அசுரன் Part 20 28

“எனக்கு தெரியும் நீ பதில் சொல்லு.”

“அவளை பார்த்ததால் எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை செல்லம். நான் உன்கிட்ட எந்த விஷயத்தையும் மறைச்சது கிடையாது. ஆனால் அவ தான் என் முன்னாள் காதலி என்று சொன்னால் உன் மனசு வருத்தப்படுமே..!என்று தான் நான் சொல்லாம மறைச்சேன். அது தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. இப்போ அதுவும் உனக்கு தெரிந்து விட்டதால் எனக்கு அந்த வருத்தம் கூட போய் விட்டது.

“டேய் நான் அவளை நாளைக்கு நம்ம வீட்டு கிரஹ பிரவேசத்திற்கு கூப்பிட்டு இருக்கேன்.”

“வரட்டுமே சஞ்சு, என் முன்னாள் காதலியாக அல்ல.உன்கிட்ட வேலை செய்யும் தொழிலாளியாக மட்டுமே அவள் வரட்டும்.”

ராஜாவின் மொபைல் சஞ்சனா குரல் ரிங்டோனில் பாடி அழைத்தது.

“யாருடா போனில்,”

“அம்மா தான் கூப்பிடறாங்க சஞ்சனா..”

“சரி எடுத்து பேசு,”

ராஜா போனில்”ம் சொல்லும்மா”

“ஏண்டா நீ மட்டும் போய் பொருட்களை வாங்கி வா என்று சொன்னால் பாவம் புள்ளைதாச்சி பொண்ணை வெயிலில் கூட்டிட்டு போய் இருக்கியா”

ராஜா பதிலுக்கு “இல்லம்மா,நீ தான் வெளியே காற்றாட கூட்டிட்டு போக சொன்னதா சஞ்சனா சொன்னாம்மா”

“அத்தை அவர் பொய் சொல்றாரு, நான் மாட்டேன் என்று சொல்லியும் அவர் தான் வலுக்கட்டாயமாக என்னை வெளியே கூட்டிட்டு வந்தார்” என்று சஞ்சனா கத்தினாள்.

“அடிப்பாவி ஏண்டி இப்படி பொய் சொல்ற”, என்று ராஜா கேட்க சஞ்சனா உதட்டை சுழித்து பழிப்பு காட்டினாள்.

“டேய் என் மருமகளை ஒழுங்கா பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு உடனே வா உனக்கு பூஜை இருக்குது.”என அவன் அம்மா அவனை திட்ட

“அம்மா, அவ சும்மா விளையாடுற.நீ அவளை நம்பாதே. நான் உன் பையன், நான் பொய் சொல்வேனா..!

“இல்ல அத்தை, உங்க கிட்ட இப்போ சொன்னதுக்கு என்னை தொடையில் கிள்ளுறாரு”. சும்மாவே” அய்யோ அம்மா வலிக்குதே” என்று சஞ்சனா கத்தினாள்.

இருவரின் விளையாட்டை பார்த்து அனுவுக்கு சிரிப்பு வந்தது..

“டேய் வளர்ந்து கெட்டவனே,அவமேல ஒரு அடி பட்டிச்சு.. உனக்கு வீட்டில் விளக்குமாறு பிஞ்சிடும். ஒழுங்கா வீடு வந்து சேரு”என்று அவன் அம்மா கத்தினார்.

“சரி கூட்டி வரேன் அம்மா, அங்கே என்ன சாரா அழுவுற சத்தம் கேட்குது.”

“அது அவங்க அப்பனை கேட்டு அழுவுது,சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு…”

“சரி போனை சாராவிடம் கொடும்மா..”

“ஹாய் சாராகுட்டி,அப்பா உனக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட் வாங்கிட்டு வந்திட்டு இருக்கேன்.அதுவரை அழாம சமர்த்தா இருக்கணும்.சரியா” என்று கொஞ்சினான்.

“ம் சரிப்பா”என்று மழலை குரலில் சொன்னது..

அதுவரை இந்த அப்பா தரும் முத்தத்தை வச்சிக்க என்று போனில் “ம்ம்மா ம்ம்ம்மா” என்று அழுத்தி முத்தம் கொடுத்தான்.

” வா சஞ்சனா உடனே வீட்டுக்கு போலாம்”ராஜா அவசரப்பட

“டேய் இருடா என்ன அவசரம்? பொண்ணு குரல் கேட்ட உடனே சுடுதண்ணீர் பட்ட மாதிரி அப்படியே குதிக்கிற.நீ முதலில் எனக்கு தான் சொந்தம்.அப்புறம் தான் பொண்ணு. என்னை விட அதிகமா அவ மேல பாசம் வைச்ச அவ்வளவு தான் நீ..”

“ஏண்டி போட்டி போடுகிற நேரமா இது. இதோ இப்போ ரெண்டாவது ஆண் குழந்தை தான் பிறக்க போவுது. அப்புறம் பாரு நீ என்னை கண்டுக்க கூட மாட்டே.”

“அப்பகூட நீ தான் எனக்கு முதல் குழந்தை. உனக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே..”

“அதையும் பார்க்கத்தானே போறேன்…!சரி நம்ம பொண்ணை விட உன் மேல தான் எனக்கு பாசம் அதிகம் போலாமா சஞ்சு?”