அசுரன் Part 20 28

மதியம் அனு ஸ்கூட்டரில் பக்கத்தில் உள்ள சூப்பர் மார்கெட் சென்றாள்.காத்தவராயன் ஆவியும் அவளை பின்தொடர்ந்து சென்றது..ஆனால் போகிற வழியில் அம்மன் கோவில் வந்தது..சித்திரை மாதம் கோவில் விசேஷம் காரணமாக பொங்க வைத்து கூழ் ஊற்றி கொண்டு இருந்தனர்..அம்மன் வீதி உலா எதிரில் வர காத்தவராயன் ஆவி திடுக்கிட்டு நின்றது.ஆனால் அனு தொடர்ந்து முன்னேறி செல்ல ஆவியால் பின்தொடர முடியாமல் போனது..

அனு சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கும் பொழுது சப்பென்று யாரோ கன்னத்தில் அறையும் சத்தம் கேட்டது…

அனு ஓடிவந்து எட்டிபார்க்க,அங்கே இரு பெண்கள் நின்று கொண்டு இருந்தனர்.அவர்கள் இருவர் பேசி கொண்டு இருந்ததை அனு கேட்க நேர்ந்தது.

அவர்கள் இருவர் யார் என்பது என்னோட இன்னொரு கதை “நினைவோ ஒரு பறவை”படித்தவர்களுக்கு புரியும்.ஆம் அந்த இருவர் சஞ்சனா,சுஜிதா தான்.

“இப்போ நான் ஏன் உன்னை அறைந்தேன்? ஏன் முத்தம் கொடுத்தேன் என்று உனக்கு புரியல இல்லை” என சஞ்சனா கேட்க சுஜிதா மலங்க மலங்க புரியாமல் விழித்தாள்.

உன் புருஷன், உனக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால், விரட்டி விட்டான் என்று தானே என்கிட்ட வந்து வாழ வழி கேட்டு வேலை கேட்டே.அதுக்காக நான் உனக்கு வேலை கொடுத்தேன் என நினைச்சியா..!ஒரு காலத்தில் என்னவன் உன்னை நேசிச்சி இருக்கான். அதுக்காக தான்.ஆனால் நீ என் புருஷன்கிட்ட இருக்கும் சின்ன குறையை நீ கிண்டல் பண்றீயா. தொலைச்சிபுடுவேன். அவன் சுத்த தங்கம். ஒரு சின்ன கீறல் இருந்தாலும் அந்த தங்கத்தின் மதிப்பு குறைவது இல்லை.அவன் வேகத்திற்கு குறைந்தபட்சம் உன்னால் நடக்க முடியுமா?அவன் இப்போ இருக்கிற கம்பெனியில் ASM ஆயிட்டான். அதுவாவது உனக்கு தெரியுமா? கூடிய விரைவில் மேனேஜர் ஆக போறான். அவனோட மாச சம்பளம் மட்டும் மாதம் 1 லட்ச ரூபாய்க்கு மேல். உன்னோட சம்பளத்தை விட 7 மடங்கு. அது தவிர இப்போ நீ வேலை செய்கிற எங்க கம்பெனியில் இருந்து வரும் லாபம் மட்டும் மாதம் 2 லட்ச ரூபாய்க்கு மேல்.ஆக மொத்தம் மாத வருமானம் அவன் சம்பாதிப்பது 3 லட்ச ரூபாய். இதை நான் ஏன் உனக்கு சொல்கிறேன் என்றால் எந்த பணத்திற்காக அவனை விட்டு போனாயோ அதை விட இப்போ அவன் அதிகமாக சம்பாதிக்கிறான்.நீ வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளியோட எஜமானன் ..!be careful.

சுஜிதா கலக்கமுடன்” மேடம் நான் அவனோட முன்னாள் காதலி என்று எப்படி உங்களுக்கு தெரியும்..?

