கண்ணாமூச்சி 6 72

“ஐயோ.. விடுங்கத்தான் ப்ளீஸ்..!!”

அவனை சமாளிக்க ஆதிரா திணறினாள்..!! ஒருவழியாக.. விஷயம் முழுதாக புரியாமலே.. ‘நான் அவகிட்ட பேசி புரிய வைக்கிறேன்.. நீங்க கெளம்புங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்.. ப்ளீஸ்த்தான்.. ‘ என்று சொல்லி.. முகிலனை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டாள்..!!

“இந்த உருட்டல் மெரட்டல்லாம் உங்கவீட்டு வேலைக்காரங்கட்ட வச்சுக்கங்க.. இதுக்குலாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. நான் நெனச்சத முடிக்காம விட மாட்டேன்.. என்ன பண்றீங்கன்னு பாக்கலாம்..!!” அவன் செல்லும்வரை பதிலுக்கு பதில் பேசிக்கொண்டேதான் இருந்தாள் தாமிரா.

“அந்தக்கட்டுரை எப்படி வெளில வருதுன்னு பாக்குறேன்..!! சொல்லி வை அவகிட்ட..!! பொம்பளையா அடக்கஒடுக்கமா பொத்திக்கிட்டு இருக்க சொல்லு.. அப்படியே கோழிக்குஞ்சை திருகுற மாதிரி கழுத்தை திருகிப் போட்ருவேன்..!!” தீவிரமான குரலில் ஆதிராவிடம் எச்சரிக்கை செய்துவிட்டே காரில் கிளம்பினான் முகிலன்.

அன்று வீட்டிற்கு சென்றதும், அக்காவிற்கு விஷயத்தை விளக்கி சொன்னாள் தாமிரா..!!

“குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதுலாம் பொய்க்கா.. அவ ஒரு பாவப்பட்ட ஜீவன்..!! அந்தஸ்து, குடும்ப கௌரவம்ன்ற பேர்ல.. நூறு வருஷம் முன்னாடி.. நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க அந்தப்பொண்ணுக்கு ஒரு பெரிய கொடுமையை பண்ணிருக்காங்க..!!”

தனது மேஜை ட்ராவில் இருந்து ஒரு பழுப்பேறிய காகிதைக் கற்றையை எடுத்து தூக்கிப் போட்டாள்..!!

“இதை படிச்சு பாரு.. நான் சொல்றது உண்மைன்னு புரியும்..!!”

“என்ன இது..??”

“நம்ம தாத்தாவோட அப்பா அந்தக்காலத்துல எழுதின டைரி இது.. குறிஞ்சியோட உண்மைக்கதை அவருக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு.. டைரில அங்கங்க அந்தக்கதையை கிறுக்கி வச்சிருக்காரு..!! இத்தனை நாளா.. தாத்தா வீட்ல.. யாருக்கும் தெரியாம பழைய பெட்டிக்குள்ள கெடந்திருக்கு.. போன வாரந்தான் என் கைல மாட்டுச்சு..!!”

முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்த தாமிரா.. அடுத்ததாக ஆராய்ச்சி பட்டப்படிப்பை மேற்கொள்ள நினைத்திருந்த சமயம் அது..!! தனது ஆராய்ச்சிக்கு தகுந்த கருப்பொருளை தீர்மானிக்க.. அவள் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில்தான்.. அவளது கையில் இந்த குறிப்பேடு சிக்கியது..!! தனது ஆராய்ச்சியின் கருவாக குறிஞ்சியை முடிவு செய்தாள்.. அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கியிருந்தாள்..!!

தங்கை தந்த காகிதக் கற்றைகளை படித்து முடிக்க.. ஆதிராவுக்கு இரண்டு மணி நேரம் ஆனது..!! அதன் பிறகுமே.. தாமிரா சொன்ன விஷயங்களில் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை பிறக்கவில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *