“அதை இப்பவே prove பண்ணு கண்ணா…”
“எப்படி prove பண்ணனும் நீயே சொல்லு சஞ்சனா”
“நம்ம பொண்ணுக்கு ஃபோனில் கொடுத்ததை எனக்கு இப்ப இங்கேயே கொடு..”
“இங்கேயா..ஒரு சில பேர் நம்மை வேடிக்கை பார்க்கிறாங்கடி..வீட்டுக்கு வாடி கண்டிப்பா தரேன்..”
“யாரு பார்த்தா எனக்கென்ன..?நீ என் புருஷன்.எனக்கு இப்ப இங்கேயே நீ முத்தம் கொடுத்தால் தான் வருவேன் என சஞ்சனா தன் கன்னத்தை காட்டினாள்..”
அவள் நெற்றியில் இருந்த முடியை விரலால் சுருட்டி கொண்டு அவள் நிலவு முகத்தை பார்த்து கொண்டே “அன்று காதல் பண்ணியது,உன் கன்னம் கிள்ளியது,அட இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது”என அவள் கன்னத்தில் முத்தம் இட்டான்..சஞ்சனா மெல்லிய சிரிப்புடன் மறு கன்னத்தை காட்ட அங்கும் முத்தமிட்டான்..
“இப்ப போலாமா தேவி..”
“என்னை தூக்கிட்டு போடா..”என சஞ்சனா கைகளை நீட்ட, நிறைமாத நிலவான சஞ்சனாவை தூக்கி கொண்டு ராஜா சென்றான்..
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அனுவின் கண்களில் கண்ணீர் சிந்தியது.
“என்ன அழகான couples..ஒருவர் மேல் ஒருவர் எப்படி அன்பு வைத்து உள்ளார்கள்.அந்த பெண் அவள் கணவன் மீது எவ்வளவு லவ் வைத்து இருக்கிறாள்.காதலித்து கரம் பிடித்து அவன் வாழ்வையே முன்னேற்றி இருக்கிறாள்.அந்த பெண் போல தானே நானும் என் கணவனுடன் வாழ ஆசைப்பட்டேன்..ஆனால் இப்போ என் கணவனுக்கு துரோகம் இழைத்து விட்டேனே….எப்படி என் கணவர் முகத்தில் விழிப்பேன்.?அவருடன் எப்படி காலம் முழுக்க வாழ முடியும்?இந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்று விடாதா…”என மனதுக்குள் புழுங்கினாள்.
இதற்கு மேல் நான் உயிர் வாழவே கூடாது என சாலையில் குறுக்கில் நடந்து சென்றாள்..தண்ணீர் லாரி வேகமாக ஒலி எழுப்பி கொண்டு வந்தாலும் அனு கண்டு கொள்ளவே இல்லை..
அங்கே வந்த இருவர் அனுவின் கைபிடித்து சாலை ஓரம் இழுக்க கணநேரத்தில் அனு உயிர் தப்பினாள்..