“நீ என் கம்பெனியில் வேலை கேட்டு வரும் போதே எனக்கு தெரியும். தெரிந்தும் தான் நான் உன்னை சேர்த்தேன்.அவனுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி, உன்னோட பேர் எல்லாம் என்கிட்ட சொல்லி இருக்கான். ஆனா உன்னோட ஃபோட்டோவை அவன் காண்பிக்கல.நானும் அவன்கிட்ட கேட்டு கஷ்டப்படுத்த விரும்பல.ஆனா உன்னோட ஃபோட்டோ வேறு வழியில் எனக்கு கிடைத்தது. உன்னோட ஞாபகம் கொஞ்சம் கூட அவனுக்கு வரக்கூடாது என்று தான் நீ இங்கே வேலை செய்யும் விசயத்தை கூட அவன் கிட்ட சொல்லவில்லை.

மேடம்,அடிச்சீங்க ஓகே.ஆனா ஏன் எனக்கு முத்தம் கொடுத்தீங்க..என கேட்க

அது எதுக்கு என்றால், ஒருவேளை நீ அவனை விட்டு போகாமல் இருந்திருந்தால் அவன் எனக்கு கண்டிப்பாக கிடைத்து இருக்க மாட்டான். அதுக்கு தான். கொஞ்சம் கூட ஈகோ கிடையாது. குழந்தை மனசு அவனுக்கு.எங்கேயும் என்னை விட்டு கொடுக்கவே மாட்டான். எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வீட்டில் செய்கிறான்.எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவன்..!
அவன் எனக்கு கிடைத்தது என் அம்மாவே எனக்கு திரும்ப வந்தது போல் இருக்குது.நீ கார்,வீடு இது இல்லை என்று தானே அவனை விட்டு போனே. இப்போ அவன்கிட்ட கார் இருக்கு. எங்கள் இருவரின் இரண்டு வருட உழைப்பில் நாங்கள் சம்பாதித்தது,அவன் சொந்த ஊரில் உள்ள வீடு விற்று வந்த பணம், மற்றும் ஷேர் மார்கெட்டில் அவனுக்கு வந்த லாபம் 15 லட்சம் எல்லாம் சேர்த்து நாங்க ஆசையா ஒரு வீடு கட்டி இருக்கோம். சொந்த வீடும் வந்தாச்சு.அந்த வீட்டின் கிரஹ பிரவேசம் நாளை தான்.அவன் கண்ணில் நீ படக்கூடாது என்று நினைத்தேன்.ஆனால் பட்டுட்டே.போனால் போகுது நாளை நடக்கும் கிரஹபிரவேச விழாவில் மட்டும் கலந்து கொள். அது தான் நீ ராஜாவை கடைசியாக பார்ப்பதாக இருக்க வேண்டும்.அப்புறம் உன் நிழல் கூட அவன் மேல் படக்கூடாது.புரிஞ்சுதா?என சஞ்சனா அதட்டினாள்.

“ம்” என அமைதியாக சுஜிதா தலை ஆட்டினாள்.

சஞ்சனா பேசி விட்டு ராஜாவிடம் வந்தாள்.

“என்ன சஞ்சு,இவ்வளவு நேரம்?பொருட்கள் வீட்டுக்கே டெலிவரி பண்ண சொல்லிட்டேன். போலாமா?”என்று கேட்க,

“ம் போலாம்” என்று ராஜா கைபிடித்து நடந்து கொண்டே “என்னடா உன் தோழி பற்றி எதுவும் கேட்காமல் நடந்து வர” சஞ்சனா கேட்டாள்..

சஞ்சனா மற்றும் ராஜா இருவரை அனு பின்தொடர்ந்தாள்..

“அது தான் என் எஜமானி நீ பேசி இருப்பியே.நீ பேசினா என்ன, நான் பேசினா என்ன, எல்லாம் ஒன்னு தான்.”ராஜா சொல்ல

“அப்படியா..!அப்போ ஏன் உன் முகம் வாட்டமா இருக்கு கண்ணா..”

“இல்லையே அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் கிடையாது சஞ்சு.”ராஜா மறுத்தான்.

“டேய் என் ராஜாவை பற்றி எனக்கு தெரியாதா? உன் முன்னாள் காதலியை பார்த்ததால் தானே மூஞ்ச இப்படி தூக்கி வச்சு இருக்கே”என்று சஞ்சனா கேட்ட உடனே ராஜா அதிர்ச்சி அடைந்தான்.

“உனக்கு எப்படி தெரியும் சஞ்சனா?”