“வேண்டாம் மன்னா,இளவரசி ஜாதகம் என்னிடம் ஒரு பிரதி உள்ளது.அதை கையோடு எடுத்து வந்து உள்ளேன்..”
ஜோசியர் மதிவதனி ஜாதகத்தை ஆராய்ந்தார்.கைகளால் எண்ணி கணக்கு போட்டார்.அவர் முகம் இருண்டது.அதை பார்த்து மன்னரும்,அமைச்சரின் முகம் கவலையில் ஆழ்ந்தது..
“என்ன ஆயிற்று ஜோசியரே..”மன்னர் பயத்துடன் கேட்க
“எல்லாமே நடந்து முடிந்து விட்டது மன்னா”
அவர் சொல்வதின் அர்த்தம் புரியாமல்”என்ன சொல்கிறீர்கள் ஜோசியரே,கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்”மன்னர் படபடத்தான்.
“காத்தவராயன்,இளவரசி கூடல் நடந்து முடிந்து விட்டது மன்னா..அவன் வாரிசை,இளவரசி சுமந்து கொண்டு இருக்கிறார்.”
மன்னன் இடிந்து போய் உட்கார்ந்தான்..
ஜோசியர் மேலும்,”மன்னா,இவை எல்லாம் முன்பே நிகழும் என்று நான் சொல்லி இருந்தேனே..காத்தவராயன் வாரிசை மதிவதனி சுமக்க வேண்டும் என்பது விதி.அந்த குழந்தை ஜனிக்கும் நட்சத்திரம் தான் அவனுக்கு இறப்பை கொண்டு வர போகிறது.இளவரசி கைகளால் தான் அவன் கொல்லப்பட வேண்டும் என்பது தான் விதி என எல்லாம் கணித்து முன்பே சொல்லி இருந்தேனே..”
“உண்மை தான் ஜோசியரே,ஆனால் என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது.ஒரு அரக்கனின் வாரிசை என் மகள் சுமப்பதா.. என்று என் மனம் கவலையுறுகிறது.”
மன்னன் தீடீரென கொதித்து எழுந்தான்..
“இல்லை நான் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.அவன் வாரிசை மதிவதனி சுமக்கும் பட்சத்தில் என் மகளாக இருந்தாலும் அவளை கொல்லவும் நான் தயங்கமாட்டேன்.. அமைச்சரே நான் சொல்வது போல் உடனே குந்தவை நாட்டுக்கு ஒலை அனுப்புங்கள்.மாயமலை மீது நாம் போர் தொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது..”
“மன்னா”என அமைச்சர் அதிர்ந்தார்..
ஜோசியர் மனதுக்குள்”மன்னா,உங்கள் பெண்ணே உங்களுக்கு எதிராக செயல்பட போகிறாள்..”என முணுமுணுத்தாறே கிளம்பி விட்டார்.
“போர் நடக்குமா..!மதிவதனி எப்படி அவள் தந்தையே எதிர்ப்பாள்..?அனைத்தும் அனுவின் பாகத்திற்கு பின்…
