அசுரன் Part 18 47

“தல உங்க கையில் பாருங்க இரத்தம் வருது..வாங்க உடனே பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் போகலாம்…”

“டேய் அந்த சின்ன பொண்ணு வந்து மோதியதால்,அவ வளையல் கீறி இரத்தம் வருது.சின்ன காயம்..! அவ்வளவு தான்,வா கிளம்பலாம்..”

” தல.. அப்புறம் செப்டிக் ஆகிட போகுது,வாங்க நாம ஹாஸ்பிடல் போகலாம்..”

“சரி வந்து தொலை.”கஜா அவனுடன் கிளம்பினான்.

ரவுடி கஜா மற்றும் அவன் அடியாள் பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் சென்றனர்..

“டேய் நீ போய் டோக்கன் வாங்கிட்டு அங்கேயே வெயிட் பண்ணு..நான் வரேன்..”

“எங்கே தல போறே..”

“பாத்ரூம் போய்ட்டு வரேன்டா.”

“சரி தல…”

கஜா அவசரமாக சென்றான்..

பாத்ரூம் உள்ளே நுழையும் போது,கண் பார்வையற்ற ஒருவன் எதிரே வந்து முட்டி கொண்டான்

“சார்…”என தடுமாறி அவன் கீழே விழ கஜா அவனை தாங்கி பிடித்தான்..

“ஏம்ப்பா கண் தெரியல என்றால்,கூட ஒரு ஆளை கூட்டிட்டு வர மாட்டாயா ?”கஜா கேட்க

“இன்னிக்கு யாரும் என் கூட யாரும் வரல சார்..எனக்கு ஒரு உதவி செய்யுங்க..இங்கே பாத்ரூம் பக்கத்தில் ஒரு staff ரூம் ஒன்னு இருக்கு.என்னை அங்கே கூட்டி போக முடியுமா?அங்கே பாத்ரூம் போகனும்..”

“அங்கே ஏம்ப்பா..இங்கேயே பாத்ரூம் இருக்கே..”

“இல்ல சார்..இது பப்ளிக் பாத்ரூம்..இங்கே அசிங்கம் கண்ட இடத்தில் பண்ணி வச்சி இருப்பாங்க.எனக்கு கண்ணு தெரியாததால் நான் தெரியாம காலில் மிதிச்சிடுவேன்.அதுவே பக்கத்தில் ஸ்டாப் ரூம் பாத்ரூம் என்றால் கொஞ்சம் க்ளீன் ஆக இருக்கும்..அங்கே கூட்டி போங்க..பிளீஸ்…”

கஜாவும் அங்கே கூட்டி போனான்..அந்த அறையில் யாரும் இல்லை..

கண் பார்வை அற்றவன் கஜாவிடம்”சார் இந்த தடி,கண்ணாடி மட்டும் வச்சிக்கங்க.நான் பாத்ரூம் போய்ட்டு வந்து வாங்கிக்கிறேன்.”என அவன் சுவற்றை பிடித்து கொண்டு உள்ளே போனான்..

கஜா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அங்கே கிடந்த ஒரு டேபிளில் உட்கார்ந்து கொண்டு,குருடன் கொடுத்த கருப்பு கண்ணாடியை போட்டு கொண்டான்..

அப்பொழுது யாரோ ஒருவர் பாடி கொண்டே உள்ளே வரும் சத்தம் கேட்டது..

“என்னுடைய தேகம் இது
எங்கே எப்போ வெட்கப்படும் என்னை ஒருவாட்டி கேளு,
அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை அறியனுமா அதுக்கு இதுதான்டா ஸ்கூலு..”
என பாடிக்கொண்டே லிகிதா உள்ளே நுழைந்தாள்.