வந்து இருக்கிங்களா ஆச்சர்யமா தான் இருக்கு தீபக்” மீண்டும் இயல்பாக பேச ஆரம்பித்தனர் அவர்கள் இருவரும்.

“மேடம் இது இன்டர்நேஷனல் விளம்பர வாய்ப்பு மேடம். இது ஃபாரின் ப்ரான்ட் இன்னர்வியர் ஆக்சுவலி” என்றான் தீபக்.

“வாட் என்ன சொல்றிங்க தீபக், ஒரு பாரின் விளம்பர சான்ஸா எனக்கு ஆஃபர் பண்றிங்க” ஆச்சரியத்துடன் கேட்டாள் அவள்.

“ஆமா மேடம் இது ஒரு வெளிநாட்டு ப்ரான்ட், வெளிநாட்டுல தான் சேல்ஸ் பண்ணவும் போறாங்க.. இங்க இல்ல. ஒரு பாரின் விளம்பர வாய்ப்பை விடக்கூடாதுனு தான் நானே பண்றேன். இது பெரிய ப்ராஜக்ட் மேடம் அதனால தான் உங்கள மாதிரி ஒரு செலிபிரட்டி கிட்ட வந்தேன்” என்றான் அவன்.

அவளுக்கு அது உண்மையிலயே சர்ப்ரைஸ் செய்தியாக இருந்தது. அதில் ஆர்வம் எழுந்தது.

“பாரின் பிரான்ட் இன்னர்வியர் இங்க நம்ம ஊர் ஆட்கள் வச்சி விளம்பரம் எடுக்கறாங்களா” என ஆச்சர்யத்துடன் கேட்டாள்.