டிரைவர் டிஃபன் கொண்டு வர எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். பிறகு ஆஷிஷும் பூஜிமாவும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர். வீட்டு வெளியே வர. அருகிலுள்ள வீட்டின் முன் புவனாவும் அவள் கணவன் முருகனும் நின்றுகொண்டு இருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் அருகில் வந்தனர். எங்களுக்கு வணக்கம் வைத்தனர். என்னைவிட ஆஷிஷ்க்கு முருகன் பெரிய வணக்கம் வைத்தான்.
என்னம்மா… என்ன முருகன்… ரெண்டு பேரும் திடீர்னு லீவ் போட்டீங்க…? உடம்பு சரியில்லயா? – ஆஷிஷ்
இல்ல சார்… வீட்டுல கொஞ்சம் பிரட்சனை… இவளுக்கும் அம்மாவுக்கும்… அதான்… – முருகன்
யார்க்குதான் பிராப்ளம் இல்ல… எல்லாருக்கும் இருக்கு… அதுக்காக லீவ் போட்டு வீட்டுல முடங்குனா ஆச்சா… வெளிய வந்தா மனசு உடம்பு எல்லாம் சரியாயிடும்… இன்னயிலருந்தே வேலைக்கு வரப் பாருங்க… – ஆஷிஷ்
இதான் ஆஷிஷ். ஈஸியா ரெண்டு பிரட்சனைக்கு தீர்வு கொடுத்துவிட்டான். முருகன் வீட்டில் இருப்பது எங்கள் திட்டத்துக்கு இடைஞ்சல். புவனா மனசளவில் மீண்டு வந்தால்தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும். இரண்டுக்கும் தீர்வு சொல்லிவிட்டான்.
ஆஷிஷ் கோவையை நோக்கி காரை ஓட்டியபடி, ஜன்னலுக்கு வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தான். பூஜிமா அவனுக்கு அருகில் லூஸ் ஹேர் விட்டிருந்த தன் முடியை கோதிவிட்டபடி உட்கார்ந்திருந்தாள். எஃப் எம்மில் காதல் பிசாசே பாடல் ஓடிக் கொண்டிருந்தது.
மாமா… உங்களுக்கு அக்கா மேல எப்பருந்து லவ்? எத்தன வருஷமா லவ் பண்ணீங்க? லவ்வ சொன்னதும் அவ ரியாக்ஷன் எப்படி இருந்துச்சி்? – பூஜிமா
ஆஷிஷ் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி,
என்ன பூஜ்? நீ யாரயாவது லவ் பண்றியா? யாரவன்? உன் கிளாஸ்மேட்டா?
ஏன் கேட்கறீங்க? – பூஜிமா
இல்ல… திடீர்னு எங்க லவ்வ பத்திலாம் கேட்கறியே? அதான் நீ லவ் பண்றியோன்னு கேட்டேன்… – ஆஷிஷ்
அதெல்லாம் இல்ல… நான் இப்ப ஸ்ட்டீஸ்லதான் கான்சண்ட்ரேட் பண்றேன்… உங்கள கேட்டதுக்கு காரணம் இருக்கு… அத கடைசில சொல்றேன்… – பூஜிமா
ம்ம்ம்… நான் உங்கக்காவ 6 இயர்ஸா லவ் பண்ணேன்… அப்றம் அவளுக்கு புரப்போஸ் பண்ணன்… டூ இயர்ஸ் ரெண்டு பேரும் ஒன்னா சுத்துனோம்… அப்றம் மாமாகிட்ட சொல்லி… 2 இயர்ஸ் ஆயிடுச்சு… தட்ஸ் ஆல்… – ஆஷிஷ்
ஓ அப்ப… ஒன் சைட் லவ் 6 இயர்ஸ்… ஓகே லவ் 2 இயர்ஸ்… மேரீட் லவ் 2 இயர்ஸ்… 6+2+2 டோட்டல் 10 இயர்ஸ்.. இல்லயா? – பூஜிமா
ஆமாம்… – ஆஷிஷ்
அப்ப இருந்த லவ்… டிவிலலாம் எதோ சொல்வாங்களே கெமிஸ்ட்ரி… அது இப்பவும் இருக்கா மாமா… உங்க ரெண்டு பேர்க்குள்ள… – பூஜிமா
ஆஷிஷ் எதற்கு திடீரெனக் கேட்கிறாள் என அர்த்தம் புரியாமல்,
டெஃபனட்லி… ஏன் பூஜ் கேக்குற? பூஜா எதுவும் சொன்னாளா?
இல்ல.. அவள்லாம் ஒன்னும் சொல்லல… சும்மாதான் கேட்டேன்…– பூஜிமா
நோ… நோ… நீ சும்மா பேசுற ஆள் இல்ல… எதுனாலும் சொல்லு… – ஆஷிஷ்
